Thursday, October 20, 2011

கால, இட அளவைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்ற கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?


கால, இட அளவைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்ற கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?


இதை முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் அய்ன்ஸ்டீன் அல்ல.
1632 இல் தனது உலகின் இரண்டு முதன்மையான நடைமுறைகள் பற்றிய வாதம் (Dialogue concerning the World’s Two Chief Systems)
என்ற நூலில் கலீலியோ கலீலிதான் முதன் முதலாக கால, இட அளவைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்ற கொள்கையைக் கூறியவர்.
இக்கொள்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால், அது வேறு எந்தக் கொள்கையை மாற்றி அமைத்தது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். கி.மு. நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டிலால் உருவாக்கப்பட்ட  முழுமையாக செயலற்றிருத்தல் என்ற கொள்கையை இத் தொடர்புடைமைக் கொள்கை மாற்றி அமைத்தது.  எந்த ஒரு பொருளின் இயல்பான நிலையும் செயலற்று இருப்பதுதான் என்பதும், அந்தப் பொருள் தானாகவே செயல்பட விடப்படுமானால் அது இந்த செயலேதுமற்ற நிலைக்கே திரும்பிவிடும் என்பதும்தான் அரிஸ்டாட்டில் உருவாக்கிய கொள்கை.
ஆனால் தொடர்புடைமைக் கொள்கையோ,  ஒன்றின் இயக்கத்துடன் மற்றதின் இயக்கம் தொடர்புடையது என்ற கொள்கையின் அடிப்படையில்தான் அனைத்துப் பொருள்களின் இயக்கமும் அடங்கியிருக்கிறது. ஒரு பொருள் செயலாற்று இருக்கிறது என்று கூறுவது சாதாரணமாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கேயாகும் என்று கூறுகிறது.  இதனைத் தொடர்ந்து வருவதுதான் ஒரு பொருளின் வேகத்தை முழுமையாகக் கூற முடியாது என்பதும், வேறு ஏதேனும் ஒன்றுடன் தொடர்புடையதைக் கொண்டு மட்டும்தான் கூறமுடியும் என்பதும்தான். இயல்பியல் கோட்பாடுகளின் நவீன கண்டு பிடிப்பாளர்களில்  இத்தாலி நாட்டு வான இயலாளாரும், தத்துவஞானியுமான  கலீலியோவும் ஒருவர். பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கோபர்நிகசின் கோட்பாட்டை பலமாக ஆதரித்தமைக்காக மிகவும் புகழ் பெற்றவர் ஆவார் இவர்.
கத்தோலிக்க கிறித்தவ மத அமைப்பு புத்திசாலித் தனமாக அவரை சிறைப்படுத்தியது. ஆனால் தனது கொள்கைகளுக்காக எலிகள் நிறைந்த சிறைச்சாலையில் கலீலியோ துன்புறவில்லை.  சியன்னா ஆர்ச் பிஷப்பின் ஆடம்பரமான வீட்டில் தனது சிறை வாழ்க்கையைத் தொடங்கிய கலீலியோ, அதன் பின்னர் ஃப்ளாரன்சிற்கு அருகே இருந்த அவரது வசதி நிறைந்த மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். சூரிய மண்டல இயக்கம் பற்றி கலீலியோவின் கருத்துகள்தான் சரியானவை என்பதை 1992 இல்தான் கத்தோலிக்க கிறித்தவ மத அமைப்பு ஒப்புக் கொண்டது.
இந்த விஷயத்தில் கலீலியோவின் கருத்து சரியானதாக இருந்தாலும், அவரும் தவறுகள் பல செய்ய இயன்றவராகத்தான் இருந்தார். அவர் மிகுந்த விருப்பத்துடன் முன்வைக்கும் ஒரு வாதம், பூமியின் சுழற்சியால்தான் கடல் அலைகள் உருவாகின்றன என்பதாகும். செங்கடலை விட மத்திய தரைக்கடலில் அதிக அளவில் அலைகள் உருவாகின்றன என்றும்,  மத்தியதரைக் கடல் கிழக்கு-மேற்காக இருப்பதால், பூமியின் சுழற்சியால் அதிக அளவில் நீர் சுழற்சி ஏற்படுவதுதான் இதன் காரணம் என்றும் அவர் கூறினார்.
கடல்பயணம் மேற்கொண்டவர்கள் தங்களின் கண்ணால் கண்டு உணர்ந்து, இதற்கு மாறாக சான்றளித்ததன் காரணமாக, கலீலியோவின் வாதம் தவறானது என்று மெய்ப்பிக்கப்பட்டது. கலீலியோ நினைப்பது போல பகலில் கடலின்  நீரோட்டம் ஒன்று மட்டுமே இல்லை என்றும், பகலில் இரண்டு நீரோட்டங்கள் உள்ளன என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். ஆனால் கலீலியோ அவர்கள் கூற்றை நம்பவில்லை.
தொடர்புடைமைக் கொள்கையிலும் ஒரு தவறினை கலீலியோ செய்திருப்பதாகவோ அல்லது சிறப்பான சூழ்நிலைகளில் அக் கொள்கை வலுவிழந்து போனதாகவோ  ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் உணர்ந்தார்.
1905 இல் அய்ன்ஸ்டீன் எழுதிய நகரும் பொருள்களின்  மின்னியல்  வேகத்தைப் பற்றி (On the Electrodynamics of Moving Objects)
என்ற நூல்தான் பொருள்களின் இயக்கங்கள் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடையவை என்ற சிறப்புக் கோட்பாட்டை முதன் முதலாகப் பேசிய நூலாகும். ஒரு வெற்றிடத்தில் அணுக்கூறுகள் ஏறக்குறை ஒளியின் வேகத்தில் நகர்கின்றன என்ற புதுமையான உண்மையைப் பற்றி அக்கோட்பாடு விவரிக்கிறது.
புவிஈர்ப்பு விசை போன்ற பெரும் அளவிலான காரண காரியத் தொடர்புக்கடங்கா நடப்புகளுக்குப் பொருந்தக் கூடிய  சிறப்புக் கோட்பாடான பொருள்களின் இயக்கங்கள் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடையவை பற்றிய பொதுக் கோட்பாடு 1915 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப் பட்டது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  ‘ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...