Friday, August 26, 2011

கிறிஸ்தவ சோதிடர்

ஏசு கிறிஸ்து பல நோ யாளிகளைச் சுகமாக்கிய தாக, ஏன் இறந்தவர்களை உயிரோடெழுப்பிய தாகக் கூட பைபிள் கூறுகிறது. அவர் சுகப்படுத்தினார் என்பது உண்மையாகக் கூட இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இவர்கள் தங்களையே ஏசு போல் எண்ணிக் கொண்டு நடக்கத் தொடங்கி விடுகிறார்கள். நான் நிலத்தடி நீர் பார்த்தது போன்றுதான் பலருக்குச் சுகம் கிடைக்கலாம். சிலருக்குத் தோல்வியாகலாம். பிரசங்கிகளுக்குக் காணிக்கை ரூபாய் கிடைத்து விடுகிறது.

நான் ஒரு வீட்டுக்கு விருந்தாளியாக மும்பை நகரத்திற்குச் சென்றிருந்தேன். வெளியே கடைத் தெருவுக்கு போய் விட்டுத் திரும்பினேன். அந்த வீட்டில் ஜெபம் நடந்தது. இறுதியில் தனி நபர்களுக் காக ஜெபிக்கத் தொடங்கினார். ஒவ்வொருவர் தலையிலும் கையை வைத்து சொல்லிக் கொண்டு வந்த அவர், ஒருவருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் பொறாமை இருக்கிறது. ஒருவருக்கு வேலை செய்யும் அலுவலகத் தில் போட்டியிருக்கிறது. வேறு ஒருவருக்கு வீட்டுக் காரர் வாகனத்தில் வேலைக்குச் செல்லும் வழியில் கடவுள் விபரத்தை காட்டுகிறார், என்று சோதிடர் கூறுவதுபோல் கூறிக் கொண்டிருந்தார். ஜெபம் பண்ணின அனைவரும் பெண்கள். ஜெபம் பண்ணி னவர் ஆண்.

நான் வேண்டுமென்று முட்டுப்போட்டு அவரிடம் என் தலையைக் கொடுத்தேன். அவர் என்ன பிரச் சினை? என்றார். அய்யா, ஊரில் விட்டு வந்திருக் கிற நோயுள்ள என் மனைவிக்காக ஜெபம் பண் ணுங்கள் என்றேன்.

அவர், அய்யா உங்கள் மனைவிக்கு ஆபத்தைக் கடவுள் காட்டுகிறார் என்றார். நான் ஆச்சரியப் படுவது போல என்ன அய்யா? என்றேன்.

அய்யா, உடன் மரணம் இருக்காது, கவலைப்பட வேண்டாம், கொஞ்சம் நாளாகும் என்றார். நான் அந்தப் பிரசங்கி யாரிடம் தலையை நீட்டி ஜெபம் பண்ணும்போது, என் மனைவி இறந்து ஒரு ஆண்டு ஆகியிருந் தது. இது அங்கே ஜெபத்தில் குழு மியிருந்த ஒரு சில பெண்களுக்கு தெரியும்.

எல்லோரிடமும் உபவாசித்து ஜெபம் பண்ணுங்கள், உங்களுக் காக நானும் என் தனி ஜெபத்தில் வேண்டுகிறேன். எல்லாம் நன்றாக நடக்க, கடவுள் உதவுவார் என்று கூறிவிட்டு, கொடுத்த காணிக்கைகளை வாங்கிக் கொண்டு வேறு வீடுகளுக்கு அந்தப் பிரசங்கியார் சென்றார்.

அவர் ஜெபம் பண்ணும்போது ஏற்கெனவே என் மனைவி இறந்ததை கூறவில்லை. ஆனால், அவர் எப்படி பித்தலாட்டம் செய்கிறார் என்று அங்குக் கூடியிருந்த பெண்களுக்கு தெரியவேண்டுமென்று தான் நான் அவ்வாறு செய்தேன். ஏனென்றால் அவர்கள் திருந்தமாட்டார்களா? அவர்களிடம் உள்ள மூட நம்பிக்கைகள் மாறாதா என்று நல்ல எண்ணம் தான் எனக்கு.

இதைப்போல்தான் சோதிடங்களைப் பார்ப்பதும், பரிகாரங்கள் செய்வதும், பலியிடுவதும் நடைபெறு கிறது. ஏன், சில சாமியார்கள் நரபலி கூட நடக்கக் காரணமாகி விடுகிறார்கள்.

மக்களுக்கு சோதிடம் கூறுவதில் நாள், நட்சத்திரங் கள் தவறாக ஜாதகத்தில் குறிப்பிட்டிருந் தால் தவறுகள் ஏற்படலாம். சோதிடர்கள் வீடுகளில் கூட அவர்கள் வீட்டில் நடந்தவற்றை முன்னரே கூற முடிவதில்லை. பிரபல ஜோதிட மாத இதழ் நடத்தும் பெங்களூர்காரர் ஒருவர் அவர் சொந்த மகனின் அகால மரணத்தையே முன் கூட்டிக் கூறமுடியவில்லை. இதையெல்லாம் அறிந்தும் மூட நம்பிக்கைகள் மக்களிடமிருந்து நிரந்தரமா மாறுமா என்றால்... மாறாது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...