விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய "தேசிய பொருளாதார பேரிடர் நாள்" சிறப்புப் பொதுக் கூட்டம்..
சென்னை, நவ.9- 2016 நவம்பர் 8 அன்று ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார் அதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்படும் என்று வீராவேசமாகப் பேசினார். ஆனால் அவர் அறிவித்த அய்ந்து மாதங்களுக்குப் பிறகு சென்னை இராதா கிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலின் போது வருமான வரித்துறை கைப்பற்றிய 89 கோடி ரூபாய் கருப்புப் பணமா? வெள்ளைப் பணமா? பிரதமர் மோடி சொல்லட்டும் பார்க்கலாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
8.11.2017 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ‘‘தேசிய பொருளாதார பேரிடர் நாள்’’ பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்
அவரது உரை வருமாறு:
‘‘தேசிய பொருளாதார பேரிடர் நாள்’’
சரியான முடிவுகளை எடுத்து, சரியானவர்களை அழைத்து, சரியான போராட்டக் களத்தை உருவாக் குவதில் தமிழகத்தில் முன்னணியில் இருப்பவர் நம்முடைய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆவார்கள்.
விடுதலை சிறுத்தைகள் ஒரு கச்சேரி செய்துவிட்டு போகின்ற அமைப்பல்ல. பல பேரை கச்சேரிக்குள் தள்ளக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு. அப்படிப்பட்ட ஒரு சிறந்த அமைப்பு - மக்களோடு மக்களாய், உழைக்கின்ற மக்களோடு மக்களாய், பாடுபடுகின்ற மக்களோடு மக்களாய் எந்த மக்கள் தொண்டை மற்றவர்கள் எளிதாக செய்ய முடி யாதோ, அதனை தன்னுடைய சமூகப் பணியாக எடுத்துக்கொண்டு, இன்றியமையாத பணியாகச் செய்யக்கூடிய அந்த மக்களுக்குரிய எழுச்சிச் சின்னமாகத் திகழ்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் இன்றைக்கு இந்த சிறப்பான மத்திய அரசின் பணமதிப்பிழப்பின் விளைவாக - அது எப்படிப்பட்ட விளைவுகளை உருவாகியிருக்கிறது என்று சொல்லும்பொழுது ஒரு சரியான பெயரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
தேசிய பொருளாதார பேரிடர் நாள் - இது வெறும் கருப்பு நாள் மட்டுமல்ல; பேரிடர் - சாதாரண மான இடர் அல்ல - பேரிடர். ஆங்கிலத்தில்,
National Disaster என்று சொல்வார்கள். Demonitisation என்பதற்கும் D தான். Disaster க்கும் D தான்.
ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை நாம் அறிவோம். மக்களுக்கு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அந்தப் பிரச்சினையைக் கொண்டு செலுத்தவேண்டும். அவர்களுக்கு கற்பி - போராடி - ஒன்றுசேர் என்றார் அண்ணல்.
மிக முக்கியமான அந்த அடிப்படையில், இதைப்பற்றி மக்களுக்கு என்ன தெரியவேண்டுமோ, அன்றாடம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு என்னென்ன நிலைமைகள் தெரிய வேண்டுமோ, அதனை ஆழமாக இங்கே கொண்டு வந்து, இங்கே வந்திருக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் தெருக்களில் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான், எல்லோரை யும் அழைத்ததோடு மட்டுமல்ல, ஆழமான சரக்குகளையும் கொடுத்திருக்கிறார்கள்.
நம்முடைய அருமை சகோதரர் தொல்.திருமா அவர்களுடைய தலைமையில் நடைபெறக்கூடிய தேசிய பொருளாதார பேரிடர் நாள் என்பது மேல்மட்டத்தில் இருக்கின்றவர்கள் எங்கோ உட்கார்ந்துகொண்டு பேசக்கூடிய பொருளாதார அம்சங்கள் அல்ல. அடித்தளத்தில் அது எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதையெல்லாம்கூட எடுத்துச் சொல்லக்கூடிய அடித்தள, பாட்டாளி மக்கள், உழைக்கின்ற வர்க்கத்தினருடைய, கீழ்ஜாதி என்று ஒதுக்கப்பட்டு, எங்களை காலங்காலமாகத் தொடக்கூடாதவர்கள், நெருங்கக்கூடாதவர்கள் என்று ஆக்கப்பட்டு இருக்கின்ற மக்களையெல்லாம் கூட இது விட்டு வைக்கவில்லை. அவர்களுக்காகத் தான் முக்கியமாக இந்த மக்கள் அறிக்கை!
