Wednesday, September 14, 2011

ஹசாரேயின் பிற்போக்குத்தனம்! - காஞ்சா அய்லய்யா


லோக்பால் மசோதா பிரச்சினை பற்றி டில்லியைச் சுற்றி அண்மையில் நிகழ்ந்த நிகழ்வுகளை,  ஹசாரே குழு பெற்ற  மக்களின் வெற்றி என்று ஊட கங்கள் கொண்டாடுகின்றன.  என் றாலும், ஜாதிய அமைப்பு முறை யிலும், பிரிவுத் தடுப்புகளிலும் வாழும் இந் நாட்டுப் பெரும்பான்மையான வெகு ஜனமக்கள் இந்த வெற்றி பெற்றதாகப் பேசிக் கொண்டிருக்கும் சிவில் சமூ கத்தின்  ஒரு பகுதியாக, அங்கமாக இருக்கவில்லை.
அதனால், லஞ்ச ஊழலுக்கு எதி ரானது என்று அழைக்கப்படும் இந்த இயக்கம் பற்றி ஒரு பன்முகத்தன்மை கொண்ட பரிசீலனையை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். எடுத்துக் காட்டாக, அதனை ஒரு மாபெரும் நவீன கடல் விலங்கு போன்ற மனு வாதியின் வெற்றியாகவே நான் காண்கிறேன்.
காந்தித் தொப்பியில் அலங்கரிக்கப் பட்டிருந்த இந்த மாபெரும் நவீன கடல் விலங்கின் பெருவளர்ச்சியைக் கொண் டாட மனுவாதியின் நவீன சீடர்கள் ராம்லீலா மைதானத்திற்குச் சென் றனர். 21 ஆம் நூற்றாண்டின் இந்த  மாபெரும் நவீன கடல் விலங்கு லஞ்ச ஊழலின் எதிரி  என்பதாகத் தன்னைப் பற்றிக் கூறிக் கொண்டு மைதானத் திற்குள் சென்றது. ஆனால் அவர் அர சமைப்புச் சட்டத்தையே தள்ளி வைக்க வேண்டும் என்றும்  (ஒருவேளை அது தலித் ஒருவரின் தலைமையிலான வரைவுக் குழுவால் எழுதப்பட்டதாக இருப்பதன் காரணமாகவும் இருக்கலாம்), வருசிரம தர்ம வடிவில் பல நூற்றாண்டு காலமாக நிலவி வந்த வேறுபாடுகள் நிறைந்த சமூகக் கட்டமைப்பை உடைத் தெறிய வந்த ஜனநாயக நடைமுறையில் நாடாளுமன்றம் பெற்றுள்ள மிக உயர்ந்த நிலையை சீரழிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். வந்தே மாதரம் பாடல் அதன் ஒலிமுழக்கமா யிற்று; தேசிய கொடி (அதன் சொந்தக் கொடி அல்ல) அதன் தெரு ஆற்றலின் அடையாளமானது.
தனக்கென ஒரு தனியான ஒழுக்க நெறியை கட்டமைத்துக் கொண்ட இந்த சிவில் சமூகத்தின் உண்மை யான நிலை சமூக பாசிசம் என்ப தாகவே ஆகிவிட்டது. இந்திய மத்திய தரப் பிரிவினரைப் போன்ற இது தன்னைச் சுற்றி பலம் நிறைந்த ஒரு ஜாதித் தடுப்பை உருவாக்கிக் கொண் டதுடன்,  தனது சொந்த நலன்களைப் பாது காக்கும் ஒழுக்கநெறியைத் தேடியது. அன்றாட வாழ்வில் பொது வாக லஞ்சம், ஊழல் என்பது  ரீங்கார ஒலி எழுப்பும், பர பரப்பூட்டும்  ஒரு சொல்லாகவே ஆகிவிட் டது. இவ் வளவுக்கும் இந்த சமூகம் தன் அன்றாட வாழ்வில் லஞ்ச, ஊழல் செயல் களைச் செய்துதான் வாழ்ந்து கொண்டிருக் கிறது. ஒரு நடுத்தர அரசு ஊழியர் அல்லது பொதுநிறுவன ஊழியர் தனது ஊதியமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றுக் கொள்வதற்கும், மதிப்பூதியம், வருகைக் கட்டணம் என்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக் கொள்வதற்கும் சற்றும் தயங்குவதில்லை. ஆனால், அவரே,  5000 ஊதியம் பெறும் ஒரு கடைநிலை ஊழியர்தான் செய்யும் கூடுதல் பணிக்காக ரூ 200 கேட்டால், அவரை லஞ்சப் பேர்வழி என்று கூறுகிறார்.
