Monday, June 12, 2017

கோரிக்கைகள் நிறைவேற்ற முதல்வர் உறுதி: விவசாயிகள் போராட்டம் நிறுத்திவைப்பு




சென்னை, ஜூன் 11- விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிக ளின் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 7.6.2017 அன்று போராட்டம் தொடங்கினர்.
2-ஆவது தினமாக நேற்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழ னிசாமியைச் சந்திப்பதற்காக அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயப் பிரதிநிதிகளை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து அரை மணி நேரம் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக் கூறினர். அதனை முதல்வர் கேட்டறிந்து, விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து போராட் டம் நடைபெறும் இடத்துக்குத் திரும்பிய அய்யாக்கண்ணு அங்கு விவசாயப் பிரதிநிதிகளோடு ஆலோசித்தார். அதில் தாற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறியது: கரும்பு விவசாயிகளுக்கான நிலு வைத் தொகையை இரண்டு மாதங்களில் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத் தருவதாக முதல்வர் உறுதி அளித்து உள்ளார்.
விவசாயிகளின் பயிர்க்க டனை முழுமையாகத் தள்ளு படி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியு றுத்தினோம். இது தொடர்பாக ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பதாகத் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 292 விவசாயிகளின் ரூ.1.5 கோடி பணத்தை எடுத்துச் சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருவதா கவும் உறுதி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அடகு வைத் துள்ள நகைகள் ஏலம் விடப் படுவது முற்றிலும் தடுக்கப் படும் என உறுதி அளித்தார். இதற்கு நிதியமைச்சர் ஜெயக் குமார் 2 மாதங்கள் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட் டத்தை ஒருபோதும் அனும திக்க மாட்டோம் எனவும் உறு தியளிக்கப்பட்டது. அதனால், போராட்டத்தைத் தாற்காலிக மாக நிறுத்தி வைக்கிறோம்.
2 மாதங்களில் எங்களின் கோரிக்கை நிறைவேற்றாவிட் டால், மீண்டும் இதே இடத்தில் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...