Saturday, July 16, 2011

இந்துமதம் என்ற ஒன்று கிடையாது!

(கல்கியில் 5.11.1972 காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதியதாவது:)

இப்போது ஹிந்துமதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம்; ஹிம்சையைத் தூஷிப்பவன் ஹிந்து என்று சொல்லுகிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.

ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல் நாட்டுக்காரர் சிந்து நதியை கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் சிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை ஹிந்து என்றும் குறிப்பிட்டார்கள்.

ஒரு தேசத்துக்குப் பக்கத்தில் உள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் அரவ நாடு என்பதும் கூட இதே மாதிரிதான். ஆந்திர தேசத்தின் கீழே உள்ள சிறிய பகுதிக்கு அர்வா தேசம் என்று பெயர்.

இந்த முறையில்தான் சிந்துப் பிரதேசத் தைக் கண்ட அந்நியர்களும் பாரத தேசம் முழுமையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர். தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே... அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப் பிடவில்லை.

ஜெயேந்திர சரஸ்வதி

சென்னை மார்ச் 6 (1976) வேதமதம்தான் இந்து மதம் என்று சொல்லப்படுகிறது என்றும்; ஆரம்ப காலத்தில் இதற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது என்றும் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி அறிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந் திர சரசுவதி பேசுகையில் கூறியதாவது:

இந்து மத மாநாடு என்ற பெயரில் இந்த மாநாட்டைக் கூட்டாமல், வேத மாநாடு அல்லது சனாதன மாநாடு என்றே கூட்ட வேண்டும். எனக்கு பலர் கடிதம் எழுதியிருந்தார்கள். இந்து என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு.

நமது மதத்துக்கு இந்து மதம் என்று பெயரில்லை; மதத்திற்கு ஏதாவது ஒரு பெயரைச் சொல்ல வேண்டுமே என்பதற்காக இந்து மதம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

வேதமதம்தான் நமது மதம். இந்த வேதம் என்ற சொல்லைத்தான் மற்ற மதத்தினர் பயன்படுத்திக் கொண்டனர்.

-இவ்வாறு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...