லஞ்ச ஊழலுக்கு எதிரான இந்த சிவில் சமூகம், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் லஞ்சமாக அளிக்கும் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்களை லஞ்சமாக நினைப் பதில்லை. ஆனால், ஒரு அமைச்சரோ, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது ஒரு அரசு ஊழியரோ இது போன்று பணத்தை லஞ்சமாக வாங்கி விட்டால், அதை மட்டுமே லஞ்சமாக நினைக்கிறது. ஏன் என்றால், கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் அவர்களது மக்களின் கைகளில்தான் உள்ளன.  ஆனால்,  அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் நிலை பிறவி யிலேயே லஞ்ச ஊழலில் திளைத்தவர் களான மக்களின் கைகளில் நழுவிச் செல்கிறது.
எடுத்துக்காட்டாக, அரசியல்வாதி கள் லஞ்சம் பெற்ற ஊழல்வாதிகளாக கருதப்படுகின்றனர்.  ஆனால், அவர் களுக்கு லஞ்சம் கொடுத்து, பெரிய ஒப்பந்தங்களைக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளும் கார்ப்பரேட் நிறு வனங்கள் லஞ்ச ஊழல் செய்ததாகக் கருதப்படுவதில்லை. இதே கார்ப்பரேட் நிறுவனங்களும், அவர்களது ஊடகப் பெட்டகங்களும் காந்தித் தொப்பி அணிந்த சிவில் சமூக உறுப்பினர் களைத் திரட்டி லஞ்ச ஊழலை எதிர்த்துப் போரிட மைதானத்துக்கு அனுப்புகின் றன.
எந்தவித நன்னெறி ஒழுக்கக் கோட்பாடுகள் அற்ற நமது முதலாளித் துவ சந்தையில், ஆங்கிலத் தொலைக் காட்சி ஒளிபரப்புகளில் எவரால் அதிக அளவில் இடம் பெற முடிகிறதோ, அவர்கள் தங்களைத் தூய்மையான வர்கள் என்று காட்டிக் கொள்ள முடியும். லஞ்ச ஊழல் என்பதற்குத் தாங்கள் விரும்பும் வழியில் விளக்கம் அளிக்கக் கூடிய கலவரக் கும்பலைத் திரட்டும் ஒரு வழியைப் பின்பற்றுபவையாக, அதே ஊடகங்கள் ஆகிவிட்டன. லஞ்ச ஊழல் என்பதற்கு வேறு விதமான விளக்கங் கள் அளிக்கப்பட்டால், கல்வி  அறிவற்றவர்களின் காட்டுக் கூச்சல் என்று கருதப்படுகிறது.
வந்தேமாதரம் பாடலைப் பாடுவதன் மூலம் சிவில் சமூகத்தை ஆற்றல் நிறைந்த தாக ஆக்க முடியுமானால்,  வறியவர் களிலும் வறியவர்களாக இருக்கும்  மக்களுக்கு, குறிப்பாக கீழ் ஜாதி மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வாழ்க்கை அளித்த மக்களாட்சி அமைப்புகளை நிலைகுலையச் செய்யும் ஆற்றலையும் அது பெற்றிருக்கிறது.