ஏதோ முதலாளிகள் அல்லது பணக்காரர்கள், பணம் இருக்கிறது 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருக்கிறார்கள் என்பது மட்டு மல்ல, அன்றாடங்காய்ச்சிகள்கூட எப்படி அவதிப் பட்டார்கள் என்பதை விளக்குகின்ற ஒரு அற்புதமான கருத்தரங்கமாக இதனை அமைத் திருக்கின்ற அருமை சகோதரர் இக்கூட்டத்திற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனார் அவர்களே,
இங்கே சிறப்பாக நல்ல அளவிற்கு அறிமுக உரையை செய்துகொண்டிருக்கக்கூடிய பொதுச்செயலாளர் அன்புத்தோழர் சிந்தனைச் செல்வன் அவர்களே,
மக்கள் அறிக்கையை இங்கே சிறப்பாக வெளியிட்டு, விளக்கிய அருமைப் பொதுச்செயலாளர் இரவிக்குமார் அவர்களே,
அனைவரையும் வரவேற்று உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் அன்பிற்குரிய தோழர் முகமது யூசுப் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் உரையாற்றி விடைபெற்று சென்றிருக்கக்கூடிய சி.பி.எம். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் சவுந்தரராசன் அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹருல்லா அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் அவர்களே,
வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்களே, மற்றும் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த அன்புத் தோழர்களே, தாய்மார்களே, சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டும், இரண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கூட்டினாலும் நான்குதான்; திராவிடர் கழகம் கூட்டினாலும் நான்குதான்
ஏராளமான கருத்துகளை உள்ளடக்கி, மிக அற்புதமான அறிக்கை இங்கே வெளியிடப்பட்டு இருக்கிறது. இன்றைய ‘விடுதலை’யில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையும் இதனுள் அடக்கமாக பல்வேறு செய்திகள். ஏனென்றால், இரண்டும், இரண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கூட்டினாலும் நான்குதான்; திராவிடர் கழகம் கூட்டினாலும் நான்குதான். யார் கூட்டினாலும் நான்குதான். உண்மையைச் சொல்லுகின்றபோது அது வேறுபடாது. கற்பனைகள் வேண்டுமானால் அவ்வப்பொழுது மாறிக்கொண்டே இருக்கும்; பொய்களைச் சொல்லும்பொழுது வேண்டுமானாலும் அது மாறிக்கொண்டே இருக்கும், மோடியினுடைய பேச்சுகளைப் போல!
அந்த மாதிரியான ஒரு சூழல், இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு இந்தச் செய்திகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தச் செய்திகளை தோழர்கள் வெளியே சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்.
என்னென்ன அதனுடைய லாபமோ, அவை அத்தனைக்கும் பதில் கேட்டிருக்கிறார்கள். நோக்கம் நிறைவேறியதா? என்பதுதான் முக்கியம்.
ஓராண்டுகாலம் ஆகியிருக்கிறது; 50 நாள்கள் கொடுங்கள் என்று சொன்னார்கள். ஆனால், ஓராண்டு காலம் ஆகிவிட்டது. இந்த ஓராண்டில், பிரச்சாரத்தின்மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தார்கள்.
புரட்டையெல்லாம் உண்மையைப் போல பிரச்சாரம் செய்கிறார்கள்....
ஜெர்மனியில், கோயபெல்ஸ் என்கிற ஒரு மந்திரி இருந்தார். அவருடைய வேலை என்னவென்றால், பொய்யை, புரட்டையெல்லாம் உண்மையைப் போல பிரச்சாரம் செய்வதுதான். அந்தப் பணியைத்தான் இப்பொழுது பா.ஜ.க. செய்துகொண்டிருக்கிறது.
