Monday, September 26, 2011

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவில்லையென்றால் நாடு உடைந்து போகும்!


கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவில்லையென்றால் நாடு உடைந்து போகும்! நீதிபதி ஏ.கே.ராஜன், மு.நாகநாதன், அ.இராமசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு


சென்னை, செப்.26- கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையேல் ரஷ்யா போல் நாடு உடைந்து போகும் என்று பிரபல கல்வியாளர்கள் மேற்கோள் காட்டி பேசினர்.

கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் கொண்டு வரக்கோரும் மாபெரும் மாநாடு கருத்தரங்கம் 25.9.2011 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் மிகச்சிறப்பாக எழுச்சி உணர்ச்சி பொங்கிடும் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று பேசினார்.

இந்த மாநாடு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு. அதன் விளைவாக நாம் பல்வேறு நெருக் கடிகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றோம் என் பதை விளக்கினார்.

நீதியரசர் ஏ.கே.ராஜன்


அடுத்து நீதியரசர் ஏ.கே.ராஜன் தனது உரையில் கூறியதாவது: கல்வி என்பது கற்றலும், கற்பித்தலும் என்பதுதானே அதன் பொருள். கல்வி இருந்தால்தான் மொழி, பண் பாடு, கலாச் சாரம் நமக்கு வரும்.

கல்வி குறித்து தனியே சட்டம் வரைய வேண்டும். அமெரிக்கா, கனடா, ஆஸ்தி ரேலியா இவை எல்லாம் கூட்டு அமைப்பு களைக் கொண்ட நாடுகள். இந்த நாடுகளில் எல்லாம் கல்வி மாநிலப்பட்டியலில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில்தான் மத்திய அரசு பட்டியலில் இருக்கிறது.

கல்வி 1919யிலிருந்து மாநில பட்டியலில்தான் இருந்தது. ஏனென்றால் மாநிலங்கள்தான் மக்களிடையே நேரடியாகப் பழகக்கூடிய வாய்ப்பை பெற்றது. மத்திய அரசுக்கு அந்த வாய்ப்பு கிடையாது.

நேருவே மத்திய அரசிலேயே எல்லா அதிகாரங்களையும் குவித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

நம்முடைய ஆசிரியர் அவர்கள் கல்வி சம்பந்தமாக இந்த மாநாட்டில் பேச வேண்டும் என்று அழைத்தார். நான் அதற்காக பல ஆதாரங்களை, பல சட்ட விவாதங்களை எல்லாம் திரட்டினேன். அப்பொழுது ஒரு நாள் திடீரென்று விடுதலையில் வந்த தலையங்கத்தைப் படித்தேன். நான் என்ன நினைத்து திரட்டினேனோ அதே செய்திகள். அந்த விடுதலை தலையங்கத்தைப் படித்துப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். நெருக்கடி காலத்தில் கல்வியை மாநில பட்டியலிலிருந்து மத்திய அரசு எடுத்துக்கொண்டு விட்டது. மத்திய அரசு எதை நினைத்தாலும் எடுத்துக்கொள்ளும்.

தந்தை பெரியார் இல்லாவிட்டால் தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறியிருக்காது. தமிழ் நாட்டில் இன்றைக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியாரும் நமது ஆசிரியர் அவர்களும் தான். கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்றார்.

மு.நாகநாதன்

தமிழக அரசின் திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் தனது உரையில் கூறியதாவது:

கல்வி என்பது இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்டது. தாய்மொழி வழியாக கல்வியை நாம் பெற்றால்தான் நாம் நம்முடைய உரிமைகளை இழக்காமல் இருக்க முடியும்.

நான் 1995ஆம் ஆண்டு கனடாவிற்குச் சென்றிருந்தேன். அங்குள்ள கியூபக் மாநிலத்தில் ஆராய்ச்சிப் பணிக்காக சென்றிருந்தேன். 3 மாதம் அங்கு பணியாற்றினேன். அப்பொழுது அந்த மாநில மக்கள் பிரிவினை கேட்டு போராடிக் கொண்டி ருந்தார்கள்.