இந்து நடுத்தரப் பிரிவு மக்கள் நின்று கொண்டு இருக்கும் உயர்ந்த நன்னெறி ஒழுக்க அடித்தளமே, சமூக பாசிசத்தை உருவாக்கி வளர்ப்பதுவுமாகும்.
காவியுடை சமூக பாசிசவாதிகளை அதிகாரம் பெற விடாமல் அடக்கி வைக்க கடந்த 20 ஆண்டு காலமாக, ஏழை மற்றும் கீழ் ஜாதி மக்கள் போராடி வருகின்றனர். அதே சமூக பாசிசவாதிகள் இப்போது காந்தி தொப்பி அணிந்து கொண்டு முக்கிய இடத்தினைக் கைப்பற்றிக் கொள்ள வந்துள்ளன. ராம்லீலா மைதானத்திற்கு காந்தி தொப்பி அணிந்து கொண்டு வந்தவர்கள் அனைவரும்  தங்கள் குழந்தைகளை காந்தி கூறிய எளிமையான உடையில் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும் என்று நான் விரும்பு கிறேன்.  ஆனால், வீட்டில் இருக்கும்போது அவர்கள் தங்கள் குழந்தைகள் சூட்டும், கோட்டும் போட்டுக் கொண்டு செயின்ட் மேரீஸ் அல்லது செயின்ட் பீட்டர்ஸ் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்றே அந்தக் காந்தித் தொப்பி சிவில் சமூகத் தினர் விரும்புகின்றனர். மகாத்மா காந்தி அல்லது புனித ஹசரே பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப அவர்கள் விரும்புவதில்லை. லஞ்ச ஊழல் என்பது வெறும் காசு, பணத்தை லஞ்சமாக வாங் குவது  மட்டுமல்ல; அது ஒரு கலாச்சாரப் பழக்க வழக்கமும் ஆகும். அவற்றுக்கு இடையே   இணைப்புகள் உள்ளன என் பதை அவர்கள் அறிந்தே இருந்தபோதும், அவற்றை நாம் பார்த்துவிடுவதை  சமூக பாசிசம்  விரும்புவதில்லை. சமூக பாசிசம் எப்போதுமே இரட்டை வேடம் பூண்டு வாழ்ந்து வருவதாகும்.  தனது கோவில் மொழியாக  சமஸ்கிருதத் தையும், மைதானப் பேச்சுக்கு இந்தியையும், அலுவலக மொழியாக ஆங்கிலத்தையும்  அது பயன்படுத்தும். பாசாங்கு செய்வது என்ற ஏமாற்று வேலையே அதன் உள்ளுறை கலாச்சாரப் பண்பாகும்.
பொதுவாழ்வில் எளிமையாக இருப்ப தாக அது பாவனை காட்டும். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் பிராண்டு பெயர்களில் விற்கும் அனைத்து நுகர் பொருள்களும் அவர்களது சாப்பாட்டு மேசையில் இருக்கும்.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் லஞ்ச ஊழல் மிகுந்தவை என்று ஹசாரே குழு நிக்கவில்லை. காந்தியின் புதிய அவதாரத்தில் நாட்டைக் காக்க வந்த பாதுகாவலர்கள் என்று அவர்களைப் படம் பிடித்துக் காட்டும் கேமிராக்களை அளிப் பதே அந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் என்பதே இதன் காரணம். சமூக பாசிசக் கோட்பாடு, லஞ்ச ஊழல் என்பது ஒரு வழிப் பாதை என்றே கருதுகிறது.
இந்தியாவில் ஏழைகளின், கீழ் ஜாதி மக்களின் நலனுக்காக, முன்னேற்றத்துக் காக செலவிடப்படும் பணம் ஒன்று லஞ்சமாகக் கருதப்படும் அல்லது பொரு ளாதார விரயம் என்று கருதப்படும். ஆனால் தங்களின் ஏகபோக ஆதிக்கத்தால் சந் தையில் பொருள்களின் விலையை நிர்ண யித்து, அரசின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாமல்,  கொள்ளை லாபம் அடிக்கும் வணிகர்கள் ஊழல் பேர்வழிகள் என்று கருதப் படமாட்டார்கள்.
