Sunday, August 28, 2011

கற்பழிந்த கங்கை


- மு.வி. சோமசுந்தரம்
உழைக்காமல் பிழைக்க, மூலதனம் இல்லாமல் லாபம் அடைய ஆரியம் கண்டுபிடித்து நம்மை அவர்களின் தாசர்களாக ஆக்கி வைக்க பழக்கத்தில் விடப்பட்டவையே பணம் பாழாகும் பண்டிகைகள்.அதில் ஒன்று தீபாவளி அந்த நாளில் அறிவை அடகு வைத்த நம்மவர்கள், மற்றவரைப் பார்க்கும் போது ஏங்க, கங்கா ஸ்நானம் ஆச்சுதுங்களா? என்று கேட்டு அவரின் பக்தி புத்தியை விளம்பரப்படுத்துவார்.

டேங்கர் லாரி தண்ணீரில் வாழ்க்கை நடத்தும் ஆள் கங்கை தண்ணீரில் ஸ்நானம் பண்ணீங்களா என்று கேட்டு பூரித்துபோவார்.அது இருக்கட்டும்.இந்த கங்கை கதையை பார்ப்போம்.

பெரு நதிகள் பாயும் பகுதிகள் நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படு கின்றன.அந்த வகையில் சிந்து சமவெளி நாகரீகம், திராவிட இனத்தின் நாகரீக வெளிப்பாடாக அமைந்துள்ளது. சிந்துவெளி நாகரீகம் கங்கை நதி சமவெளி வரை பரவி இருந்ததையும் அறியமுடிகிறது.

கங்கை ஆறு மேற்கு இமாலயப் பகுதியில் கோமுகி என்ற இடத்தில் உற்பத்தியாகி தெற்கு திசை, பின் கிழக்கு நோக்கி பாய்ந்து வட இந்தி யாவின் கங்கை சமவெளியில் பாய்ந்து, பங்களாதேஷ் நாட்டின்வழிச் சென்று வங்களா விரிகுடாவில் கலந்து விடுகிறது.

இந்தியாவின் வற்றாத நதி கங்கை என்பதில் அய்யம் இல்லை. இந்திய, முகலாய, அய்ரோப்பிய ஆட்சி கால வரலாற்றுடன் முக்கிய தொடர் புடைய பகுதி கங்கை சமவெளிப் பகுதி.முதல் இந்தியப் பிரதமர் நேரு தன்னுடைய இறுதிமுறியில் (Will) கங்கை நதியின் முக்கியத்துவத்தை சிறப்பித்துக் கூறியுள்ளார்.

இந்திய நாட்டின் பறவை மயில் .நாட்டின் விளையாட்டு ஹாக்கி (உலகப்போட்டியில் சாதனைக் குறைபாடே) இந்த வகையில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் அதிகார பூர்வமாக கங்கை நதி தேசிய நதி எனறு அறிவிக்கப்பட்டது.

பெருமைப்படத்தக்க தேசிய நதி என்ற பட்டத்தைப் பெற்றுள்ள கங்கை நதி தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு நடைபோடுகிறதா என்ற வினாவுக்கு இல்லை என்று தான் கூறவேண்டும். சிலப்பதிகாரத்தில் நடந்தாய் வாழி காவிரிஎன்று காவிரியை வாழ்த்துவது போல் கங்கையை வாழ்த்திக் கவிதைப் பாட இயலாது.அத்துணை குறைபாடு களின் கொள்கலமாக தூய்மைக்குத் தொடர்பு அற்ற நதியாக கங்கை கண் டனத்துக்கு உரியதாக காட்சியளிக்கிறது.

எத்துணை வகை நோய்களை உள்ளடக்கி மொத்த வியாபாரியாக கங்கை உள்ளது என்பதைக் காண் போம். உலகில் உள்ள அச்சுறுத்தலுக்குக் காரணமாக அமைந்துள்ள 10 நதிகளுள் கங்கையும் ஒன்று.நம் தேசிய நதிநம் நாட்டு நதிகளுள் மிகவும் தூய்மை இழந்த நதி.இந்த நதியின் நீர், குடிநீராக பயன்படுத்துவதற்கு ஏற்ற தல்ல என்பது மட்டுமின்றி விவசாயத் துக்கும் பயன்படுத்த உகந்ததல்ல என்ற கெட்டபெயரைப் பெற்றுவிட்டது. மேலும் இந்த கெட்ட பெயர் வலுப்பெற்று வருகிறது.தண்ணீரின் தூய்மையை அந்த தண்ணீரில் உள்ள கோலிஃபோம் பாக்டீரியா  அளவைக் கொண்டு அறிவியலார் கணிக்கின்றனர். அந்த பாக்டீரியாவின் அளவு 50_க்கு கீழே இருந்தால்தான்,தண்ணீர் குடிக்க தகுதிபெற்றதாகும்.ஆனால் நமது தேசிய புனித நதியின் கோலிஃபோம் அளவு ஹரிதுவாரில் 5500 உத்ராஞ்சல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தூய்மை பாதுகாக்கும் கழகம், அளவு கடந்து தூய்மை கெட்ட நீராக கங்கை நீரை வகைபடுத்தியுள்ளது-