ஒன்று, ஊடகங்களை மிரட்டுவது; அல்லது ஊடகங்களுக்கு அல்வா கொடுப்பது. இதைத்தவிர அவர்கள் வேறொன்றும் செய்வதில்லை. அந்த அடிப்படையில்தான், ஊடகங்கள் களப்பலியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தக் காலகட்டத்தில், மிகத் தெளிவாக, பல்வேறு செய்திகளை எடுத்து இங்கே சொல்லியிருக்கிறார்கள். கருத்துப் படத்தை எந்த அளவிற்கு இதில் கொண்டு வந்தார்கள் என்று காட்டுகிறபொழுது, நிறைய புள்ளி விவரங்களை எடுத்துக் கூறி இங்கே தோழர்கள் உரையாற்றினார்கள். அடுத்து பேசக்கூடிய பேச்சாளர்கள், தலைவர்கள் இங்கே சுட்டிக்காட்டவும் இருக்கிறார்கள்.
இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி
திருப்பூரில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக சொல்கிறேன்.
இதோ என்னுடைய கைகளில் இருப்பது இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். அதில் ஒரு செய்தி,
Why Tirupur’s Rs 42,000 crore textile hub fears a wipeout
என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதனை தோழர் சவுந்தரராசன் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வேலை வாய்ப்புகள் மற்றவைகளைக் கொடுத்துக்கொண்டு, அதேபோல, அந்நியச் செலாவணிகளைக் கொண்டு வரக்கூடிய அளவிற்கு, கொஞ்சம் வளமான பகுதி என்றால், கோவையைத் தாண்டி திருப்பூர்தான். ஒரு காலகட்டத்தில் கோவைக்கு இருந்த மதிப்பெல்லாம் திருப்பூர்பக்கம் சென்றுவிட்டது.
வேலை வேண்டும் என்கிறவர்கள் எல்லாம் திருப்பூரில் இருப்பார்கள். ஆனால், திருப்பூரில், இருப்பூர் இல்லை. திருப்பூர் இருப்பூராக இருந்தது, இன்றைக்குக் கருப்பூராக மாறிக் கொண்டிருக்கக்கூடிய நாள் இந்த நாள் என்பதை நாம் சொல்லவில்லை. இண்டியன் எக்ஸ்பிரஸ் ஏடு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு நாளேடு, பா.ஜ.க.வினுடைய ஆதரவு ஏடு கூறுகிறது.
யார் யாருக்கு வளர்ச்சி?
சிறு, குறு முதலாளிகளாக இருந்து தொழில் நடத்தியவர்கள் எல்லாம் இன்றைக்கு வெறும் பணியாளர்களாக பணியாற்றக்கூடிய அந்தச் சூழல் வந்திருக்கிறது என்று சொன்னால், வெற்றி என்பதற்கு என்ன அடையாளம்? வளர்ச்சி, வளர்ச்சி என்று மோடி சொல்வார் - யாருக்கு வளர்ச்சி? அதானிக்கு வளர்ச்சி, அம்பானிக்கு வளர்ச்சி, டாடாவிற்கு வளர்ச்சி, ஏன் அவ்வளவுதூரம் போகவேண்டும்? அமித்ஷாவினுடைய மகன் ஜெய்ஷாவிற்கு வளர்ச்சி. சாதாரண வளர்ச்சியல்ல; ஒரு மடங்கு, இரண்டு மடங்கல்ல; 850 மடங்கு வளர்ச்சி. இதுவரையில் மோடி அவர்கள் வாய் திறக்கவேயில்லை.
அதனால்தான், குஜராத்தில் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து எப்படி
மீளுவது? என்ன செய்வது? என்பதற்கான ஒரு நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அதனை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
வரலாற்றுப் பூர்வமான இந்தத் தவறிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. அதோடு குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல், அது குழியும் பறித்ததுபோன்று. பணமதிப்பிழப்பில் இருந்தே மீள முடிய வில்லை. இந்த நேரத்தில், ஜி.எஸ்.டி.யைக் கொண்டு வந்தார்கள்.
இதே அரங்கத்தில் சில மாதங்களுக்குமுன் மாநில உரி மைப் பறிப்பின்போது, நம்முடைய மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவர் அன்புச்சகோதரர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஜி.எஸ்.டி.யைப்பற்றி மிக அழகாக விளக்கினார்.
ஜி.எஸ்.டி. என்கிற மூன்றெழுத்து, திரிசூலம்போன்று வியா பாரிகளைக் குத்தியிருக்கிறது.
‘‘வளர்ச்சி வளர்ச்சி’’ என்று சொல்கிறாரே, பிரதமர் மோடி அவர்கள், மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வளர்ச்சி எவ்வளவு தெரியுமா? 9.2 சதவிகிதமாக இருந்த வளர்ச்சியை 5 ஆகக் குறைத்ததுதான். பா.ஜ.க.வினுடைய அகராதியில் 5 என்பது பெரிதாக இருக்குமோ என்னமோ!
