Tuesday, August 6, 2019

காஷ்மீர் : மத்திய அரசு முடிவுக்கு கண்டனங்கள்

மோடி தலைமையிலான அரசின்

மிக மோசமான நடவடிக்கை - மெகபூபா முக்தி

சிறீநகர்,ஆக.6, ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கும் சட்டப்பரிவான 370 ரத்து செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜம்மூ  - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இது குறித்து அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மோடி  அரசு  செய்வது  மிக மோசமான நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டி ருக்கும் மெகபூபா முப்தி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
"இந்திய ஜனநாயகத்தின் மிக மோசமான நாள் இன்று. 1947 செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 2 தேசங்களுக்கான கொள்கை பொய்த்து விட்டது. 370-ஆவது சட் டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்கிற இந்திய அரசின் முடிவு சட்டத்துக்கு எதிரானது மற்றும் அரசியல் சாசனத்துக்கு முரணானது.
இதன் மூலம் ஜம்மூ காஷ்மீரை, இந்தியா ஆக்கிரமிப்பு செய்யும்படி ஆகும் என்று மெகபூபா கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர். காஷ் மீரில் இணைய சேவை மற்றும் போன் சேவை துண்டிக்கப்பட்டுள் ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய அரசு, மிகவும் அசாதாரண வகையில் அமர்நாத் சென்ற பயணி களை உடனடியாக மாநிலத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது.
இது குறித்து மெகபூபா, இன்னும் எவ்வளவு மணி நேரத்துக்கு என் னால் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரியவில்லை. இதைப் போன்ற ஒரு இந்தியாவையா நாம் எதிர்பார்த்தோம்" என்றார்.
"மோசமான விளைவுகள் ஏற்படும்!"

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கருத்து!

சிறீநகர்,ஆக.6,"இந்திய அரசு இன்று எடுத்துள்ள தன்னிச்சை யான முடிவு, ஜம்மூ காஷ்மீர் மக்கள் இந்திய அரசு மீது வைத் திருந்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டது" "இந்த முடிவு எதிர் பார்க்க முடியாத மிகவும் ஆபத் தான விளைவுகளைக் கொடுக்கும்"
மத்திய அரசு, ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்புத் தகுதி சட்டப் பிரிவான 370-அய் ரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து, அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.   நாடாளுமன்றத்தில்  உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப் படுகிறது என்றும் அது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். மேலும் ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜம்மூ - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேச மாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிர தேசமாகவும் மாற உள்ளது என்றும் அமித்ஷா கூறினார்.
வீட்டுச்சிறையில் இரண்டு நாட்களாக வைக்கப்பட்டி ருந்த காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலர் கைது செய் யப்பட்டு அரசினர் விருந் தினர் மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதில் அம்மாநில முன்னாள் முதல்வரான ஒமர் அப்துல்லாவும் அடங்குவார்.  இந்திய அரசு இன்று எடுத் துள்ள தன்னிச்சையான முடிவு, ஜம்மூ காஷ்மீர் மக்கள் இந்திய அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. அந்த நம்பிக்கையினால்தான் 1947 ஆம் ஆண்டு காஷ்மீர் இந்தி யாவுடன் இணைக்கப்பட் டது. இந்த முடிவு எதிர்பார்க்க முடியாத மிகவும் ஆபத்தான விளைவுகளைக் கொடுக்கும்.
இது மாநில மக்களுக்கு எதிரான வன்முறையே ஆகும் என்று கறாரான முறையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் அப்துல்லா.