இப்படி தரம் கெட்டுப்போன நதி யாகக் காரணம் என்ன? பெருகிவரும் மக்கள் தொகை தொழிற்சாலைகளின் கூடுதல் எண்ணிக்கை.பெருகிவரும் நகரங்கள்,வறுமை இவற்றின் தாக்கம் கங்கையைக் கேவல நிலைக்குத் தள்ளுகின்றன.கட்டுக்கடங்காத மனிதர்களின் சிறுநீர்,மலம்,கழிவுநீர் ஆகியவை,நதியின் துவக்க நிலையிருந்து ஹரித்துவார் வரை தாராளமாக வந்து கலக்கின்றன. நதியின் கரையையொட்டி அமைந்துள்ள 27 நகரங்களின் 1.4 பில்லியன் லிட்டர் கழிவு நீர் கங்கையில் குடிகொள்கிறது. புனிதநாட்களில் குவியும் பக்தர்களின் பங்களிப்பால் இந்தத் லிட்டர் அளவு மேலோங்கும் உத்தர் பிரதேச மாநிலம்,நதியின் தூய்மையைக் கெடுக்கும் பணியில் 50 சதவிகிதம் அதனுடைய பங்கு என்ற பரிசை தட்டிச் செல்கிறது-

மனிதக் கழிவுகள், தொழிற்சாலை களின் கழிவு மட்டுமா?இந்து மதம், ஆன்மீக பாசம், ஆகியவற்றின் பங்க ளிப்பும் உண்டே. கல்லை, மரத்தை, புல்லை, மண்ணை எதைவிட்டு வைத்தது ஆன்மீகம்? இறந்த உடலை அரைகுறையாக எரித்து கங்கையில் போடுவது இறந்தவர்களுக்கு கர்ம காரியங்கள் நடத்துவது இதற்கு ஏற்ற புனித இடம் ஹரிதுவார். அப்படி ஒரு தனி முத்திரையை ஆரியம் பதிக்கத் தவறில்லை.சிறீநகர் முதற்கொண்டு பல மருத்துவமனைகளின் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கழிவு, வேதியியல் பொருள்களும் கங்கையின் உணவுப்பொருள்களாகின்றன.தோல் தொழிற்சாலைகளின் வேதியியல் பொருள் கலந்த கழிவு நீரும் நதியில் கலந்துவிடுகிறது-.இத்தகைய பல்வகைத் தீய கலப்படங்களால் கங்கையின் இணை நதி யமுனை நதி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித நீர்வாழ் உயிரினமும் வாழத் தகுதியற்றுப் போனதால் அதில் எந்த உயிரினமும் காணப்படுவதில்லை.மனித உயிர்க்கு மட்டில் ஆபத்தாக இல்லாத கங்கை நீர் 140 வகை மீன் இனங்களும் 90 வகை நீர் தரைவாழ் உயிரினங்களும் அழிவை சந்திக்கக் காரணமாக மாறிவிட்டது-

இத்தகைய உயிரினத்தின் அழிக்கும் தன்மை கொண்ட நதியாக இருந்தாலும், இந்துக்களின்  ஆத்மா சாந்தி அடைய வும் பாவங்களுக்கு பரிகாரம் வழங்கும் கங்கை என்று பார்ப்பனீயம் கூறாது அமையாது. கங்கா தீர்த்தம் என்றும், கங்கா ஸ்நானம் ஆச்சா? என்றும் பார்ப்பனர்கள் கூற கூச்சப்பட மாட்டார்கள். பிழைப்புக்கு விளம்பரம் தேவைதானே? கதை கட்டாமல் விடு வார்களா? அறிவுக் கண் இல்லாத வர்கள் ஆனந்தம் அடைய வேண் டாமா?

இந்து ராஜாவுக்கு 60,000 பிள்ளைகளாம். கபிலா என்ற ரிஷியின் தவத்தைக் கெடுத்ததற்காக அவர்களை எரித்து சாம்பலாக்கி விட்டார். அவர்களுக்கு வாழ்வளிக்க, வானத்தி லிருந்த கங்கையை பூமிக்கு பகீரத மன்னன் கொண்டு வந்தான். கங்கை பூமிக்கு வருவதால், ஏற்படும் அழிவை அறிந்த சிவபெருமான், தன்னுடைய சடாமுடியை விரித்து கங்கையை அதனுள் மடக்கிப் போட்டார்.

கங்கை இதன்மூலம் புனிதமாகக் கருதப்படு கிறது. மடமை, பொய், புளுகை படம் பிடித்துக் காட்ட, பெரியார் தொண் டர்களுக்கு இந்தக் கதை பயன்படும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...