ஏனென்றால், இதுபோன்று கூட்டியே பல மாநில அரசு களை அமைத்திருக்கிறார்கள். மணிப்பூரில் எண்ணிக்கைக் கூடுதலாக இருந்தவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வில்லை. எண்ணிக்கைக் குறைவாக இருந்தவர்களைத்தான் ஆட்சி அமைக்க அழைத்தார்கள்.
மன்மோகன்சிங் அவர்கள் disaster for our economy என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார். அதனை அதிகாரப்பூர்வமாக ஆக்கிய பெருமை தமிழ்நாட்டில், விடுதலை சிறுத்தைகள் பெரியார் திடலில் நடத்துகின்ற இந்த மாநாடுதான்.
இதேபோன்று யஷ்வந்த் சின்கா சுட்டிக்காட்டியதற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதில் சொல்ல முடியா மல், ‘‘80 வயதில் இவர் அப்ளிகேஷன் போடுகிறார்’’ என்கிறார்.
பண மதிப்பிழப்பின் நடவடிக்கையால், சாதாரண மக்கள், காய்கறி விற்பவர்கள், மீன் வியாபாரம் செய்பவர்கள் பாதிக் கப்பட்டார்கள்.
முன்பு இல்லாத அவசரச் சட்டத்தை காஷ்மீரில் இப் பொழுது கொண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் உங்களுக்குத் தெளிவாக சொல்லவேண்டுமானால், 15 லட்சம் முறையான வேலை வாய்ப்புகள் காலி.
எதாவது பிரச்சினை வந்தால், அதெல்லாம் காங்கிரசு கொண்டு வந்தது என்று சொல்கிறார்கள். காங்கிரசு கொண்டு வந்ததை ஒழிப்பது உங்கள் வேலைதானே. காங்கிரசு கொண்டு வந்ததை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்கிறீர்கள்?
‘‘என்னுடைய பிணத்தின்மேல்தான்
ஜி.எஸ்.டி. வரும்’’ என்றார் மோடி
‘‘என்னுடைய பிணத்தின்மேல்தான் ஜி.எஸ்.டி. வரும்’’ என்று முதலமைச்சராக இருந்தபொழுது குஜராத்தில் சொன்னார்.
ஆதார் அட்டையை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று நாடாளுமன்றத்தையே நடக்கவிடாமல் செய்தவர்கள். இப்பொழுது பிணத்தைப் புதைப்பது என்றால்கூட, ஆதார் அட்டை தேவைப்படுகிறது என்று சொல்லக்கூடிய அந்த நிலைக்கு அவர்கள் ஆளாக்கிவிட்டார்கள்.
விவசாயிகளுடைய நிலை என்ன? அவர்களுக்கு வளர்ச் சியா? தளர்ச்சியா?
பண மதிப்பு உயர்ந்திருந்தால், வேலைவாய்ப்பு உயர்ந்தி ருந்தால், குறிப்பாக நிதியமைச்சர் சொன்னாரே, இரண்டு மடங் காக பெருக்குவோம் விவசாயிகளுக்கு என்று - அது நடந்ததா? அதற்கு ஏதாவது இந்தத் திட்டங்கள் உதவி புரிகிறதா?
காங்கிரசு கொண்டு வந்தார்கள், காங்கிரசு கொண்டு வந்தார்கள் என்று சொல்கிறார்களே, அவர்கள் கொண்டு
வந்தபொழுது இருந்த நிலை வேறு. அதற்கு அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள். நிதியமைச்சராக இருந்த சிதம்பரமும் அதற்குப் பதில் சொன்னார்.
அவர்கள் செய்தார்கள் என்று சொல்லவேண்டிய அவசியமே கிடையாது!
