Wednesday, December 29, 2010

உலக நாத்திகர்கள் மாநாட்டுக்கு அழைக்கிறார் தமிழர் தலைவர்! மாநாட்டுக்கு நிதி உதவி முக்கியம்! முக்கியம்!!


கழகத் தோழர்களே, பகுத் தறிவாளர்களே, இன உணர் வாளர்களே!
 
2011 ஜனவரி 7, 8, 9 ஆகிய மூன்று நாள்களிலும் உலக நாத்திகர்கள் மாநாடு நடைபெற மிகச்சிறப்பான ஏற்பாடுகளை மும்முரமாக வரவேற்புக் குழுவினர் செய்து வருகின்றனர்.

பெருமுழக்கம்  என்ற முறையில் 2011 ஆம் ஆண்டே மிகச் சிறப்பான கொள்கைப் பயணத்திற்கு வழிகோலும் வகையில் தொடங்கவிருக்கிறது!

பெரியார் சமூகக் காப்பு அணியினர் பயிற்சி ஒருபுறத்தில் ஆயத்தமாக, அன்றாடம் டிசம்பர் 27 ஆம் தேதிமுதலே நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநாட்டிற்கு சுமார் 14, 15 பணிக் குழுக்கள், கழகக் குடும்பத்தவர்கள், பேராசிரியர்கள் பங்குகொண்டு மாநாட்டின் வெற்றிக்கு உழைக்க உறுதி கூறியுள்ளனர்!
 
தனி அலுவலகங்கள் சென்னையில், திருச்சியில் இயங்குகின்றன.

பல்வேறு குழுக்கள்

1. வருகின்ற பேராளர்களுக்கு தங்கும் இட வசதி, வரவேற்று உபசரித்தல் குழு, 
மாநாட்டு வளாகத் தூய்மைப் பொறுப்பு உள்பட ஏற்றுள்ள குழு!

2. பேராளர்களைப் பதிவு செய்யும் ஏற்பாட்டுக் குழு

3. வருவோரை அழைத்து வரவேற்று, திரும்பிச் செல்லும்வரை கவனிக்கும் குழு

4. மேடை அரங்க நிகழ்வு பொறுப்புக் குழு

5. அறிவியல் கண்காட்சி அமைப்பு, நிருவாகக் குழு

6. பொதுவான வரவேற்பு ஒருங்கிணைப்புக் குழு

7. அழைப்பிதழ் அனுப்புதல் - மின்னஞ்சல் உள்பட ஏற்பாட்டுக் குழு
 
8. பொதுவான கருத்தரங்கு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் குழு

9. உணவு உபசரிப்புக் குழு

10. மாநாட்டு அலுவலக நிருவாகக் குழு

11. மருத்துவ நலன் கவனிப்புக் குழு

12. பத்திரிகை, ஊடகங்கள் தொடர்பு - உபசரிப்புக் குழு
- என்று பல்வேறு பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு மிகவும் விரைந்து செயல்படுகின்றனர் -  கல்வியா ளர்களும், பகுத்தறிவாளர்களும், கழகத்தவர்களும்!

நிதிதான் முக்கியம்!

நிதிதான் மிக முக்கியம் என்பதை விளக்கவேண்டுமா? எனவே, ஏற்கெனவே முதல் தவணையாகத் தந்த தோழர்கள், ஆதரவாளர்கள் தாராளமாக நிதி உதவி, மாநாட்டு வெற்றிக்கு பங்களிப்பைத் தாரீர்! அவசரம்! அவசியம்!!
 
இடையில் இருப்பது 8 நாள்களே! உடனே செயல்படுங்கள், தோழர்களே!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...