Tuesday, July 26, 2011

வரலாற்றுச் சின்னங்களின் பாதுகாப்பு என்பது அவசியம்!


வரலாற்றுச் சின்னங்களின் பாதுகாப்பு என்பது அவசியம்!


மிகவும் புராதனமாகப் பாதுகாக்கப் படும் மரபுடைமைச் சின்னங்களைக் காண எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். தமிழ்நாட்டில் கானாடு காத்தான் - செட்டி நாடு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பல வீடுகளை, மரபுடைச் சின்னங்களாக்கி (Heritage Buildings)  வரலாற்றுப் பதிவுகளாக நிகழ்கால தலைமுறைக்கும், வருங்கால சந்ததியினருக்கும் காட்டி வருகிறார்கள்.

அது போல சிங்கப்பூரில் அண்மை யில் (மே2011) சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வாணிபத்திற்குச் சென்றவர்கள், சிங்கப்பூர் (பழைய முக்கிய பகுதிகளில் - கடல் ஓரம்) உள்ள தாங்கள் தொழுவதற்காக என்று நாகூர் தர்கா என்ற பெயரிலேயே தெலுக்ஆயர் வீதியில் அமைத்துள் ளனர். இவர்களில் பெரும்பாலோர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கப்பலேறிச் சென்றவர் கள். (பாய் மரக் கப்பல்கள்தான்).

1820-களில் இந்த நாகூர் தர்கா என்ற கட்டடம் - அன்றைய வழிபாட்டு நிலை யம் - இன்றைய மரபுடைமைச் சின்னம் மிகவும் ஜனநெருக்கமாக பகுதியான சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள மற்றொரு பள்ளிவாசலைப் போலவே இதுவும் அப்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் விக்டோரியா பொது மன்றம் (Victoria Public Hall)  - வி.பி.ஹால் என்று அப்பொழுது அழைக் கப்பட்ட கட்டடம் - தற்போதுள்ள சென்னை  மாநகராட்சி தி.மு.க. அரசால் அடையாளம் காணப்பட்டு (பெரியார் நெடுஞ்சாலையில் மாநகராட்சிக் கட்டடத் திற்கு அருகில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போகும் வழியில்) அதை செப்பனிட்டனர்; பணிகள் இன்னும் முடியவில்லை. பல்வேறு பொது நிகழ்ச்சிகள் நடைபெற்ற - (நாடகங்கள் உட்பட) - மண்டபம் அது.  அதில் வந்து பேசாத பழம்பெரும் தலை வர்களே இல்லை என்பது அதன் தனித் தன்மையான வரலாறு.
சிங்கப்பூரில் - இந்திய முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகவும் அருமையான தகவல் களஞ்சியங்களாக வும், அவர்கள் வாணிபம், அவர்களது உணவுப் பழக்க வழக்கங்கள் - எப்படி அவர்கள் அக்காலத்திலேயே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்திட தமிழில் கூட ஏடுகள் நடத்தினர் என்ற வரலாறு எல்லாம் மிகவும் அருமையான தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பல்வேறு செய்திகள் விளக் கங்கள் சுருக்கமாகவும் தூய்மையாகவும் வைக்கப் பட்டு, பார்வையாளர்களை ஈர்த்து, வரலாற்று உணர் வைத் தூண்டும் ஆர்வத்தை வளர்க்கும் வண்ணம் செய் யப்பட்டுள்ளன. பராமரிப்புத் துவங்கி பாதுகாக்கும் குழு வினருக்கு நமது மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்.

1827 இல் தமிழகத்தின் காதர் பிள்ளை என்ற பெரியவர் இந்த அருமை யான கட்டடத்தைக் கட்டி யுள்ளார்.

