Sunday, August 16, 2009

தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா பேட்டி


பெரியாரின் கருத்துகளைப் படித்த பிறகுதான் வாழ்வில் எதிர்நீச்சல் போட கற்றுக் கொண்டேன்
தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா பேட்டி

பெரியாரின் கருத்தை படித்த பிறகுதான் வாழ்க்கை போகிற போக்கில் வாழாமல், எதிர்த்து நின்று வாழ்ந்திட எண்ணினேன். எதிர்க்கேள்வி கேட்பது, எதிர் சிந்தனை உருவாவது என இதுபோன்ற விசயங்களில் பெரிய ஒரு தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாக்கியது. வீட்டிலேயே இருந்துவிட்டு, திருமணம், குழந்தைகள் என்று போய்விடுவதுதான் வாழ்க்கை என்பதைத்தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள எனக்கு உடன்பாடில்லை.

பெண்ணுரிமைக்காக எவ்வளவோ பெண்கள் போராடியிருக்கிறார்கள் உலகெங்கும். ஆனால் ஓர் ஆணாகப் பிறந்து, தந்தை பெரியார் அவர்கள் போராடிய அளவுக்கு, சிந்தித்த அள-வுக்கு உலகில் எந்தச் சிந்தனை-யாளரும் எழுதியதோ, பேசியதோ, போராடியதோ, அதில் வெற்றி பெற்றோ இருப்பதாக நமக்குத் தெரிய-வில்லை. உலகில் எந்த மூலையில் பெண்களுக்கு எதிரான ஆதிக்கம் நிலைத்தாலும் பெரியாரின் பெண்ணு ரிமைச் சிந்தனைதான் அடிமை விலங்கொடிக்கக் கிடைத்த மிகப்பெரும் அறிவாயுதம். இதி-லிருந்து விடுபட்ட, விடுதலையான பெண்கள் இன்று சமூக விரோத மான கட்டுப்பாடுகளை உடைத்-தெறிந்து சகல துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். இசுலாமிய மதத்தில் பிறந்திருந்தும், ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்திருந்தும், தடைகள் பல தாண்டி, தளராத முயற்சியுடன் தொடர்ந்து பல்வேறு புத்தகங் களையும், பெரியாரின் அறிவுக் கருத்-துகளையும் படித்து, தன்னை சிறந்த கவிஞராக, மக்கள் பிரதிநிதியாக, எழுத்தாளராக இன்று மாநிலம் தழுவிய தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் எனும் முக்கிய பொறுப்பில் அமர்த்தக்கூடிய அளவுக்கு தயார் படுத்திக் கொண்டவரும், கவிஞர் சல்மா என்று நம் அனைவராலும் அறியப்பட்டவருமான சல்மா அவர்களுடன் விடுதலை விருந்தினர் பக்கத்திற்காக நேரடி சந்திப்பிலிருந்து.....

உங்களுக்கு கவிஞர், எழுத்தாளர், மக்கள் பிரதிநிதி, சமூகநலவாரிய தலைவர் என பல முகங்கள் இருக்-கின்றன. அடிப்படையில் தாங்கள் எப்படி இந்நிலையை அடைந்தீர்கள் என நாம் கேட்டபோது அதற்கு கவி-ஞர் சல்மா அளித்த பதிலிலிருந்து.....

திருச்சி மாவட்டம்-- துவரங் குறிச்சிதான் நான் பிறந்தது படித்தது எல்லாமே. பொதுவாக கிராமங்களில் கல்வியின் நிலை எப்படி இருக்கு மென்று நமக்குத் தெரியும். அவ்வள-வாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். அதிலும் இசுலாமியக் குடும்பங்களில் பெரிய அளவுக்கு கல்வியில் ஆர்வம் காட்டியதில்லை. எனக்கும் அதே போல 9-- ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கிடைத்தது. திருமணம் வரைக்கும் வீட்டில் இருக்க வேண்டிய சூழல். எனக்குக் கிடைத்த நேரத்தில் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம். முக்கியமாக பக்கத்-தில் இருந்த ஒரு நூலகத்தில் அதிகம் படித்தேன். எவ்வளவோ புத்தகங் களை நான் படித்திருந்தாலும் கூட, பெரியாருடைய கருத்துகள் என்னை இளம்வயதில் மிகவும் பாதித்தது என்றே சொல்ல வேண்டும். இது வரை சரி என்று நம்பிக் கொண்டி-ருந்த ஒரு விசயத்தை பெரியார் தவறு சொல்வார். புனிதத் தன்மையாக நம் பிக்கொண்டிருந்த ஒரு விசயத்தை மறுப்பார். திருமணம், தாலி போன் றவை பெண்ணடிமைத் தனம் என் பது அன்றாட வாழ்வில் இருப்பது நமக்கு தெரியவில்லை. அனைத்-தையுமே மறுபரிசீலனைக்கு உட்-படுத்துவார். இதுவா, இப்படியா என கட்டுகளை உடைப்பதற்கு அய்யா தூண்டினார்.

