Total Pageviews

Monday, November 16, 2015

வடகிழக்கு பருவ மழை: தத்தளிக்கிறது தமிழ்நாடு 385 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகடலூர், நவ. 16_- கடலூர் மாவட்டத்தில் சில நாட் களுக்கு முன்பு சூறாவளிக் காற்றுடன் அடை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறு, வாய்க்கால்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மூழ்கடித்தது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. 21 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத் தில் மூழ்கின. 
இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அடை மழை பெய்தது. கடலூரில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக் களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், நெய் வேலி என மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. பலத்த மழை காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் அவதி அடைந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 10.4 செ.மீட்டர் மழை பதிவானது. கடலூர் கெடிலம், தென் பெண்ணை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வரு கிறது. வீராணம், வாலாஜா, பெருமாள், வெலிங்டன் ஆகிய ஏரிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தும், நீரில் மூழ்கியும் 49 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். இதில் பெரியகாட்டுப் பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் அடங் குவர். இதுதவிர ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடை களும் உயிரிழந்தன. 
இந்நிலையில் நேற்று மழைக்கு மேலும் 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பலியா னோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மாவட் டம் முழுவதும் 385 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு வீரர்களும் படகு களுடன் தயார் நிலையில் உள்ளனர். சூறாவளி காற்றின் வேகத்துக்கும், கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தின் வேகத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்த மின்கம்பங்களை சீர மைக்கும் பணி, குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வீராணம், வாலாஜா மற்றும் பெருமாள் ஆகிய 3 பெரிய ஏரிகளிலும் நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெய்வேலி என்.எல்.சி. சுரங்கங்களில் தேங்கும் தண்ணீரை சில நாட்களுக்கு வெளியேற்ற வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பலத்த மழையால் தாழ் வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி களை மழை வெள்ளம் சூழ்ந்தது. வயல்களில் தண்ணீர் புகுந்ததால் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. உப் பளங்களில் மழைநீர் புகுந்ததால் உப்பள தொழிலா ளர்கள் வேலை பாதிக்கப்பட்டது. மரக்காணத்தில் 2 தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்தன. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அரசு மருத்துவமனையில் மழைநீர் சென்னை புறநகரில் பெய்த பலத்த மழை காரணமாக குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மழைநீர் வெளியில் செல்லும் கால்வாய்கள் நிரம்பியதால் மழைநீர் முழு வதும் மருத்துவமனைக்குள் புகுந்தது. மழைநீர் புகுந்து விடாமல் இருக்க மருத்துவமனை யின் நுழைவு வாயில் பகுதியில் மண்மூட்டைகள் கொண்டு அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். 
ஆனால் அதையும் மீறி மருத்துவமனையின் கீழ் பகுதி முழுவதும் மழைநீர் புகுந்து விட்டது. பிரசவ வார்டு, பொது மருத்துவ பிரிவு, ரத்த பரிசோதனை பிரிவு, மாத் திரைகள் வழங்கும் இடம் என அனைத்து பகுதிகளி லும் மழைநீர் புகுந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகளில் கட்டிலுக்கு கீழ் பகுதி முழுவதும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. மருத்துவ மனைக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். 
மோட்டார் வைத்து மழைநீர் அகற்றப்பட்டாலும் தொடர்ந்து மழை பெய் வதால் மருத்துவமனைக்குள் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் சிகிச்சை பெற வந்தவர்களை மருந்து, மாத்திரைகள் கொடுத்து அனுப்பி வருகின் றனர்.  உள்நோயாளிகள் மழை தண்ணீருக்குள் வேறு வழி இன்றி சிகிச்சை பெற்று வருகின்றனர். அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால் இருட்டிலும், மழை நீரிலும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் புகுந்து உள்ள மழைநீரை வெளி யேற்ற பொதுப்பணித்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மழைக்கு மேலும் 4 பேர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மரக்காணம், திண்டிவனம், விழுப்புரம், வானூர், செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப் பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களில் மட்டும் மழைக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. திருநாவலூர் அருகேயுள்ள கீழ்க்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுப்பிரமணி (39), உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள களமருதூரைச் சேர்ந்தவர் பி. சுப்பிரமணி (55), வளவனூர் அருகே யுள்ள சின்னக்கள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (32), வளவனூர் அருகேயுள்ள சின்னக்குப்பம் காலனியை சேர்ந்த பெருமாள் மனைவி அல்லியம் மாள் (62) ஆகியோர் மழைக்கு பலியாகினர்.
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏறத்தாழ 173 ஹெக்டேர் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பகலிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து 2 நாள்களாகப் பெய்து வரும் மழையால் திருவிடைமருதூர் வட்டாரத்தில் 110 ஹெக்டேர், கும்பகோணம் வட்டாரத்தில் 63 ஹெக் டேர் என மொத்தம் 173 ஹெக்டேரில் பயிரிடப்பட் டுள்ள சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. 
மழைநீர் வடிவதால் பயிர்களில் பாதிப்பில்லை என வேளாண் மைத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 65 வீடுகள் சேதம்: தொடர் மழையால் தஞ்சாவூர் வட்டத்தில் 8 கூரை, ஓட்டு வீடுகளும், ஒரத்தநாடு வட்டத் தில் 5 கூரை வீடுகளும் என மாவட்டத்தில் சுமார் 15 வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் இடிந்து விழுந்தன. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 15 நாள்களா கப் பெய்து வரும் மழையால் சுமார் 65 வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்தது: கும்பகோணம் அருகே ஆரியப்படையூர் கிராமத்தில் 15 ஏக்கரில் பயிர்களைச் சூழ்ந்துள்ள தண் ணீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், தொடர் மழையால் கல்லணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, வெள்ள அபாயத்தைத் தவிர்க்க கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாற்றில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தண்ணீர் திறக்கப்படாமல் இருந்த கொள்ளிடத்தில் ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 4,683 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: