Thursday, January 21, 2010

யார் இந்த பெரியார்?


யார் இந்த பெரியார்?
காசியம்பதி
மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி
தினமும் காலையில் வில்வம் பறித்துக்-கொண்டு வரும் அந்த அந்தணப்பையன் பல்லே தேய்க்கலை, ஸ்நானமே பண்ணலை என்ற சேதி மடத்தலைவர் காதுகளை ஒரு நாள் எட்டியது. ராமு பாட்டிற்கு காலங்கார்த்தாலே வில்வமும் கையுமாய் குளிரில் நடுங்கியபடி வரும் போது, மடத் தலைவர் ராமுவின் மடி ஆசாரத்தின் லட்சணத்தை எல்லாம் தானே நேரிலும் பார்த்து விட்டார். அவருக்கு செ-மை கோபம் வந்தது, பட்டென அவர் ஏதோ கத்த, ராமுவும் பதிலுக்கு சுருக்கென ஏதோ சொல்ல, வாய் வார்த்தை முற்றிப்போய், பேக் அப் என்று விரட்டியே விட்டார் மடத்தலை-வர். அதனால் வேறு வழி இல்லாமல் ராமு நடுத்தெருவில் நிர்கதியாய் நிற்கும் நிலைமை ஏற்பட்டது.
இனி என்ன செய்வது? ராமு பிராமணன் அல்ல என்பதால் இலவச போஜனம் அவருக்கு கிடைக்காது. அதே காரணத்தினால் மாறு வேஷம் தரிக்காவிட்டால், அந்த ஊரில் வேலையும் கிடைக்காது. அப்படியே, கிடைத்-தாலும், வில்வம் பரித்துபோடும் அற்ப வேலைக்கே, காலங்கார்த்தால எழுந்திரு, குளி, பல் தேய், லொட்டு லொசுக்கு என்று அத்தனை நிபந்தனைகள் விதித்தார்கள். சரி தான் இந்த இம்சைக்கு, பேசாம நம்ம ஊருக்கே போய் தொலைக்கலாம் என்று ராமு நினைத்திருக் கலாம். ஆனால் துறவி ஆகவேண்டும் என்கிற வைராக்கியமும், தனித்து வாழ வேண்டும் என்ற தீர்மானமும், வாழ்க்கையைப் பற்றிய தன் கேள்வி-களுக்கு பதிலை புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற தேடலும், ராமுவை காசியிலே இருந்துவிடத் தூண்டியன.
ஆனால் காசியில் வேலை வெட்டி இல்-லாமல் எப்படி அப்படியே இருக்க முடியும். சாப்பாட்டிற்கு என்ன வழி? உழைக்காமல் சாப்பிட இருக்கவே இருக்கிறதே ஒரு தொன்-மையான வழி. அது தான் காசிக்கு வந்து கங்-கையில் அஸ்தியை கரைத்தால் நேரே ஆத்மா சொர்க்கத்திற்கே போய்ச் சேரும் என்று அத்-தனை மனிதர்கள் நம்பினார்களே. இப்படி கங்கைக் கரையோரம் சிரார்த்தம் செய்பவர்கள் பிண்டம் போடும் அரிசி, பழம் ஆகிய உணவு பொருட்களை வாங்கி உயிர் வளர்க்கும் பிச்சைக்காரர்கள் காசியம்பதியில் பல பேர் ஏற்கனவே இருந்தார்களே, அவர்கள் ஜோதி-யில் ராமுவும் போய் அய்க்கியமாகி, கூட்டத்-தோடு கூட்டமாய் நின்று பிண்டம், பழம் என்று சாப்பிட்டுக்கொள்ள ஆரம்பித்தார்.
