Thursday, February 20, 2020

சீனா: கரோனா வைரஸ் தாக்குதல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004 ஆக அதிகரிப்பு


கரோனா வைரஸ் தொற் றால் சீனாவில் உயிரிழந்தோரின் எண் ணிக்கை 2,004-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் 74,185ஆக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாள்களாக புதிதாக நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கை மட்டுப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென்று அது பல மடங்கு உயர்ந்ததற்கு நோய் இருப்பதை உறுதி செய்யப் பயன்படுத்தும் அளவு கோல் விரிவாக மாற்றப்பட்டுள்ளதே காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில் ஜப்பானில் சிக்கியுள்ள டைமண்ட் பிரின்ஸஸ் என்னும் கப்ப லில் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர் களும் உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், இரண்டு இந்தியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் மக்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் 24 மணி நேரமும் போராடி வருகின்றனர். ஆனால் மருத்துவர்களே கரோனாவுக்கு பலியாவது மேலும் சோகத்தை அதிகரித் துள்ளது. அந்த வகையில், வுகானின் வுச்சங் மருத்துவமனையின் இயக்குநர் லியு ஜிமிங் காலமானார். இவர் கரோனா வைரசை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக போராடி வந்துள்ளார்.
ஏற்கெனவே கொரோனா பற்றி முதல் முதலில் தகவல் தெரிவித்த மருத்துவர் லி வென்லியாங் வைரஸ் பாதிப்பால் இறந்த மருத்துவர் வென்லியாங் மர ணத்தை போலவே ஜிமிங் மரண செய்தி விஷயத்திலும் சீன அரசை அந்நாட்டு மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். கரோனாவுக்கு பலியாகும் 2ஆவது மூத்த மருத்துவர் ஜிமிங் ஆவார். அவரது மறைவுக்கு சீன அரசும், பொதுமக்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, வைரஸ் தொற்றால் 6 மருத்துவ பணியாளர்கள் இறந்துள்ள னர். 1,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் வுகானில் மருத்துவர்களுக்கு தேவையான மாஸ்க், உடல் முழுவதும் போர்த்திய ஆடைகள் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. ஒரு மருத்துவர் பயன் படுத்திய பாதுகாப்பு உபகரணங்களை அவரது பணி முடிந்ததும் அடுத்தவர் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதோடு மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையும் அங்கு ஏற்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சீன அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட் டவர்களுக்கு வீடு வீடாக சென்று மருத் துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. வைரஸ் அறிகுறியுடன் வீட்டில் பதுங்கி யிருப்பவர்கள் வலுக்கட்டாயமாக மருத் துவமனைக்கு இழுத்து வரப்படுகின்றனர். அதோடு, மருந்து கடை மற்றும் இணை யம் மூலம் காய்ச்சல் மருந்து வாங்குப வர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படு கின்றனர். கரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நோயாளி தும்மினாலோ, இரு மினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாகக் கூட கொரோனா பரவும் வாய்ப்புள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சன் விடோங் முன்னதாக அளித்த பேட் டியில் கூறியதாவது: சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதேபோல் வைரஸ் தொடர்ந்து பரவா மல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வைரசுக்கு எதிரான சண்டையில் சீனா நிச்சயம் வெற்றி பெறும். வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசு 80,000 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. சீனாவிடம் வைரசுக்கு எதிராக போராடுவதற்கான அனைத்து வளங்களும் உள்ளது என கூறியது குறிப் பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...