பல்வேறு ஆவ ணங்கள், நினைவுப் பொருள்கள் அங்கே வைக்கப்பட் டுள்ளன. வரலாற் றுச் சின்னங்கள் பழைய காலத்து வால்வுகளைக் கொண்ட வானொலிப் பெட்டி (ரேடியோ) உட்பட பலவும் வர லாற்றைப் பறை சாற்றுகின்றன.
அக்காலத்தில் வெளியான பழைய புத்தகங்களும், வெளியீடுகளும் கூட வைக்கப்பட் டுள்ளன. கலை அழகோடு காட்சி தரும் நாகூர் தர்கா தமிழ்நாட்டில் நாகூரில் அமைந் துள்ள தர்காவின் பாணியில் அந்தக் கட்டடக் கலையின்அடிப்படை மரபுகள் மாறாத வகையில், தமிழக கட்டடக் கலை மரபில் நிர்ண யிக்கப்பட்டுள் ளது.

சிங்கப்பூரில் குடியேறிய தமிழ் முஸ்லிம்களின் பூர்வீகப் பின் புலம் அன்றைய  மதராஸ் ராஜ தானியின் திருச்சிராப் பள்ளி, தஞ்சா வூர், வட ஆற் காடு, தென்னாற் காடு, திரு நெல்வேலி, இராமநாதபுரம், பாண்டிச்சேரியை அடுத்த கோட்டைக் குப்பம் முதல் முத்துப் பேட்டை, நெல்லைப் பகுதியைச் சேர்ந்த தென்காசி, கடைய நல்லூர், காயல்பட்டினம் பகுதிகளிலி ருந்தும் சிங்கப்பூருக்குப் புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் வாழ்வியல் தடங்களைப் பதிவு செய்துள்ள அற்புத சின்னமாகத் திகழ் கிறது.

ஒரு சிறு எடுத்துக்காட்டு


வெற்றிலைப் பாக்கு போடுதல் பற்றி, அது அவர்கள் பழக்கமாக இருந்துள்ளது. அதனைப் பற்றி விளக்கியுள்ள (அங்கு) குறிப்பில், இந்தப் பழக்கம் சிந்து வெளி நாகரிகத்திலேயே இருந்திருக்கிறது என்ற அரிய தகவலைக் குறிப்பிட்டுள்ளனர்!

மலாய் மொழியில் மாக்கன் சீரே என்று வெற்றிலைப் போடுதலை வழக்கில் பேசி வருகிறார்கள் என்ற குறிப்பும் அதில் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது.

இங்கு உள்ள ஓர் உணவகம் (Banquet) சிறப்பாக நடைபெறுகிறது. சீன, மலாய், இந்திய பிரியாணி, நாசிகோரிங், மீகோரிங், ரோஜாக் - என்ற சீன, மலாய் உணவுகள் - இவைகளைத் தயாரிப்பது - இதர மூலப் பொருள்களையும் காட்டி விளக்கியுள்ளார்கள்.

அழைத்துச் சென்ற நண்பர் இலியாஸ் (அவர் பராமரிப்புக் குழு உறுப்பினரும் கூட) அவர்களும் நானும்  சென்றோம். சுமார் 12.30 மணி என்பதால், உணவு உண்பவர்கள் கூட்டம் வந்தபடி இருந்தது.

தூய்மையான விருந்து அதுவும் அங்கே நடைபெறுகிறது. அதன் பராமரிப்பும், உணவகத்தை நடத்தும் நண்பரின் வாடகைத் தொகையும் உதவிடும் வகையில் உள்ளது நல்ல திட்டம். அங்கே எந்தத் தொழுகையும் இல்லை; அதற்கென தனி பள்ளி வாசல்கள் பக்கத்தில் உள்ளன என்று அறிவித் தனர்.

மிக அருமையான மரபுடைமைச் சின்னம். அதுவும் நமது நாட்டு இஸ்லாம் பெருமக்களின் பங்களிப்பு புலம் பெயர்ந்த மண்ணில் எப்படிப்பட்டது என்பதை அறிகிறோம்.

தாவுத் ஷா அவர்கள்நடத்திய பழைய ஏடுகளும் பார்வைக்கு அங்கே வைக்கப்பட்டுள்ளன! வரலாற்றுச் சின்னங்கள் பேணிப் பாதுகாக்கப்படும் நாடு  வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் நாடு ஆகும் !

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...