Monday, February 17, 2020

மார்ச் 31 க்குள் ஆதார் உடன் பான் கார்டு இணைக்க வேண்டும்: வருமானவரித்துறை அறிவிப்பு

ஆதார் உடன் இணைக்கப்படாவிட்டால் மார்ச் 31 க்குப் பிறகு பான் கார்டு செயல் இழக்கும் என வருமானவரித்துறை அறிவித்து உள்ளது.
2020 மார்ச் 31 க்குள் ஆதார் உடன் இணைக்கப்படாவிட்டால் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு ) செயல் இழக்கும்   என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டது மற்றும் தற்போதைய காலக்கெடு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. ஜனவரி 27, 2020 வரை, 30.75 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள்  ஏற்கெனவே ஆதார் உடன் இணைக்கப்பட் டுள்ளது. இருப்பினும், 17.58 கோடி பான் கார்டுகள்  இன்னும் 12 இலக்க ஆதார் பயோமெட்ரிக் அய்டியுடன் இணைக்கப்படவில்லை.
ஜூலை 1, 2017 நிலவரப்படி நிரந்தர கணக்கு எண் ஒதுக்கப்பட்ட மற்றும் 139ஏஏ பிரிவின் துணைப்பிரிவு (2) இன் கீழ் தனது ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டிய ஒரு நபர், 2020 மார்ச் 31 அல்லது அதற்கு முன்னர் அதை தெரிவிக்கத் தவறிவிட்டால் அத்தகைய நபரின் நிரந்தர கணக்கு எண்  (பான் கார்டுகள்) அந்தச் சட்டத்தின் கீழ் அளித்தல், அறிவித்தல் அல்லது மேற்கோள் காட்டுதல் ஆகியவற்றுக்காக குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு உடனடியாக செயல்படாது
மார்ச் 31, 2020 க்குப் பிறகு ஆதார் உடன் பான் இணைப்பவர்களுக்கு, அய்டி துறை  ஆதார் எண்ணைத் தெரிவித்த நாளிலிருந்து செயல்படும். என மத்திய நேரடி வரி வாரிய (சிபிடிடி)  அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139 ஏஏ (2), ஜூலை 1, 2017 நிலவரப்படி பான் வைத்திருக்கும், ஆதார் பெற தகுதியுள்ள ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம்  2018 செப்டம்பரில் ஆதார் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று அறிவித்து, வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கும், பான் கார்டுகளை ஒதுக்குவதற்கும் பயோமெட்ரிக் அய்டி கட்டாய தேவை என்று  கூறியது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...