Sunday, August 28, 2011

அறுத்துச் சமைத்த கோழி உயிர் பெறுமாம்!



முருகனுக்கு அறு படை வீடுகளாம். அதில் ஒன்று திருத்தணியாம். வருடா வருடம் முருகன் கோயிலுக்குப் பக்தர் கள் காவடி எடுத்துப் போவார்கள் - மொட்டை போடுவார் கள். அறுத்த கோழி உயிர் பெறும் என்பார் கள். (அவனே மொட் டையன்தானே!)

ஒரு முறை தந்தை பெரியாரும், அவர் களின் நண்பர்களான சென்னை மாநில முதல் மந்திரியாக இருந்த முனுசாமி நாயுடு, சி.எஸ். இரத்தினசபா பதி முதலியார் ஆகி யோர் பழனி சென்றனர். (1936 இல்)

பெரியார் மலை அடி வாரத்தில் இருந்து கொண்டு, மற்ற இருவரும் மலைக்குச் சென்று கீழே இறங்கினர்.

மலையின் அடிவாரத் தில் ஒரு விபூதி கடைக் காரன் இரண்டு சேவல் களைத் தன் கடையின் முன் கட்டி, அதன் மீது மஞ் சள், குங்குமம் தெளித்து, வெற்றிலைப் பாக்கை முன் னால் வைத்து, ஒரு உண்டி யலையும் வைத்திருந்தான்.   அங்கு ஜனங்கள் கூட்ட மாக நின்று சேவல்களைக் கும்பிட்டு, உண்டியல் கலத்தில் காசு போட்டுக் கொண்டிருந்தனர்.

பெரியார் என்ன என்று கேட்டார். அதற்கு அந்தக் கடைக்காரன் பெரியாரை யும் ஒரு பக்தர் என்று நினைத்துக் கொண்டு, இந்தச் சேவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடி யின் அருள் என்று சொன் னான். அதாவது அறுத்துச் சமைத்து காவடி கட்டிக் கொண்டு வந்த சேவல்கள். கடவுள் சன்னதியில் உயிர் பெற்றுவிட்டன என்று விளக்கினான்.

தன்னோடு வந்த இரு நண்பர்களிடமும் பெரியார் விளக்கினார். இப்படிப் பட்ட ஆட்கள்தான் உங்கள் பிரச்சாரத்திற்கு அனு கூலம் செய்துவிடுகிறார் கள் என்றும், நாங்கள் இதையெல்லாம் நம்பமாட் டோம் என்று சொல்லிச் சிரித்தார்.
(ஆதாரம் குடிஅரசு 19-1-1936)

இப்படிப் பித்தலாட்ட மாக மக்களை ஏமாற் றிடத்தான் திருத்தணி உள் ளிட்ட முருகன் கோயில் கள்.

அந்த ஊரில்தான் வரும் ஞாயிறு அன்று மாலை பேர ணியும் மண்டல மாநாடும் நடைபெற உள்ளன.

மக்கள் மத்தியில் பக்தி மூட நம்பிக்கை உள்ளவரை - இது போன்ற சுரண்டல் தொழில்களும் ஜாம் ஜாமென நடக்கத்தான் செய்யும்.

அதை முறியடிக்கும் தீரமும், கொள்கையும் கருஞ்சட்டைப் படைக்குத் தானே உள்ளது?

மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளுள் தலையானது மூடநம் பிக்கை ஒழிப்புப் பணி மட்டுமே!

அறிவிருந்தும் அதனை முடக்கச் செய்யும் அமைப்பு முறைதான் கோவில்களும், விழாக்களும் என்ற பிரச் சார யுக்திகள்

அறிவைக் கெடுப்பாருக் குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகிறார் என்றால், அதன் பொருள் - பகுத் தறிவின் மீது அவர் வைத் திருக்கும் மதிப்பு எத்தகை யது என்று விளங்கும்.

எனவே, வாருங்கள், தோழர்களே திருத் தணியை நோக்கி!

மக்களின் மூளை யைக் கவ்விப் பிடித்தி ருக்கும் மூட விலங்கு களை உடைத்தெறி வோம் வாரீர்! வாரீர்!!

தமிழர்மீது தொடுக் கப்படும் பண்பாட்டுப் படையெடுப்புகளை முறி யடிக்க வேண்டிய கால கட்டம் இது. திருத்தணி மாநாட் டுக்கு வருவது என்பது - காலம் நமக்கு அளிக்கும் வரலாற்று ரீதியான கட்டளை!

கடமையைச் செய் வோம்

கருஞ்சட்டைக் குடும்பங்களே, திரள்க! திரள்க!!-

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...