ஆனால், ஒன்று, எப்பொழுது ஒரு அரசாங்கம் தோற்கடிக் கப்பட்டு, இன்னொரு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டதோ, ஆட்சி யிலிருந்த கட்சி எதிர்க்கட்சியாக அமர்த்தப்பட்டு விட்ட பிறகு, ‘‘அவர்கள் செய்தார்கள், அவர்கள் செய்தார்கள்’’ என்று சொல்லவேண்டிய அவசியமே கிடையாது. அவர்கள் அப்படி செய்த காரணத்தினால்தானே, மக்கள் ஆட்சியை மாற்றியிருக்கிறார்கள். அப்படியென்றால், அவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்களுடைய கடமை என்ன? என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
கலியுகக் கம்பர் கருத்திருமன்
இப்பொழுது ஒன்று எனக்கு நினைவிற்கு வருகிறது. அண்ணா அவர்கள் முதலமைச்சரானபொழுது, எதிர்க்கட்சித் தலைவராக கருத்திருமன் என்ற காங்கிரசு நண்பர் இருந்தார். கம்பராமாயணத்தில் மிகவும் ஸ்பெஷலிஸ்ட் அவர். கலியுகக் கம்பர் என்றே அவருக்குப் பெயர். எதற்கெடுத்தாலும் கம்ப ராமாயணத்தைப்பற்றியே பேசுவார், சட்டமன்றத்திலேயே!
உங்களுடைய ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று தி.மு.க. நண்பர்கள் சுட்டிக்காட்டியவுடன்,
கலியுகக் கம்பர் கருத்திருமன் சொன்னார்,
‘‘நாங்கள் செய்தோம், நாங்கள் செய்தோம் அடிக்கடி நீங்கள் இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களைக் குற்றம் சொல்லாதீர்கள். அதனால்தான், நாங்கள் இங்கே - நீங்கள் அங்கே என்று சொன்னார்.
அதாவது, எங்களை எதிர்க்கட்சியாகவும், உங்களை ஆளுங்கட்சியாகவும் மக்கள் ஆக்கியிருக்கிறார் என்றார்.
எதிர்க்கட்சியாக மக்கள் ஆக்கியிருக்கிறார்கள் என்று சொல்லும்பொழுதே, அந்த வாதம் பசையுள்ள வாதம் என்று யாரும் எடுத்துக்கொள்ளவே முடியாது.
கருப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்றால், முதலில் கிரிக்கெட் கிரவுண்டுக்குப் போகவேண்டும். அதுதான் மிக முக்கியம். கருப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்றால், தேர்தல் - அந்தத் துறையில் போகவேண்டும்.
ஒரு சட்டமன்ற வேட்பாளர் எவ்வளவு பணம் செலவு செய்யவேண்டும்?
நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள்; இங்கே இருக்கின்ற நண்பர்கள் எல்லோரும் தேர்தலில் நிற்கின்றவர்கள். அப்பட்ட மாக, மனப்பூர்வமாக உண்மையைப் பேசவேண்டும் என்று சொன்னால், ஒரு சட்டமன்றத் தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர் 28 லட்சம் ரூபாய்தான் செலவு செய்யவேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், பெட்ரோல் போட்டுக்கொண்டு அந்தத் தொகுதிக்குள் சென்றுவிட்டு வந்தால்கூட, அந்த 28 லட்சம் ரூபாய் செலவாகி விடும்.
மோடி ஒழித்துவிட்டாரா?
தேர்தல் ஆணையம் தடுத்து இருக்கிறதா?
ஆனால், தேர்தல் முடிந்தவுடன், வெற்றி பெற்றவர், தோற்றவர்கள் எல்லாம் கணக்குக் காட்டும்பொழுது, 27 லட்சத்து 981 ரூபாய்தான் செலவழித்ததாகக் கணக்கு எழுது வார்கள். எல்லா இடங்களிலும் இதுதான் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. இதனை மோடி ஒழித்துவிட்டாரா? அல்லது தேர்தல் ஆணையம் இதனைத் தடுத்து இருக்கிறதா?
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? அதனைப்பற்றி உங்களுக்கு சில விஷயங்களை நினைவுபடுத்துகிறேன்.
ஆர்.கே.நகர் தேர்தல், மோடியினுடைய பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்குப் பின் நடைபெற்றதா? அதற்கு முன் நடந்ததா?
கருப்புப் பணத்தை ஒழிக்கிறோம்; அதில் நாங்கள் வெற்றி அடைந்துவிட்டோம் என்று சொல்கிறார்களே,
12.4.2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என்று சொன்னார்கள்.
தேர்தல் ஆணையம் அதனை ரத்து செய்த நாள் 10.4.2017. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே ரத்து செய்துவிட்டார்கள்.
வருமான வரித்துறையினர் சோதனை செய்த நாள் 7.4.2017.
