ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் தேச
விரோதிகள் என சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில், மாற்று மதத்தை சேர்ந்த
உயிரிழந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்துக்காக காவல்துறையினர் ஏற்படுத்தி
வைத்திருந்த தடுப்புகளை திறந்து ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் வழிவிட்ட
சம்பவம் அனைவரையும் நெகிழ்ச் சியில் ஆழ்த்தியுள்ளது
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரமும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும்
பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி,
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான்,
வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவில்
குடியேறிய இஸ் லாமியர்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள்,
பார்சிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சட்ட
விரோதமாகக் குடியேறியவர்களா கக் கருதப்பட மாட்டார்கள். அவர் களுக்கு
குடியுரிமை வழங்கப்படும்.
இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற
மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது
பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்து விடும் என அஞ்சுவது,
இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என் பன
உள்ளிட்ட பல்வேறு அம்சங் களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும்
போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.
அந்த வகையில் டில்லியின் ஷாகீன்பாக்கில்
பெண்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதியான போராட்டம் கடந்த டிசம்பர் மாதம்
15ஆம் தேதி முதல் நடை பெற்று வருகிறது. பெரும்பாலான இஸ்லாமிய பெண்களை உள்ள
டக்கிய இந்தப் போராட்டமானது, குடியுரிமை திருத்தச் சட்டம் மட்டுமல்லாமல்,
அதற்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான
காவல்துறையினரின் தாக்குதல், தேசிய குடிமக்கள் பதிவேடு, அதிகரிக்கும்
வேலைவாய்பின்மை, பெண்கள் பாதுகாப்பு இன்மை உள்ளிட்டவை களையும் கண்டித்து
நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தால் டில்லி யின் முக்கிய
நெடுஞ்சாலையான கலின்டி - ஷாகீன்பாக் சாலை பகுதியில் காவல்துறையினர் தடுப்பு
களை ஏற்படுத்தி வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து சேவை
துண் டிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன. மேலும் ஷாகீன்பாக்
போராட்டக்காரர்களை தேச விரோதிகள் என மத்திய பாஜக அரசு சித்தரித்து
வருகிறது.
இதனிடையே, குடியுரிமையை காக்கும்
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், டில்லி சட்டப் பேரவைத் தேர்தலில்
வாக்களித்து தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டி நெகிழ்சியை ஏற்படுத் தினர்.
இந்நிலையில், மாற்று மதத்தை சேர்ந்த உயிரிழந்த ஒரு வரின் இறுதி
ஊர்வலத்துக்காக தடுப்புகளை திறந்து ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் வழிவிட்ட
சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment