Tuesday, December 28, 2010

அரசு பள்ளியில் ஆன்மீகப் பிரச்சாரமா?

கழக முயற்சிக்கு வெற்றி!

தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் முரளிதரஸ்வாமி என்பவர் கூட்டுப் பிரார்த் தனை - மஹாரண்யம் முதலியவற்றை வரும் ஜனவரி முதல் தேதியன்று நடத்து வதாக தஞ்சை நகரமெங்கும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.

இதனைக் கண்ணுற்ற திராவிடர் கழகம் உடனடியாக - அதிரடியாக செயலில் இறங் கியது. கழகத்தின் செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், துணைத் தலைவர் தேசிங்கு, நகரக் கழகத் தலைவர் வ. ஸ்டாலின், நகர செயலாளர் முருகேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் கோபு. பழனி வேல், பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி, யோகா கலை வல்லுநர் இராசமாணிக்கம் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து, மதச் சார்பற்ற கல்வி நிறுவனத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்க உள்ளது - இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நேற்று புகார் மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் உடனடி யாகச் செயல்பட்டு, அனுமதி மறுக்கப் பட்டது. திராவிடர் கழகத்தின் இந்த முயற்சியை பொதுமக்கள் பாராட்டினர். ஏற்பாட்டாளர்கள் விளம்பரத் தட்டிகளை  அவிழ்த்துக்கொண்டு பரிதாபமாகச் செல்லும் காட்சியைக் கண்டு பொதுமக்கள் பரிகசித்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...