யார்மீதும் எனக்குத் தனிப்பட்ட முறையில் கோபம் கிடை யாது. நாளேட்டில் வந்த செய்தியை அப்படியே சொல்கிறேன்.
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மொத்தமுள்ள 2,63,696 வாக்காளர்களில் 85 விழுக்காட்டினருக்கு பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு 2,24,145 பேருக்கு தலா ரூ.4000 வீதம் மொத்தம் 89.65 கோடி பணம் விநியோகிக்கப்பட்டதற்கான குறிப்புகள் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தப் பணத்தை முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச் சர்கள் தலைமையிலான 7 குழுக்கள் தான் வினியோகித்துள்ளன.
பழனிச்சாமி தலைமையிலான குழு 33193 வாக்காளர் களுக்கு ரூ.13.27 கோடியும்,
மூத்த அமைச்சர் செங்கோட்டையன் குழு 32,830 பேருக்கு ரூ.13.13 கோடியும் விநியோகித்துள்ளனர்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் ரூ.12.83 கோடி,
தங்கமணி ரூ.12.67 கோடி,
வேலுமணி ரூ.14.91 கோடி,
ஜெயக்குமார் குழு ரூ.11.68 கோடி,
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் குழு ரூ.11.13 கோடி வீதம் வாக்காளர்களுக்கு விநியோகித்ததை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவணங்களில் பதிவு செய்திருக்கிறார்.
எனவே, வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதை, அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவு செய்த ஆவணம் வருமான வரித்துறையிடம் சிக்கியது என்று பத்திரிகையில் வந்த செய்தியை எடுத்துச் சொல்கிறேன்.
இன்றைக்கு 2 லட்சம் ரூபாய்க்குமேல் பணம் இருந்தால், வருமான வரித் துறைக்குத் தெரியவேண்டும்.
ஆனால், கோடிக்கணக்கான அதிகமான பணம் வைத்தி ருந்ததால், இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சி.பி.அய்.க்கும், அமுலாக்கப் பிரிவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தார்கள்.
இதெல்லாம் யாருக்கு? குப்பனுக்கும், சுப்பனுக்கும், நமக் கும்தான். ஆனால், நடந்தது என்ன? தயவு செய்து எண்ணிப் பாருங்கள் நண்பர்களே!
அந்த 89 கோடி ரூபாய் கருப்புப் பணமா? வெள்ளைப் பணமா? நன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
இதைவிட இன்னொரு முக்கியமான செய்தி என்னவென் றால், அதற்கு முன்பாக, 33 கோடி ரூபாயை மாற்றியிருக்கிறார் ஒருவர். எல்லாம் கோடிதான்; லட்சங்களில்கூட பேசுவது கிடையாது அவர்கள்.
ஆக, இவை அத்தனையும் எப்பொழுது, மோடி அறிவித்த பணமதிப்பிழப்பிற்குப் பின்புதான்.
ஆனால், யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா?
அதேநேரத்தில், திருவண்ணாமலையில் வங்கியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கிய விவசாயி கடனைக் கட்டவில்லை யானால், அவரை அடிக்கிறார்கள்.
அதேபோன்று பாப்பாநாட்டில் விவசாயியை அடிக் கிறார்கள்.
கருப்புப் பணம் ஒழிந்தது என்று
சொல்வதற்கு என்ன ஆதாரம்?
ஆகவே, அதானிகளும், அம்பானிகளும், மல்லையாக் களும் வசதியாக இருக்கிறார்கள். இன்னும் பெருமுதலாளிகள் எல்லாம் வசதியாக இருக்கிறார்கள். அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் என்னென்னமோ செய்துகொண்டி ருக்கிறார்கள். அப்புறமென்ன கருப்புப் பணம் ஒழிந்தது என்று சொல்வதற்கு என்ன ஆதாரம்?
ஆகவே, நண்பர்களே! இந்தப் பேரிடர் சாதாரணமானதல்ல.
இறுதியாக ஒன்றைச் சொல்லி என்னுரையை நிறைவு செய்கிறேன். ஜி.எஸ்.டி.யைப்பற்றி சொல்லும்பொழுது - காங்கிரசு மத்தியில் இருந்தபோது, ஒரு சதவிகிதம் கூட்டலாம் அல்லது குறைக்கலாம் என்று சொன்னார்கள்.