எடுத்துக்காட்டாக, இந்த லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள திரைப்பட நாயகர்கள், நாயகிகளில் பெரும்பாலோர் அரசுக்கு உரிய வருமானவரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்கள்தான்.
மக்களிடையே சமத்துவத்தை உரு வாக்கி நிலை நிறுத்தக்கூடிய அல்லது கீழ்நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக் களின் அடிப்படை வாழ்க்கையை மாற்றக் கூடிய ஆற்றல் மிக்க செயல்திட்டங்கள் தேசிய செயல் திட்டங்களில் இடம் பெறத் தேவையில்லை என்றே ஹசாரே குழு நம்புகிறது.
பல பத்தாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வைக் கட்டுப்படுத்தி, மிகைப்படுத்தி வரும் பாரதமாதாவின் உருவத்தில் இந்த தேசம் காண்பிக்கப் படுகிறது. ஆனால் அந்த உருவம் மற்றவர்களுக்கோ நிமிடத்துக்கு நிமிடம் 24 X 7 என்று ஓடும்  ஒளிப்படங்களில், அவர்களை நடுங்கச் செய்யும் வகையில் காட்டப்படுகிறது.
பாசிசம் இப்போது மாளிகைகளில் வாழ்கின்றன;  ஜனநாயகம் குடிசைக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
பாரம்பரியமாக நிலவி வரும் அடுக்கு முறை ஜாதி அமைப்பு இயல்பானது என்று சமூக பாசிசம் கூறுகிறது. ஓர் அரசினாலோ அல்லது ஒரு சிவில் சமூக அமைப்பினாலோ முன்வைக்கப்படும் எந்தவொரு பொருளாதார மறுவினி யோகமும் லஞ்ச ஊழல் என்றும், ஒழுக்க நெறியற்றது என்றும் கருதப்படுகிறது.
இந்த உயர்ஜாதி மத்திய பிரிவு கண்ணாடியில் லஞ்ச ஊழல் என்பது பார்க்கப்படும்போது, அதற்கு ஒரு சட்ட பூர்வமான தீர்வு இருப்பதாக அவர் களுக்குத் தோன்றுகிறது. அந்த சட் டத்தை தங்களின் சொந்த விருப்பத் தின்படியே அவர்கள் வடிவமைத்துக் கொண்டனர். ஒடுக்குபவரின் தர்மம் எப்போதும் ஒடுக்கப் படுபவரின் நலனுக்கு எதிராகவே செயலாற்றி வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள அது விரும்பவில்லை.
ஒழுக்கநெறி பற்றிய நம்பிக்கையில் ஓர்  ஆழ்ந்த நெருக்கடியை ஒரு நாடு  சந்திக்கும்போது, சமூக பாசிசம் உருவாகுகிறது. அது சிவில் சமூகத்தின் அடுக்குகளில் தன்னை வடிவமைத்துக் கொண்டே சென்று, அரசில் அதிகாரம் என்னும் மாளிகையை ஆக்ரமித்துக் கொள்கிறது. இது போன்று,  இத்தாலி, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் நடந்துள்ளது. இத்தகைய சமூக பாசிசம் வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் தங்களுக்கென்று ஒரு உயர்ந்த ஒழுக்க நெறிக் கோட்பாட்டை வடிவமைத்துக் கொண்ட மத்திய பிரிவு மக்களிட மிருந்துதான் இந்த சமூக பாசிசம் தோன்றி வளர்ந்துள்ளது. தாங்கள் ஊழல் அற்றவர்கள் என்ற கோட்பாட்டினடிப்படையிலேயே அந்த உயர்ந்த ஒழுக்கநெறி கோட்பாடு பொதுவாக உருவாகி நிலைபெறுகின்றது.
(நன்றி: தி டெக்கான் கிரானிக்கிள்  7-9-2011 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...