காஷ்மீரின் சிறப்புத் தகுதி ரத்து தலைவர்கள்  கண்டனம்
மு.க.ஸ்டாலின்

நேற்று (5.8.2019) திராவிட முன்னேற்றக் திமுக தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வர் தளபதி மு.க.ஸ்டாலின் சென்னை தேனாபேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய் தியாளர்களை சந்தித்து பேசி னார்.
அவர் பேசிய விவரம் பின்வருமாறு:
ஜம்மு காஷ்மீர் மக்களுடைய ஒப்புதலைப் பெறாமல். சட்டப்பிரிவு 370-அய் பயன்படுத்தி ஒரு ஜனநாயகப் படுகொலையை இன்றைக்கு அரங் கேற்றி இருக்கின்றார்கள். மாநில தகுதியில் இருந்து லடாக், ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு விரோதமாக அமைந் திருக்கின்றது. இப்படிப்பட்ட ஜனநாயகப் படு கொலை செய்யப்பட்டிருப்பதற்கு அ.தி.மு.க.வும் துணை போயிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, அ.தி.மு.க.வைப் பொறுத்த வரையில், அ.தி.மு.க என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டால் தான் அது பொருத்தமாக இருக்கும். எனவே, நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வேண்டுகோளாக எடுத்துவைப்பது. காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமையும் வரையில் குடியரசுத் தலைவருடைய இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தி.மு.கழகத்தின் சார்பில் நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
கே.எஸ். அழகிரி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காங்கிரஸ்  கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:- காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் மோடி மிகப்பெரிய தவறை செய்து வருகிறார். காஷ்மீரில் உள்ள முஸ்லீம் மக்கள் இந்தியாவுடன் தான் சேருவோம் என இன்றளவும் கூறி வருகின்றனர். தற்போது அங்கு முன்னாள் முதல்வர்களை கைது செய்து வருவது சரியான தீர்வாக இருக்காது. இதனால் அங்கு மேலும் பதட்டமே ஏற்படும்.   நாடு சுதந்திரம் அடைந்த போது ஜவஹர்லால்நேரு மற்றும் உயர்மட்ட தலைவர்களின் சமாதானத்தில் தான் அன்றைக்கும் காஷ்மீர் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலத்தை உருவாக்கினார்கள். அதனை மாற்ற முயன்றால் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.  இவ்வாறு அவர் கூறினார்.
திருமாவளவன்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு மக் களவையில் பெரும்பான்மையை பயன்படுத்தி கூட்டத்தொடரில் ஏராளமான மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றினார்கள். அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? என்ற அச்சத்தில் இருந்த போது திடீரென ஜம்மு-காஷ்மீரில் ஆயிரக்கணக்கான ராணுவத்தை குவித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தனர். முன்னாள் முதல்- அமைச்சர்கள் வீட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  காஷ்மீர் மாநிலத்துக்கு தனித் தகுதி வழங்கி அந்த மாநிலத்தை சேர்ந்த வேறு யாரும் நிலத்தை வாங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் அவற்றை தகர்த்து மாநிலத்தை 2 ஆக பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்து உள்ளனர். இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. அரசி யலமைப்பு சட்டத்துக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
கே.எம். காதர் மொகிதின்

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புத் தகுதியை ரத்து செய்ததற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதின் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய அரசியல் சாசனத்தில் 370ஆவது பிரிவு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கியுள்ளது.
அதேபோல் கிழக்கிந்திய மாநிலங்களான நாகாலாந்து, அசாம், மிசோரம், மணிப்பூர், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம்,      மகாராட்டிரம், குஜராத், கோவா என்பன போன்ற மாநிலங்களுக்கும் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டி ருக்கிறது. வேறு எந்த மாநில சிறப்புத் தகுதியையும் நீக்காத மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை மட்டும் நீக்குவது ஏன்?.  மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்.
யூனியன் பிரதேசங்கள் ஆக உள்ளவை எல்லாம் மாநில தகுதியை கேட்டுக் கோரிக்கை வைக்கும் இக்காலத்தில் காஷ்மீரும், ஜம்முவும் யூனியன் பிரதேசங்களாக்கப்படுகின்றன என்றால் அது ஜனநாயகப் படுகொலை. சர்வாதி காரம் நீடித்த வரலாறு இந்திய நாட்டில் இல்லை. காஷ்மீரில், மத்திய அரசு, நரகத்தின் வாயில்களைத் திறந்து விட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கண்டனம்
இந்தியாவின் தலையை வெட்டி விட்டார்கள்

