Thursday, March 24, 2011

சுயநலம் காண சூரியநாடு ஜப்பானைப் பாருங்கள்!

ஜப்பானில் அண்மையில் நேர்ந்த ஆழிப் பேரலை - சுனாமி - பூகம்பம் - அணு உலைகள் வெடித்துக் கொட்டி அம்மக் களின் வெந்த புண்ணில் வேலைச் செரு கியது போன்ற வேதனைமேல் வேதனையை தொடர் துயரமாக அளித்தது.

தொலைக்காட்சியில் அக்காட்சி களைக் கண்டே நமது உள்ளங்களில் ரத்தக் கண்ணீர் வடிந்த நிலை ஏற்பட்டது.

இவ்வளவு துயரக் கடலில் வீழ்ந்த நிலையிலும் பண்பாட்டில் முதிர்ந்த ஜப் பானிய மக்கள் எவ்வளவு பெருந்தன்மை யோடும், சகிப்புத் தன்மையோடும், எது தவிர்க்க இயலாததோ அதை ஏற்றுக் கொண்டு அதன் துன்பத்திலிருந்து மீளும் வழி   முறையில் அமைதியாகவும் நடந்து கொள்ளும் விதம் மற்ற உலக நாட்டு மக்களுக்கெல்லாம் பெரும் பாடமாகும்!

அடுத்தவர் அனுபவம் என்பது அவர்களுக்கு மட்டுமல்ல; அறிவுள்ள எவருக்கும் பாடம் கற்க வேண்டிய சிறப்பான வாய்ப்பும் ஆகும் என்றே கருதிட வேண்டும்!

நம் நாட்டில் அடிப்படை சமுதாய ஒழுக்கம் - பக்தி - ஆன்மிக வேஷம் ஏராளம் ஒருபுறம் இருந்தபோதிலும், ஜப்பான் காரர்கள், மிகவும் கண்ணியத்துடன் சோர்ந்து சுண்ணாம்பாகி மூலையில் முடங்கி விடாமல், அதிலிருந்து விடியலை எப்படி விரைவுடன் ஏற்படுத்துவது என்பதில்  - குறியாய் இருக்கிறார்கள் என்பதுபற்றி இணையதளத்தில் வெளி யான ஒரு கட்டுரை தெளிவாக்குகிறது.

மற்ற நாடுகளில் குறிப்பாக நம்முடைய நாட்டிலும், உல கின் வேறு சில நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற் றிலும் இப்படி பூகம்பங்கள், புயல்கள் தாக்கி மக்கள் நிலை குலைந்து,  அவதியுற்று அல் லோல கல்லோலமாக ஓடிடும் நிலையைப் பயன் படுத்தி அவர்தம் சொத்து களைக் கொள்ளையடிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி யிடுவது  சர்வசாதாரண நிகழ்வு.

நம் நாட்டில் சில ரயில் விபத்து களின்போது, பாதிக்கப்பட்ட மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டு முன்னுரிமையுடனும், மனிதாபிமானத் துடனும் நடப்பதற்குப் பதில், அவர்களது பொருள்கள் - நகைகள், பணம், பெட்டி மற்றும் சிதறிய பொருள்களை அபகரித் துச் செல்வதில் காட்டிய அவசரம் குறித்து எண்ணினால் நாம் வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கும்!

ஜப்பானில் உள்ள மக்கள் துயர் துடைக்க, வழிந்த கண்ணீரைத் துடைத் துக்கொண்டு தூய தொண்டறத்தில் ஈடுபட்டு, கண்ணை மூடிக்கொண்டு கடமையாற்றி வருகின்றனராம்!

அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் விலைகளைத் தாங்களே முன்வந்து குறைத்துக் கொண்டு பொருள்களை மக்களுக்கு விற்கின்றனவாம்! எல்லா மக்களுக்கும் அங்குள்ள பல நிறுவ னங்கள் தாகம் தீர்க்க பானங்களை இலவசமாகவே எப்போதும் வழங்குகின்றனவாம்!

மேற்கு நாடுகள் கட்டரினா  புயலின்போது அமெரிக்க சந்தித்த அனுபவங்கள் உள்பட பலவற் றையும் கண்டவர்கள் ஆனதால், ஜப்பானிய மக்களின் பொது ஒழுக்க உயர்வினைக் கண்டு விந்தையில் உறைந்து கிடக்கின்றனர்!

ஜப்பானிய மக்கள் புத்தக் கொள் கையினர்; ஷிண்டோ முதலிய மதக் கொள்கை கொண்டவர்கள் - மறு உலகம்பற்றிப் பேசி வாழும் மனிதர் களுக்கு இத்துயர மீட்பு நடவடிக்கை களில்  எப்படியெல் லாம் சக்தி வாய்ந்த முறையில் நடந்து கொள்வதையே வாடிக் கையாக்கி வருகின்றனராம்! இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா, நாகசாகி நகரங் களில் அணு குண்டு வெடித்து மிகப் பெரிய கேடுகளை உரு வாக்கியது - அமெரிக்காவும், நேசநாடு களான பிரிட்டன் போன்ற வையும்.

அதை எதிர்கொண்டு புத்தாக்கத்தை உருவாக்கிய அம்மக்களுக்கு அம்மக்களின் பொது ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தமாகக்கூடப் பேசாத தன்மை, கடும் உழைப்பு, நாணயம், நேர்மை - இவை தான் அவர்களை உலகத்தின் உன்னதத் தொழில் வளர்ச்சி நாடாக ஆக்கின.

எப்போதும் இயற்கைச் சீற்றத்தை எதிர்பார்த்தே - எரிமலை குமுறினாலும், பூகம்பம், புயல், ஆழிப் பேரலை வந்தாலும் - எதையும் தாங்கும் இதயம் உள்ள வர்களாக அம்மக்கள் ஏற்று வாழ்வதற்குப் பழகி விட்டார்களே!

எனவே, அங்கு கொள்ளை, பிறர் பொருளைக் கவருதல், குறுக்கு வழியில் பணம் சேர்த்துவிட அவர்கள் முயற்சிப்ப தில்லை.

ஜப்பான் மக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது உழைப்பு - கடும் உழைப்பு மட்டுமின்றி நாணயம், ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களுக்குக் காட்டும் மரியாதை - இவை மிக மிக முக்கியம் ஆகும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...