ஆனால், இப்பொழுது இருக்கின்ற மத்திய பா.ஜ.க. அரசு என்ன சொல்லுகிறது.
ஆரம்பத்திலிருந்து பூஜ்ஜியம் வரியில்லாதது;
அடுத்தது 3 சதவிகிதம்
அடுத்தது 5 சதவிகிதம்
அடுத்தது 8 சதவிகிதம்
அடுத்தது 12 சதவிகிதம்
அடுத்தது 18 சதவிகிதம்
அடுத்தது 28 சதவிகிதம்
கடைசியாக 40 சதவிகிதம்
இவை அத்தனையும் இத்தனை விகிதாச்சாரம் என்று சொன்னால், ஏறத்தாழ 8 அடுக்குகள் என்று சொல்லும்பொழுது, விவசாயிகளில் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதுதான் இதனுடைய அடையாளம்.
எனவேதான், இந்தப் பேரிடர் அவர் சொன்னதுபோன்று, இரட்டை முகத்தோடு இருக்கிறது. இரட்டைக் கோளாறுகளாக இருக்கிறது. அது மிகப்பெரிய ஆபத்து.
Deliverance Day
எனவேதான், இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, சரியான நேரத்தில் இந்தக் கருத்துகளைப் பரப்பவேண்டும். இதற்கு ஒரே ஒரு வழி என்னவென்று சொன்னால், ஞிமீறீவீஸ்மீக்ஷீணீஸீநீமீ ஞிணீஹ் பீடை ஒழிந்த நாள்.
எனவேதான், இந்தப் பீடையை எவ்வளவு சீக்கிரம் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமோ, அப்படி அகற்றுவது தான் மாற்றுவழியே தவிர வேறு கிடையாது.
எது நம்மைப் பிரிக்கிறது என்று பார்க்கக்கூடாது
அதற்கு நம்முடைய பங்களிப்பு என்ன என்று ஒவ்வொரு வரும் சேரவேண்டும். இதில் எது நம்மைப் பிரிக்கிறது என்று பார்க்கக்கூடாது. சரியான தருணத்தில் நீங்கள் எல்லோரையும் அழைத்திருக்கிறீர்கள். இந்த ஒற்றுமை என்பது அருமையாகக் கட்டப்படவேண்டும்.
மோடி அவர்கள் கலைஞரைப் பார்த்தவுடன், ஊடக நண்பர்கள் எல்லாம் திசை திருப்புவதுபோன்று, மோடி கலைஞரைப் பார்த்துவிட்டார்; கூட்டணி மாறும் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டார்கள். பிரதமர் மோடி கலைஞரைப் பார்த்தது நாகரிகம் என்று எடுத்துக்கொண்டு, அதனைப் பாராட்டவேண்டும்.
மோடி அவர்கள் கலைஞரைப் பார்த்ததில் அரசியல் இல்லை என்று நான் விடுதலையில் அறிக்கையும் வெளியிட்டேன்; நேற்றுகூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் சொல் லியிருக்கிறார்.
எனவே, இந்தப் படையை இனிமேல் யாரும் கலைக்க முடியாது. இந்தப் படையின் அணி அதிகமாகுமே தவிர, அதனுடைய எண்ணிக்கை குறையாது. அந்த ஆசையில் யாரும் இருக்காதீர்கள். அப்படி நீங்கள் ஆசைப்பட்டால், அது நீங்கள் கருப்புப் பணத்தை ஒழித்த கதையாகத்தான் முடியும் என்பதை எடுத்துச் சொல்லி,
இந்த ஒற்றுமை தொடரவேண்டும். எனவே, இந்த ஒற்றுமையைக் கட்டுவதற்குக் காரணமாக இருக்கக்கூடிய மோடி அவர்களே, தொடர்ந்து இப்படிப்பட்ட பணிகளைச் செய்யுங்கள், அப்பொழுதுதான் நாங்களும் தொடர்ந்து எல்லோரையும் ஒற்றுமைப்படுத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும். அதற்கு உங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி என்று கூறி முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
மோடி அரசின் பண மதிப்பு நீக்கம் நவம்பர் 8 -- 'தேசிய பொருளாதாரப் பேரிடர் நாள்' கண்டனக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் மக்கள் அறிக்கை வெளியிடப்பட்டது. (சென்னை, பெரியார் திடல் - 8.11.2017).

No comments:
Post a Comment