Monday, February 17, 2020

கரோனா வைரஸ் ‘‘தீயவர்களை அழிக்க கடவுள் எடுத்த ருத்ர அவதாரமாம்!''

என்னே கொடுமை!

இந்து மகாசபைத் தலைவரின் மடமைப் பேச்சு
கரோனா ஒரு வைரஸ் அல்ல, அது ‘கடவுளின் அவதாரம்,  மாமிசம் சாப்பிடுபவர்களை அழிக்க வந்த ருத்திர அவதாரம்' என்று உளறித் தள்ளியுள்ளார் இந்து மகாசபைத் தலைவர்.
சுவாமி சக்கராபாணி இந்துமகா சபை தேசியத்தலைவர். இவர் மடத் தனமான பேச்சுக்கு சொந்தக்காரர், கரோனா வைரஸ் குறித்து இவர் கூறியதாவது, “கரோனா வைரஸ் என்பது நோய் கிருமி அல்ல, அது கடவுளின் ருத்திர(கோப) அவதாரம். அசைவம் சாப்பிடுபவர்களை எல்லாம் தண்டிக்க கடவுளே கரோனா உருவில் அவதாரமாக வந்துள்ளார்.
முன்பு விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து தீயவர்களை அழித்தார், அதே போன்று இப்போதும் அந்த கோப ருத்ர அவதாரம் சீனர்களுக்கு பாடம் புகட்ட வந்துள்ளது, அவர்கள் விலங் குகளை கொடுமைப்படுத்தி உண்ப வர்கள். இந்த அவதாரம் தான் சீனர் களை பழிவாங்குகிறது.  இதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாக சீன அதிபர் ஜின்பிங்குவிற்கு இந்து மகாசபைத் தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார். ‘‘சீனர்கள் அனை வரும் கரோனா வைரஸ் சிலை செய்து அதை வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். சீனா வில் உள்ள அத்தனை அசைவம் சாப் பிடுபவர்களும் தொடர்ந்து கரோனா சாமி சிலையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதன்மூலம் கரோனா கோபம் தணிந்து நோய் பிடியிலிருந்து சீன மக்கள் காப்பாற்றப்படுவார்கள்''
இந்தியாவில் கடவுளைக் கும்பிடுபவர்களும், பசுப்பாதுகாவ லர்களும் கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து காப்பாற்றப்படு வார்கள்.  இவர்களை கரோனா கடவுள் ஒன்றுமே செய்யமாட்டார்
மருத்துவ அறிவியல் அடிப்படையில் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர சீன அரசு முயற்சிகள் எடுத்து வரும் வேளையில் இந்து மகாசபைத் தலைவரின் அறிவியல் அறிவே இல்லாத மூடப் பேச்சு உலக அரங்கில் நகைப்புக்கு இடமாகி வருகிறது!
மகாசபைத் தலைவர் ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு கரோனா வைரசுக்கு மாட்டுச்சாணியை உடலில் பூசிக்கொண்டு, மாட்டு மூத்திரத்தில் நாள்தோறும் குளித்தும் அதைக் குடித்தும் வந்தால் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறி சீனர்களுக்கு இந்த மருந்தை பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்ததும் குறிப் பிடத்தக்கது சீனாவில் ஜனவரி மாத இறுதியில் பரவிய 'கரோனா' வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவில் 'கரோனா' வைரஸ் தாக்கம் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்துகொண்டு இருக்கிறது, சீனாவில் மாத்திரம் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பேரில் இதுவரை 11 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...