குலாம்நபி ஆசாத் ஆவேசம்

புதுடில்லி,ஆக.6, நாடாளு மன்றத்தில்  மாநிலங்களவையில், காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் மசோதா மீதான விவாதத்தில், காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சரும், மாநிலங் களவை எதிர்க்கட்சி தலைவரு மான குலாம்நபி ஆசாத் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:- காஷ்மீர் குறித்து உள்துறை அமைச்சர் பேசியபோது, சபையில் அணு குண்டு வெடித்ததுபோல் இருந் தது. இந்தியாவின் கிரீடமாக, தலையாக காஷ்மீர் இருந்தது. அந்த தலையை வெட்டுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், வெட்டி விட்டார்கள்.
இந்த அறிவிப்பின் மூலம், இந்திய வரைபடத்தில் இருந்து காஷ்மீர் நீக்கப்பட்டு விட்டது. அதன் அடையாளம் அழிக்கப் பட்டு விட்டது. அதை வெறும் யூனியன் பிரதேசமாக மாற்றி விட்டார்கள். துணைநிலை ஆளுநர் மூலம் நிர்வகிக்க விரும் புகிறார்கள்.
காஷ்மீர் மக்கள், இந்திய இராணுவத்தின் பக்கமே இருந் தனர். ஒரே மதமாக இருந்த போதிலும், பாகிஸ்தானை தவிர்த் தனர். அதற்கு பதிலாக இந்தியா வின் மதச்சார்பின்மையை ஏற்றுக்கொண்டனர்.
ஆனால், இன்று நீங்கள் மீண்டும் பிரிவினைக்கு அடித் தளம் அமைத்து இருக்கிறீர்கள். மசோதாக்கள் மூலமாக ஒருங் கிணைப்பு வராது. இதயம் மூல மாகவே வரும். இந்த மசோதா நிறைவேறும்போது, அது இந்திய வரலாற்றில் கரும்புள்ளியாக அமையும்.
நீங்கள் காஷ்மீரை சாதாரண மாக எடுத்துக்கொள்கிறீர்கள். அதிகார போதையில் மாநிலத் தின் வரலாற்றை நசுக்கப் பார்க் கிறீர்கள். இதுபோல், குஜராத்தை யூனியன் பிரதேசமாக்க மசோதா கொண்டு வரத் தயாரா? புதிய இந்தியா என்று பேசிக்கொண்டு, பழைய இந்தியாவை உடைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் பேசினார்.
பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில், குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், நாட்டுக்கு பா.ஜனதா துரோகம் செய்து விட்டதாகவும், காஷ்மீரை துண்டு துண்டாக உடைத்து விட் டதாகவும் குற்றம் சாட்டினார்.
காஷ்மீர் மக்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர்!

டி.ஆர்.பாலு கண்டனம் - தி.மு.க. வெளிநடப்பு!

புதுடில்லி,ஆக.6, மத்திய பா.ஜ.க. ஆட்சி மேற் கொண்ட திடீர் நடவடிக்கையால் காஷ்மீர் மக்கள் பயத்திலும் அச்சத்திலும் உறைந்து போயுள்ளனர். அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெற வில்லை என்று மக்களவையில் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.
மக்களவையில் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசிய தாவது:
காஷ்மீரில் நூற்றுக்கணக்கான கல்வி நிலையங்கள் மூடப்பட் டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற் பட்டவர்கள் ஊர்களுக்குத் திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றனர், அமர்நாத் சென்ற சுற்றுலாப் பயணிகள் அவசர அவசரமாக தங்களது சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் பயத்திலும் அச்சத்திலும் உறைந்து போயிருக்கின்றனர்.
மசோதா தாக்கல் செய்யாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது முறையானதுதானா? எங்களுக்கு நீங்கள்தான் பாதுகாப்பு தர வேண்டும்.. இப்போது மசோதா தராமலேயே நிறைவேற்றி இருப் பது எந்த வகையில் நியாயம்?
முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக சட்டத்தின் ஆட்சி அங்கு இல்லை. இந்த அரசு தவ றான செயலில் ஈடுபட்டு வரு கிறது. இந்த நாடு இந்த அரசிட மிருந்து உரிய நியாயத்தை எதிர் பார்க்கிறது. மக்களுக்கு இதுபற்றி விளக்க வேண்டும். எனவே சட் டத்தின் ஆட்சி இல்லை என்று கூறி வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு டி.ஆர்.பாலு பேசி யதும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...