யோசித்து பாருங்களேன். எவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பையன், இப்படி உணவு, உடை, உறைவிடம் என்று எந்த அடிப்படைத் தேவைகளுமே நிறைவேறாத நிலையில், தெருவில் பிச்சைக்காரர்களோடு வாழ வேண்டும்; அதுவும் ஒரு நாள் இரண்டு நாளைக்கு அல்ல, கிட்டத் தட்ட அய்ந்தாறு வாரங்களுக்கு என்றால், அவர் மனதின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்? நிச்சயம் தான் என்ற அகந்தை இருந்திருந்-தால் இப்படி பிச்சைக்கார வாழ்வை அவர் மேற்கொண்டிருக்க முடியாது. சொகுசான சுலபமான வாழ்கை மீது நாட்டம் இருந்திருந்-தால் இப்படி தெருவில் வாழ்ந்திருக்க முடி-யாது, எதற்கு வம்பு, ஈரோட்டுக்கே போயிட-லாம் என்று நினைத்திருப்பார். ஆக அகம்-பாவ-மும் இல்லை, சுக போகத்தின் மேல் ஆசை-யும் இல்லை, ஆன்மீகத் தேடல் மட்டுமே அவரை மேலும் மேலும் தூண்டிக்கொண்டே இருக்க, தனக்கு நேர்ந்த எந்த கஷ்டத்தையும் பெரிது படுத்தாமல் காசியில் காலம் கழித்தார் ராமு.
காரணம் அவர் அதுவரை கேள்விப்-பட்டதை வைத்து அவர் காசி என்றால், அது மஹா புண்ணியம் வாய்ந்த பாரம்பரியமான திருத்-தலம். அங்கே எல்லாமும் சுத்தமாகவும், மேன்-மையாகவும், திருத்தமாகவும் இருக்கும் என்று நம்பி இருந்தார். இப்படி எல்லாம் ஏதாவது பிரத்தியேக சிறப்பில்லாமலா இத்தனை கால-மாய் இத்தனை கோடி இந்துக்கள் காசியை மிக புனிதமான நகரம் என்று சொல்லி போற்றி இருப்பார்கள்.
அதனாலேயே எத்தனை துன்பங்கள் வந்தாலும் சரி, துறவறம் என்ற குறிக்கோளில் இருந்து மாறுவதே இல்லை, காசியை விட்டுப் போவதே இல்லை என்று படு தீவிரமாய் இருந்தார் ராமு. ஆனால் காசியிலேயே இருந்து அங்கு அன்றாடம் நடக்கும் வாழ்வியல் சமாசாரங்-களை பார்த்த போது தான் ராமுவுக்கு தன் உலகமே வேறு விதமாய் புரிய ஆரம்பித்தது.
கங்கை ஒரு புண்ணிய நதி என்று எல்-லோரும் சொல்கிறார்களே, வெறும் ஒரு நதியை போய், புண்ணிய தீர்த்தம் என்று சொல்-வது எப்படி செல்லுபடியாகும்? எகிப்தில் ஓடும் நைல், வட அமெரிக்காவில் ஓடும் மிஸிஸிப்பி, தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான், ஆப்பிரிக்காவில் ஓடும் காங்கோ, ருஷ்யாவில் ஓடும் வால்கா, அவ்வளவு ஏன் பாகிஸ்தானில் ஓடும் சிந்துவைக் கூட யாரும் புண்ணிய நதி என்றெல்லாம் போற்றிக் கொண்-டிருக்க வில்லையே. இத்தனைக்கும் இந்த நதி-கள் கங்கையை விட வலிமையானவை; இன்னும் நிறைய உயிரைக் காப்பாற்றுபவை; அந்தந்த ஊர் மனிதர்களின் வாழ்விற்கே ஆதாரமானவை. ஆனாலும் இதில் எந்த நதியையுமே புண்ணிய தீர்த்தம் என்று அந்த நாட்டுக்காரர்கள் யாரும் கொண்டாட வில்லையே? ஏன்?
காரணம், எகிப்தியர், சிந்து நதியினர் எல்லோருமே மிக முதிர்ச்சி அடைந்த புத்திசாலிகள். இந்த குட்டை தண்ணீல குளிச்சா எல்லா பாவமும் போய்விடும் என்பது மாதிரியான பழங்குடி மனிதர்களின் குழந்தைத் தனமான நம்பிக்கைகள் அவர்களுக்கு இருக்க-வில்லை. அதனால் நைல் நதியை ஒரு பெண்-ணாகவும் தெய்வமாகவும் பாவித்து, கங்கை-யைப் போல அவளை பகீரதன் தன் தவ வலிமை-யால் வானத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்தான். அவளை சந்தணு என்கிற அரசன் மணந்தான்; அவளுக்கு பீஷ்மன் என்கிற மகன் உண்டு; அவளை சிவபெருமானும் மணந்தார்; அவளை அவர் தன் தலையிலேயே சுமந்தார் என்பது மாதிரியான பலதாரக் கதைகளை சொல்லிக்கொண்டு காலத்தை வீணடிக்காமல், இந்த நதியை பாசனத்திற்கு எப்படி திசை-திருப்பிக் கொள்ளலாம்? என்று உருப்படியாக யோசித்தான் எகிப்து மன்னன்.
