Wednesday, December 29, 2010

பார்ப்பன வருண தர்மத்துக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி!


ஏகலைவனின் கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்ட
துரோணாச்சாரியாரின் செயல் வெட்கப்படத்தக்கது!
மகாபாரதம் இதிகாசத் தில் பாண்டவர் மற்றும் கவுரவர்களின் குருவான துரோணாச்சாரியார், காட்டு வாசியான ஏகலைவனிடம் அவனது கட்டை விரலை குரு தட்சணையாகக் கேட்ட செயல் மிகுந்த வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரி வித்துள்ளனர். தனது சீடன் அர்ஜுனனே  சிறந்த வில்லாளி என்ற நிலையை உருவாக்க ஏகலைவனின் கட்டை விரலை அவர் கேட்டார்.

துரோணாச்சாரியாரின் இச்செயல் மிகுந்த அவமானத்துக்கும், வெட்கத்துக்கும் உரியது. ஏகலைவனின் வலது கை கட்டை விரலை குருதட்சணையாகக் கேட்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அர்ஜுனனை விடச் சிறந்த வில்லாளியாக ஏகலைவன் வந்துவிடக்கூடாது என்பதற்காக அல்லவா அவர் இவ்வாறு செய்தார் என்று நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும்  கியான் சுதா மிஸ்ரா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.

நிர்வாணமாக ஓர் இளம் பழங்குடியினப் பெண் ஊர்வலமாக இழுத்துச் செல்லப் பட்டதை எதிர்த்து நீதி வழங்கக் கோரிய வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்த போது, துரோணாச்சாரியாரின் வெட்கப்படத் தக்க செயலைப் பற்றிக் கடுமையாகத் தாக்கினர். பழங்குடி மக்கள் மீது பாராட்டுகளைப் பொழிந்த நீதிபதிகள், மற்ற நாகரிகமான வர்கள் என்று கூறிக் கொள்ளும் மக்களை விட இப் பழங்குடி மக்கள் மேலானவர்கள், உயர்ந்தவர்கள் என்று அறிவித்தனர்.

ஒரு பழங்குடி இளம் பெண்ணை நான்கு பேர் தாக்கியதுடன், அவரை நிர்வாணப் படுத்தி, கிராமத்தில் ஊர்வலமாக இழுத்துச் சென்றதைப் பற்றிய ஒரு வழக்கில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநில அகமது நகர் விசாரணை நீதிமன்றம் அவர் களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

ஆனால், அவர்களது மேல்முறையீட்டை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அவர்களை விடு வித்தது. அதன் மீது செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு குற்றம் சாற்றப்பட்டவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த சிறைத் தண்டனையை உறுதிப்படுத்தியது. இத் தகைய ஒரு கொடுமையான நிகழ்ச்சி நடந்திருக்கும்போது, குற்றம் சாற்றப்பட்ட வர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்யாமல் இருந்ததை எண்ணி தாங்கள் வியப்படைவ தாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...