பெரியாரின் கருத்தை படித்த பிறகுதான் வாழ்க்கை போகிற போக்கில் வாழாமல், எதிர்த்து நின்று வாழ்ந்திட எண்ணினேன். எதிர்க் கேள்வி கேட்பது, எதிர் சிந்தனை உருவாவது என இதுபோன்ற விசயங்-களில் பெரிய ஒரு தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாக்கியது. வீட்டிலேயே இருந்துவிட்டு, திரு மணம், குழந்தைகள் என்று போய் விடுவதுதான் வாழ்க்கை என்பதைத் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்-டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள எனக்கு உடன் பாடில்லை. எனக்கு என்று சில தனித் தன்மைகள் இருக்க வேண்-டுமென நினைத்தேன். வாசிப்பதில் இருந்த ஆர்வத்தினால் எனக்கு இந்த சமூகத்தின் மீதிருந்த பார்வைகள், விமர்சனங்களை எழுதத் தொடங்-கினேன். கவிதைகளாக அது வந்தது. என்னுடைய கவிதைகள் எல்லாமே பெண்ணடிமைத் தனத்திற்கு எதி-ரான கருத்துகள் தான். எனக்கு அப்-போது வயது 16தான்.திருச்சியிலிருந்து வெளி-வந்த சில இதழ்களில் வெளியாகின. அதில் கிடைத்த வரவேற்பின் மூலம் மேலும் எழுதத் தொடங்கினேன். என்னுடைய எழுத்துக்களும்--- தற்-செயலாக நிகழ்ந்த அரசியல் பிர-வேசமும்தான் என்னை உயர்த்-தியது. திருமணத்திற்கு பின்பும் எழுதினேன். முற்போக்கு கருத்துகளை எழுதிய-தால் குடும்பத் திலும் சரி, சமூகத்திலும் சரி பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு நான் நிறைய போராட வேண்டியி-ருந்தது. எதிர்கொள்ள நிறைய மன-வலிமை தேவைப்பட்டது. என் வீட்டிலேயே நான் எழுதக்கூடாது என்று தடை போடப்பட்டது. தலை-வர் கலைஞர் அவர்கள் நான் சட்ட-மன்ற தேர்தலில் தோற்று வந்-தாலும், சந்தித்த போது மனம்-தளராதே என்று ஆறுதல் கொடுத்-தார். தளர மாட்டாய்-- என்றும் சொன்-னார்-- என்று பெருமைப்படுகிறார் சல்மா.
மேலும் பெண்ணடிமைத்தனம் அதிகமாக இசுலாமிய மதத்தில் காணப்படுவதாக எழும் குற்றச்சாற்று பற்றி நாம் வினவியபோது, கவிஞர் சல்மா அளித்த பதில் வருமாறு.

பெண்ணடிமைத்தனம் எல்லா மதத்திலும் இருக்கிறது. பார்ப்பனப் பெண்களில் கூட விதவைகள் இருக்கிறார்கள். ஆனால் இசுலாமிய மதத்தில் விதவைகள் திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை என நல்ல விசயங்கள் உள்ளன. நபிகள் நாயகத்தின் மனைவிகூட ஏற்கெனவே விதவையாகவும், வாணிகத்திலும் இருந்திருக்கிறார்.அவரைத்தான் நபிகள் நாயகம் திருமணம் செய்தார். இதற்காக நான் நியாயப்படுத்துவதாக நினைக்கக் கூடாது. மேற்கத்திய இசுலாமிய நாடுகளில் இருக்கும் பெண்களுக்கான சதந்திரம் கூட நமது நாட்டில் இல்லை. இது மதத் தினை வழி நடத்துபவர்கள் சிந்திக்க வேண்டிய விசயம். நம் நாட்டில் பெண்-களை வேலைக்கு அனுப்பக் கூட யோசிக்கிறார்கள். எதிர்காலத்-தில் இது போன்ற நிலைகளில் மறு பரிசிலனை செய்தால் சமூகத்தில் இசுலாமிய மதத்தின் மீது மரியாதை கூடுதலாகும். எல்லா மதங்களும், சமூகக் கட்டுப்பாடுகளும் பெண்ணை ஒரு பொருளாகவே பார்க்கின்றன. இதிலிருந்து சமூகம் விடுபட பெரி-யாரியல் மட்டுமே உதவும் என்கிறார் கவிஞர் சல்மா. அவரிடத்தில் , மென்-மேலும் பல சாதனைகள் தொடர்ந்-திட வாழ்த்துகளைக் கூறி விடை-பெற்றோம்.

நேர்காணல்: நம்பியூர் சென்னியப்பன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...