மக்கள் இந்த ஆட்சியை எந்த அளவுக்கு ஏற்கிறார்கள்? தீர்ப்பு வழங்கும் நாளாகும்! வாக்களித்தபின் சென்னையில் தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, அக்.17- இந்த உள்ளாட்சி தேர்தல் (அக்.17) ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்காவிட்டாலும்கூட, மக்கள் எந்த அளவுக்கு இந்த ஆட்சியை மதிக்கிறார்கள் என்பதற்கு தீர்ப்பு வழங்கும் நாளாக இந்த தேர்தலை கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.
சென்னை அடையாறு காமராஜர் அவின்யூ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் இன்று (அக்.17) காலை 8.30 மணிக்கு வாக்களித்த பின்பு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வருமாறு:
உள்ளாட்சித் தேர்தல்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற ஒரு சூழல் விருப்பம் இருந்தால்கூட இந்த தேர்தலிலே எவ்விதமான வன்முறைக்கும் இடமில்லாமலும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு இடமில்லா மலும் நடப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை யிலே ஆட்சி மாற்றத்திற்கு இது வழிவகுக்கா விட்டாலும்கூட, இரண்டு செய்திகளைத் தெளிவாக உணர்த்த வேண்டும்.
ஆளுங்கட்சி மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்
ஒன்று எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் ஆளுங் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சி யாக இருந்தாலும் ஆளுங்கட்சி பேதம் காட்டாது ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பை மதித்து நடக்கும் என்ற உணர்வை ஆளுங் கட்சிக்கு அது ஏற்படுத்த வேண்டும்.
தவறுகளைத் திருத்திக் கொள்ள...!
அதோடு கடந்த மூன்று, நான்கு மாதங்களாக நடைபெற்ற ஆட்சிக்கு மக்கள் இந்த ஆட்சியை எந்த அளவிற்கு ஏற்கிறார்கள் என்பதற்கும், அவர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பே தவிர, இது மாற்றத்திற்கு வழி வகுக்கா விட்டாலும்கூட, அவர்களுடைய மனமாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டிய ஒரு தீர்ப்பு நாள் என்பதை மட்டும் குறிப்பிட்டு சிறப்பாக, அமைதியாக இந்த தேர்தல் நடைபெற வேண்டுமென்று விழைகிறோம்.
- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

No comments:
Post a Comment