அதே போல் தான் யோசித்தான் கரிகால் சோழன். காவிரியை புண்ணிய நதி, அதில் நீராடினால் பாவம் போகும் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு வெட்டியாய் சுற்றாமல் கல்லணையை கட்டினோமா, காவிரியை அடக்கி பிரயோகித்தோமா? என்று ஆக்கபூர்-வமாய் செயல் பட்டான். ஆனால் அதே இந்தியாவின் இன்னொரு கோடியில் இருக்கும் கங்கை என்ற நதியை மட்டும் ஓவர் சென்டி-மெண்டுக்கு உட்படுத்துவது எத்தனை பெரிய முட்டாள்தனம்?
சரி, நதி தான் புண்ணியம் இல்லை என்றாகி விட்டது-. அப்படியானால், காசி என்கிற இந்த புராதனமான நகரம், ஒன்றும் இல்லாமலா அது புண்ணிய நகரம் என்று பெயர் பெற்றிருக்கும்? ஹிந்துமதம் என்ற ஒன்று உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பர்ஷவர் என்கிற இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரர் பிறந்த ஊர் என்று சமணர்களால் போற்றபட்ட நகரம் காசி. அதன் பிறகோ, கவுதம புத்தர் காசியருகே இருக்கும் சாரநாத் என்கிற மான்கள் ஓடும் காட்டில் தங்கி நிறைய பிரசங்கமெல்லாம் செய்ததினால் பௌத்தர்களாலும், பிரத்தியேக நகர் என்று கருதப்படுகிறது இந்த காசி. அதனால் ஆதியில் சமணர்களும் பௌத்-தர்களும் இங்கே தீர்த்தயாத்திரை மேற்-கொள்ள ஆரம்பித்தார்கள். அசோகப் பேர-ரசனும், ஹர்ஷவர்த்தனரும், கனிஷ்கரும், இந்த ஸ்தலத்தில் பல திருப்பணிகள் மேற்கொண்டு இதனை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக்-கினார்கள். ஆனால் சமணமும், பௌத்தமும், தேய்ந்து ஓய ஆரம்பித்ததும், காசியின் மதச்சாயமும் மாறியது. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் காசிக்குப் போய், சக்தியின் செவி தோடு அங்கே விழுந்து விட்டதாய் ஒரு கதையைச் சொல்லி, அதனால் காசி இனிமேல் ஒரு சக்திஸ்தலம் என்று விட்டார். விசாலாக்ஷியுடன் விஸ்வ-நாதரை அங்கே குடி புக வைக்க, உடனே அது சைவர்களின் திருத்தலமானது. அதன் பிறகு முகலாய சாம்ராஜ்ஜியம் தலை தூக்கிய-தும், காசி எங்கும் முகலாய கட்டிடங் களும், பாதைகளும், பயணத்தடங்களும் கட்டப்பட, இப்படியாக ஒவ்வொரு சமயத் திலும் ஒவ்-வொரு காரணத்திற்காக காசி போற்றப்பட, ஆங்கிலேயர்கள் தான் முதலில் கண்டு பிடித்-தார்கள், காசி எப்பேர்ப்பட்ட ஒரு வணிக மையம் என்று! பல ஊர்களில் இருந்து பலதரப்பட்ட மனி-தர்கள் என்ன காரணம் சொல்லிக் கொண்டு எந்த ஊரில் கூடினாலும், அங்கே முதலில் நடப்பவை, விபச்சாரம், வியாபாரம், வன்முறை குற்றங்கள் தான்.
