Sunday, September 25, 2011

பெருகி வரும் தற்கொலைகள்!


பெருகி வரும் தற்கொலைகள்!


கடந்த மூன்று ஆண்டுகளில் (2008, 2009, 2010) இந்தியா முழுவதும் நான்கு லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 35 சதவிகிதம் பேர் 30 வயதிற்கும் குறைவானவர்கள். ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது இந்தப் புள்ளி விவரங்களை அளித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 76 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதில் 15 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்களின் சதவிகிதம் சராசரியாக 35 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதாகவும், குறையும் வழியைக் காணோம் எனவும் சமூக நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
2008 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில் 15 வயதிலிருந்து 30 வயதுக்குட் பட்டவர்கள் 35.7 சதவிகிதமாகவும், 2010 ஆண்டு 35.3 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.
14 வயதுக்குட்பட்டவர்கள்  2008 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 381 பேரும், 2009 இல் 2 ஆயிரத்து 951 பேரும், 2010 இல் 3 ஆயிரத்து 130 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
15 வயதிலிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள்  2008 ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 652 பேரும், 2009 இல் 43 ஆயிரத்து 920 பேரும், 2010 இல் 47 ஆயிரத்து 625 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக வேதனை தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
30 வயதிலிருந்து 44 வயதுக்குட்பட்டவர்கள்  2008 ஆம் ஆண்டில், 43 ஆயிரத்து 562 பேரம், 2009 இல் 43 ஆயிரத்து 488 பேரும், 2010 இல் 44 ஆயிரத்து 846 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்டவர்கள் 2008 ஆம் ஆண்டில் 25 ஆயிரத்து 192 பேரும், 2009 இல் 26 ஆயிரத்து 603 பேரும், 2010 இல் 27 ஆயிரத்து 889 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2008 ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 230 பேரும், 2009 இல் 10 ஆயிரத்து 189 பேரும்,  2010 இல் 11 ஆயிரத்து 109 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒன்றேகால் லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிறியவர், பெரியவர் என்ற எந்த வித்தியாசமும் இன்றி பலதரப்பட்டவர்களும் தற்கொலை செய்து கொள்வது நாட்டின் சுபிட்சத்தைத்தான் காட்டுகிறதா? அல்லது திறந்த மனதுடன் மகிழ்ச்சி எண்ணத்துடன் மக்கள் வாழ்கிறார்களா? என்ற சந்தேகங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
தாராளமய பொருளாதாரக் கொள்கையின் சாதனையாக குஜராத்திலும், மகாராட்டிராவிலும் குறிப்பாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரின் சொந்த மாவட்டமான விதர்பாவிலும், ஆந்திராவிலும் ஏராளமான விவசாயிகள் வறுமையின் கோரப்பிடியில் சின்னாபின்னமாகி வறுமைப்பிடியில் இருந்து தப்பிவிட தற்கொலையை நாடும் அவலம் இந்நாட்டின் கோடிக்கணக்காக விவசாயிகளை, நெசவாளர்களை, தொழிலாளர்களை மேலும் தற்கொலைப் பாதைக்கு இழுத்துச் செல்லும் அவலம் நீடிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி அரசு மக்கள் நல அரசாம். இந்தியா வல்லரசாம். தயவு செய்து இதனை நம்புங்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...