Sunday, October 23, 2011

தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:


தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:


உலகிலேயே மிகப் பெரிய உயிர்த் தாவரம் எது?
உலகிலேயே உள்ள மிகப் பெரிய உயிர்த் தாவரம் காளான்தான்.
ஒரு மரத்தின் மேல்புறத்தில் தேன் காளான் வளர்வதை நீங்கள் பார்த்திருக் கலாம்.
ஒரிகான் மாநிலத்தில் உள்ள மல்ஹேர் தேசிய பூங்காவில் உள்ள காளான்தான் மிகப் பெரியதாகும். இது 890 ஹெக்டேர் (1,200 ஏக்கர்) பரப்பில் படர்ந்துள்ளது. அதன் வயது 2,000 லிருந்து 8000 ஆண்டு வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காளானின் பெரும் பகுதி நிலத்துக்கு அடியில் மறைந்திருக்கிறது. தனது மாபெரும் கைகளான வெள்ளை மைசீலியத்தை (மரங்களுக்கு வேர் போன்றது இது) அது பெரும் பரப்பில் பரப்பியுள்ளது. இவைமரங்களுக்கு அடியில் பரவும்போது, மரங்கள் இறந்து போகும். நிலத்துக்கு அடியில் உள்ள இந்தக் காளான் சில இடங்களில் நிலத்துக்கு மேல் எட்டியும் பார்க்கும். அப்போது பார்க்கும்போது ஏதும் கேடு விளைவிக்காத தேன் காளானைப் போல அது தோற்றமளிக்கும்.
காடு முழுவதிலும் தனித் தனி அடுக்குகளாக இந்த ஒரிகான் காளான் வளர்வதாகத்தான் முதலில் ஆய்வாளர்கள் நினைத்திருந்தனர். ஆனால்,  உலகிலேயே மிகப் பெரிய ஒரே உயிர்த் தாவரமான இது மண்ணுக்கு அடியில் ஒட்டியுள்ள ஒரே காளான்  என்பதை ஆய்வாளர்கள் இப்போது உறுதிப்படுத்தி உள்ளனர்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...