ராமு என்னமோ காசி தன் ஞானக்-கண்களை திறந்து வாழ்வியல் ரகசியத்தை தனக்கு படக்கென்று சொல்லிக் கொடுக்கும் என்று நம்பிக்கொண்டு காசியில் காலம் கழிக்க, தினம் தினம் அவர் தரிசித்ததென்னவோ, விதம் விதமான மனித சீர்கேடுகளைத் தான். துறவிகள் என்று சொல்லிக்கொண்டு போதைப் பொருட்களை ஊதித்தள்ளுவோர், அபச்சாரம் அபச்சாரம் என்று வாய் கிழிய பேசிவிட்டு, கொஞ்சமும் தயங்காமல் விபச்சாரம் புரிவோர். சைவம் சைவம் என்று சொல்லிக்கொண்டு மனித மாமிசம் உட்பட எல்லா விதமான மாமிசங்களையும் உட்-கொள்ளும் மனிதர்கள். தயவு தாட்சண்ய மின்றி, மதத்தின் பெயரால் சுயநலமாய் பிறரை ஏமாற்றும் கூட்டங்கள், இன்னும் இன்னும் நிறைய புண்ணியம் வேண்டும் என்கிற பேரா-சையில், யார் என்ன அபத்தமான சடங்கை சொன்னாலும், அடிபிரளாமல் அப்படியே செய்து வைக்கும், கண்மூடித் தனமான மனிதர்-கள்.இவர்களை எல்லாம் பார்க்கப் பார்க்க ராமுவின் மனதில் அதிருப்தி அலை அலையாய் படர ஆரம்பித்தது. தான் நினைத்தது போல, இது வரை தான் நம்பவைக்கபட்டிருந்தது போல, காசி என்பது ஒரு புண்ணிய பூமியே இல்லை. இந்த புண்ணிய பூமி பட்டமெல்லாம் பிழைப்ப-தற்காக புகுத்தப்பட்ட விளம்பர யுத்தி மட்டுமே. இந்த நகரின் அசிங்கங்களுக்கு மத்தி-யில் உட்கார்ந்திருந்தால், திடுதிப்பென்று மெய்ஞானம் ஒரு பிரகாசமான ஜோதியாய், கபாலத்தை துளைத்துக்கொண்டு அப்படியே உள்ளே இறங்கி, தன்னை ஆட்கொண்டு விடும் என்று எதிர்ப்பார்ப்பதெல்லாம் சுத்த பைத்-தியக்காரத்தனம்.
இந்த தெளிவு ஏற்பட்டதுமே ராமு, காசிக்கு ஒரு முழுக்கு போட முடிவெடுத்துவிட்டார். எப்படியும் ராமுவின் சுறுசுறுப்புக்கு காசியில் இப்படி வெறுமனே உட்கார்ந்து ஞானத்-திற்காக காத்திருப்பதெல்லாம் ஒத்துவராத காரியமாயிற்றே.
காசியை விட்டு போவது என்று முடிவு செய்த உடனே பயணச் சீட்டாவது வெங்காய மாவது, அது தான் சாமியார்/பிச்சைகாரன் கெட்டப்பில் இருக்கிறோமே, யார் கேட்-பார்கள்! என்று வித்தவுட் டிக்கெட், ரயில் ஏறி-னோமா, ஊர் போய் சேர்ந்தோமா என்று இருந்திருக்கலாம். ஆனால் ராமுவுக்கு நாணய-மாய் இருப்பதைத் தவிர வேறு எந்த குறுக்கு வழியும் தெரியவில்லை. அவசரத் தேவைக்கு என்று தன் இடுப்பில் அதுவரை கட்டி வைத்திருந்த தங்க மோதிரத்தை எடுத்தார், விற்றார். 19 ரூபாய் கிடைத்தது. அதை வைத்துக்-கொண்டு பயணச்சீட்டை வாங்கினார், ரயிலே-றினார். அஸ்ஸன்சூல், பூரி என்று இரண்டு இடங்களில் இறங்கி சில நாட்கள் தங்கினார். அப்புறம் கிளம்பி எல்லூர் என்ற இடத்திற்கு போனார். எதிர்பாராத விதமாக எல்லூரிலும் அவர் வாழ்க்கை மீண்டும் ஒரு முறை திசை மாறியது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...