வீட்டுக்காவலில் கட்சித் தலைவர்கள்;
நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு!
ஜம்மு காஷ்மீர் மாநி லத்துக்கு சிறப்பு
அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 அய் ரத்து செய்ய அமைச் சரவை முடிவு
செய்துள்ளதாக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக் கிடையே மாநிலங்களவையில்
உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். தலைவர்கள் வீட்டுக்காவலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு
அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370அய் ரத்து செய்ய அமைச் சரவை முடிவு
செய்துள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பு குரலெழுப்பின. நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடு பட்டன.
இரண்டாக பிளவுபடுகிறது காஷ்மீர்
காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து மத்திய அரசு அறிவித்துள் ளது.
சட்டப்பிரிவுகள் 370, 35ஏ சொல்வ தென்ன?
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில்,
பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு
அந்தஸ்தை வழங்கியுள்ளது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைக் கப்பட்ட போது, மன்னர்
ஹரிசிங், தன் மக்களின் நலன் கருதி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். இந்து
மன் னராக இருந்தாலும் தன் மக்கள்மீது ஹரிசிங் அளவற்ற பிரியம் கொண்டி
ருந்தார். நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால்தான் இந்தியா வுடன் காஷ்மீரை இணைக்க
ஒப்புக்கொள் வேன் என்பதில் உறுதியாக இருந்தார். பாகிஸ் தான், காஷ்மீரைக்
கைப்பற்ற துடித்துக்கொண்டிருந்த சூழ லில், இந்தியத் தலைவர்கள் காஷ்
மீருக்காக சிறப்பு சலு கைகள் அளிக்க ஒப்புக்கொள் ளப்பட்டனர்.
இந்திய அரசமைப்பு சட் டத்தில், பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை காஷ்மீர் மாநில மக்களுக்கு அளித்து வந்த சிறப்பு உரிமைகளாகும்.
காஷ்மீருக்குள்ள சிறப்பு உரிமைகளை நீக்குவதில் தொடக்க முதலே பி.ஜே.பி., சங் பரிவார்கள் எதிர்த்து வந் தன என்பது குறிப்பிடத்தக் கது.
ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு காங்கிரஸ் தாக்கீது
காஷ்மீரில் நிகழும் பதற் றம் தொடர்பாக
சிறீநகரில் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்
பட்டுள்ளது. மேலும், அம் மாநிலத்தின் முன்னாள் முதல்அமைச்சர்கள் பரூக்
அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித்
தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும்
அசா தாரணமான நிலவரம் தொடர் பாக விவாதிக்கக்கோரி நாடா ளுமன்ற மக்களவையில்
ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதிர் ரஞ்சன்
சவுத்ரி, சுரேஷ், மனிஷ் திவாரி ஆகியோர் தாக்கீது அளித்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள்
முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர்
மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் உள் ளிட்டோர் வீட்டு காவலில்
சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு அரசி யல் கட்சித் தலைவர்கள்
கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் தலைவர் கள் வீட்டுக்
காவலில் வைக் கப்பட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம் பரம்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது சுட்டுரைப் பக்கத்தில்,
அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக்காவ லில் வைத்திருப்பதன் மூலம் ஜனநாயக
விழுமியங்களை மத்திய அரசு தூக்கி எறிந்து வருவதை வெளிப்படுத்துகி றது.
இக்கைது நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது எனப் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment