Wednesday, September 14, 2011

கடலூர் மாநாடு


1947 செப்டம்பர் 14 ஆம் நாள் - நமது இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். இந்நாளில்தான் கட லூரில் திராவிடநாடு பிரி வினை மாநாடு நடை பெற்றது.
மாநாட்டுக்கான பந்தல் வேலைகள் எல்லாம் முடிந்து மற்ற மற்ற பணிகள் எல்லாம் வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத் தில் - இரு நாள்களுக்கு முன் பெருங்காற்றும் வேக வேகமாக தன் வேலையைக் காட்டிற்று; பந்தல் முழுவதும் அப்படியே சாய்ந்துவிட்டது.
அதிர்ச்சிதான்! ஆனா லும் கருஞ்சட்டைப் பட்டாளம் என்றால் சாதாரணமா? கழ கக் காளைகள் திரண்டார் கள்.  பந்தல் கட்டும் தொழில் தெரிந்தவர்களும் அல்லர். ஆனாலும், ஆர்வம் குறையா - உழைக்கும் தோள்கள் இருக்கின்றனவே!
திராவிடர் கழகக் கூட் டுப் பொதுச்செயலாளராக இருந்த திராவிடமணி போன்றவர்கள் (நமது ஆசி ரியர் அவர்களின் குருநாதர்) தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு பந்தலை உரு வாக்கும் பணியில் ஈடுபட்ட னர் என்றால் அடேயப்பா... எத்தனை மகத்தான உணர்வு!
400 ஒ 200 அடியளவில் மாநாட்டுப் பந்தல் செம்மை யாக எழுந்து நின்றது! ஆச் சரியம், ஆனால் உண்மை.
தந்தை பெரியார் கலந்து கொண்ட அம்மாநாட்டுத் தலைவர் வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் (முதல் வகுப்புரிமை ஆணை யைக் கொண்டு வந்த நன் றிக்குரிய மாமனிதர்!), டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, பார்-அட்லா, திராவிடநாடு படத்திறப்பாளர்.
அம்மாநாட்டில் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தந்தை பெரியார் படத்தி னைத் திறந்து வைத்து எனது காங்கிரஸ் மயக்கம் தெளிந்தது! என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இந்த மாநாட்டில் நமது கழகத் தலைவர் - அன்றைய கடலூர் சிறுவன் வீரமணி யின் பணி என்ன தெரியுமா? அவரது அண்ணன் கி. கோவிந்தராசன் அவர்களும் வெளியூர் தோழர்களின் பை முதலிய சாமான்களை வாங் கிப் பெயர் எழுதி வைத்துத் திருப்பிக் கொடுக்கும் பணியாகும்.
அப்பொழுது சிறுவன் வீரமணியின் வயது என்ன தெரியுமா? வெறும் 14 தான் (அதுகூட முழுமை பெற வில்லை).
பொறுப்புகளைச் சுமக் கும் பக்குவம் அந்த வயதி லேயே அவரை ஆட்கொண்டு விட்டது (நமது மாணவரணி, இளைஞரணி தோழர்கள் கவனிப்பார்களாக!)
மாநாட்டு ஊர்வலத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா, திருவாரூர் மு.கருணாநிதி, திருவாரூர் சிங்கராயர், குடந்தை பாவலரேறு பால சுந்தரம் முதலியோர் ஊர் வலத்தை நடத்திச் சென்றனர் என்கிறது நமது வரலாறு.
அந்த மாநாடு குறித்து குடிஅரசு தலையங்கம் தீட்டியது (20.9.1947),
திராவிட நாடு பிரிந்து விட்டால் இந்திய யூதர்களா கிய மார்வாடி, குஜராத்தி, பிராமணக் கூட்டங்கள் நாடற்று, நகரமற்று இலம் பாடிகளாய்த் திரிய நேரிடுமே என்கின்ற கவலையாலேயே திராவிட நாடு பிரிவினையை சர்வ சக்தியோடு, சர்வ சூழ்ச் சியோடு பலமான மத்திய அர சாங்கம் என்கின்ற சூழ்ச்சி யால் எதிர்க்கிறார்கள் என் கிறது குடிஅரசு தலையங்கம். இன்றைக்குத் திராவிட நாட்டை நாம் பெறவில்லை தான். என்றாலும் குடிஅரசு தலையங்கத்தில் சுட்டிக் காட்டப்பட்டவை அந்தக் காரணங்கள் நம் கண் முன்னே இப்பொழுதும்கூட ஜொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன - கருவேள் முள்ளாக நம் கண்களை உறுத்திக் கொண்டுதானே இருக்கின்றன - மறுக்க முடியுமா?
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...