அந்த சமயத்தில் உலக பொருளாதார நிபுணர் ஒருவர் என்னிடத்திலே ஒரு கேள்வியை கேட்டார். இந்தியாவில் தமிழர்களுடைய உரிமைக்காக திராவிடர் கழகம்தான் போராடிக்கொண்டிருக் கிறது. தமிழ் அரசுகள் இருந்தும் ஏன் மொழி அடிப்படையிலான உரிமைகளுக்காக, மொழி வழி உரிமைகளுக்காக போராடவில்லை என்றுதான் கேட்டார்.

தமிழ்நாட்டில் தமிழ் அரசுகள் ஆண்டும் இந்த உரிமையை நிலை நிறுத்தி யிருக்க வேண் டாமா என்று கேட்டார்.

இந்தியாவிலேயே  இடஒதுக்கீட்டிற்காக தந்தை பெரியார் 1951இல் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் இந்திய முதல் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது.

இடஒதுக்கீட்டின் மூலமாக இந்தியாவில் தமிழ்நாடு மிகச்சிறப்பான மாநிலமாகத் திகழ்ந்து கொண்டு வருகின்றது. இந்தியாவில்-பஞ்சாப்-கேரளா-தமிழ்நாடு என்ற நிலையில் தமிழ்நாடு மூன்றாம் நிலையில் இருக்கிறது. இந்தியாவில் ஆரம்பக் கல்வியில் தமிழ்நாடு 94 சதவிகிதம் முன்னிலை பெற்று முன்னணியில் இருக்கிறது. வடநாடு இதற்கு நேர்மாறாக இருக்கிறது.

வடநாட்டில் சமூக தத்துவம் அவ்வளவாகத் தெரியவில்லை. ரஷ்ய நாடு கல்வியில் கை வைத்து அதன் மத்திய அரசே எடுத்துக்கொண்டதால்தான், எல்லோரும் ரஷ்ய மொழியை கற்றாக வேண்டும் என்று வலியுறுத்திய காரணத்தால்தான் ரஷ்யா சிதறுண்டு போனது.

அதுபோல இந்தியாவிலும் அந்த நிலை வரலாம். இந்த ஆபத்தினை அரசியல் கட்சிகள் சரியாக கவனிக்கத் தவறிவிட்டன. இந்தியாவை ஆளுகிற வர்கள் நான்கைந்து உயர் ஜாதிக்காரர்கள்தான். கேதன் தேசாய் என்பவர் மத்திய அரசின் சார்பில் உயர் பணியில் இருந்தவர். அவர் உயர் ஜாதிக்காரர். அவருடைய வீட்டில் பத்மநாபசாமி கோயிலுக்கு அடுத்தாற் போல் ஒன்றரை டன் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள். அவர் மீது எந்த நட வடிக்கையும் இல்லை. நாடாளு மன்றத்தின் மீது நாம் நம்பிக்கை இழந்து விட்டோம்.

மத்திய அரசு ஒரு (Fraud) மோசடி செய்கிறது. முக்கியமான துறைகளான கல்வி, துறைமுகம், வான்வெளி, தொலை தொடர்பு இவை போன்ற அத் துணையும் தன் வசமே வைத்துக் கொண்டது. எனவே ஒரு மக்கள் போராட்டத்திற்கு நாம் ஆயத்தமாக வேண்டும். நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையிலே நாம் போராடத் தயாராவோம். தந்தை பெரியார் செய்தது போல நமது ஆசிரியர் வழியில் மீண்டும் ஒரு சட்டத் திருத்தம் வந்தாக வேண்டும். தி.மு.க. அதற்கு என்றும் துணை நிற்கும் என்று கூறினார்.

அ.ராமசாமி

தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் அ.ராமசாமி தனது உரையில், ஒரு நாட்டிற்கு அரசமைப்பு சட்டம் இல்லை என்றால் என்ன ஆகிவிடும்? சூரியனே அஸ்தமிக்காத இங்கிலாந்து நாட்டில் அரசமைப்புச் சட்டம் இல்லை.

