Friday, February 21, 2020

கேமராக்களால் நோயை கண்டறிய முடியுமா?

சீனாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்று கேட்டு சீன அரசாங்கம் கடந்த வாரம் அந்நாட்டிலுள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியதாக கூறுகிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.
அதன்படி, தற்போதுள்ள தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் திட்டங்கள் குறித்து அந்நிறுவனங்கள் அறிக்கை சமர்பித்துள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக, சீன அரசின் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்களின் மூலம் காய்ச் சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்ட றியும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி யுள்ளதாக மெக்வி எனும் நிறுவனம் அறிவித்தது. அதாவது, அதிநவீன இன்ஃராரெட் கேமராவை கொண்டு ஒருவரது உடல் வெப்பநிலையை கண்டறிந்து அதை அந்த நபரின் தனிப்பட்ட தரவுகளின் ஒப்பிடும் வகையிலான தொழில் நுட்பத்தை சாத் தியப் படுத்தியுள்ளதாக இந்த நிறுவனம் கூறுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை கொண்டு இயங்கும் இந்த திட்டம் ஏற்கெனவே சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சோதனை முறையில் நடை முறையில் உள்ளது. இந்த வகையில் பார்த்தோமானால், சீனாவில் ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள கோடிக்கணக்கான கண்காணிப்பு கேமராக்களை அடிப்படை யாக கொண்டே கொரோனா பாதிப்புள் ளவர்களை கண்டறியும் இந்த செயலியை சீனா அறிமுகப்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...