Sunday, September 25, 2011

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கண்டனம்

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கண்டனம்


சென்னை, செப்.25- திராவிடர் கழக நிகழ்ச்சியில் வன்முறையை  ஏவியவர்களுக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்தார். அறிக்கை வருமாறு:
திராவிடர் கழகம் சார்பில் நேற்று (24.09.2011) மாலை, சென்னை விருகம்பாக்கத்தில் பெரியார் பிறந்த நாள் விழாக் கூட்டம் நடைபெற்றது. அப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசத் தொடங்கியதும், ஆர்.எஸ்.எஸ்.சைச் சேர்ந்த சிலர், கற்களை வீசிக் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். மக்கள் கலையவுமில்லை, கூட்டம் நிறுத்தப்படவுமில்லை.

அதற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில், 40,50 பேர்களைக் கொண்ட ஒரு கும்பல் கையில் கற்களோடும், கம்புகளோடும் மேடையை நோக்கி வந்தது.  கலவரக்காரர்களோ, கம்புகளையும், டியூப்லைட்டுகளையும் மேடையை நோக்கி வீசினர்.

கருத்துகளை, கருத்துகளால் சந்திக்கும் துணிவும், நேர்மையும் அற்றவர்கள் செய்யும் இதுபோன்ற கலவரங்களைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற கலகங்களைக் கண்டு கருஞ்சட்டைப் படை ஒருநாளும் கலங்காது என்பதை உரத்து அறிவிக்கிறது.
- இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...