ஒரு நாட்டிற்கு அரச மைப்பு சட்டம் இல்லை என்றால் என்ன ஆகிவிடும்? சூரியனே அஸ்த மிக்காத இங்கிலாந்து நாட்டில் அரசமைப் புச்சட்டம் இல்லை.  முதன் முத லில் கிரேக்க நாட்டில்தான் அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்பட்டது. அதன் பிறகு ரோம் என்று வந்தது.

சோவியத் ரஷ்யா கல்வி யில் கை வைத்ததால் உடைந்து போனது என்று போலந்து நாட்டுக்காரர் எழுதியிருக்கிறார். ஆஸ்திரேலியா-கனடா போன்ற நாடுகளில் கல்வி மாநில அரசுகளின் பட்டிய லில்தான் இருக்கிறது.

உலகத் திலேயே பெரிய வல்லரசான அமெரிக் காவில் அந்த நாட்டு அரச மைப்புச் சட்டம் வெறும் எட்டு பக்கத் தில்தான் இருக்கிறது.

அமெரிக்க நாடு  நன் றாக இருக் கிறது. இங்கி லாந்து நாடு நன்றாக இருக்கிறது. பெரிய சட்டத்தை வைத்திருந்த ரஷ்யா மட்டும் உடைந்து போய்விட்டது. அதே போல பெரிய சட்டத்தையும் இந்தியா வைத் திருக்கிறது.

கல்வி மய்ய அரசியலிலிருந்து மாநில அரசின் பட்டியலுக்கு வரவில்லை என்றால் நாடு உடைந்து போகும். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

ஒரே சீரான கல்வி என்று இந்தியைத் திணிக்கிறார்கள். நவோதயா பள்ளியைக் கொண்டு வந்து இந்தியை திணிப்பதைக் கண்டு கலைஞரை அழைத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தி நவோதயா பள்ளி மூலம் நுழையாமல் தடுத்தவர் நமது ஆசிரியர். எனவே நமது ஆசிரியர் தலை மையில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை நாம் நடத்தியாக வேண்டும் என்றார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தமது உரையில், இந்த கல்வி மாநாட்டில் பேச என்னை ஆசிரியர் அழைத்தார். இந்த மாநாட்டில் பேச என்ன செய்தி தேவை என்று இன்டர் நெட்டிற்குச் சென்றேன். 2005 ஆம் ஆண்டு கல்வி மாநிலப் பட்டியலி லிருந்து மத்திய அரசுக்கு, போன செய்தி பற்றி இந்து ஏட்டில் வெளியிடப் பட்டிருந்து. அதை முழுக்க படித்துப் பார்த்தால் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறிய கருத்துதான் அதில் இடம் பெற்றிருந்தது.

ஆகவே கல்வி மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு வரவேண்டும் என்பதற்காக நமது ஆசிரியர் அவர்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார். நெருக்கடி காலத்தில் 42ஆவது அரசியல் சட்டத்தில் பல  திருத்தங்களை மத்திய அரசுக்கு தேவை யானவைகளை செய்தார்கள்.

அதில் மிக முக்கியமானது கல்வி மாநில பட்டியலிலிருந்து மத்திய அரசு பட்டியலுக்குக் கொண்டு சென் றார்கள். காங்கிரஸ் மட்டுமல்ல கூட்டணிக் கட்சிகளும் காரணம். கல்வி என்பதை  (Human Resources Development)  என்பதை மாற்றி காங்கிரஸ் தனது கையில் வைத்துக்கொண்டது. இதற்கு நாமும் ஒரு வகையில் காரணம். தமிழர்களுக்கு மத்திய அரசு உரிமை தருவதில்லை.

இந்த போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். பதவி வரும்-போகும். அதுபற்றி நமக்கு கவலை இல்லை. ஆசிரியர் நடத்துகின்ற போராட்டத்திற்கு நாம் துணை நிற்போம்.

நிறைவாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

முடிவில் திராவிடர் மகளிர் பாசறை தலைவர் டெய்சி மணியம்மை நன்றி கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...