Saturday, March 10, 2012

பார்ப்பனர்களே, பதறாதீர்!


சென்னை விழா ஒன்றில் பேசிய டாக்டர் கலைஞர் அவர்கள் பார்ப்பான் -  பார்ப்பனன் என்ற சொற்களைப் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக மண்ணுக்கும் விண்ணுக்குமாக எகிறிக் குதித்துத் துள்ளாட்டம் போடுகிற பார்ப்பன மக்காள்! யான் பகர்வது கேண்மின்!
ஊர்ப்பானை உருட்டுகிற பார்ப்பான் என்றே பெரியாரியக்கப் பாவலர் பாரதிதாசன் பாடுகிறார்.
பாரதிதாசனின் குரு பார்ப்பனப் பாரதியோ பேராசைக்காரனடா பார்ப்பான் என்றும், பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்றும் அல்லவா படம் பிடித்துக் காட்டுகிறார்.
பார்ப்பான் - பார்ப்பனன் என்ற சொற்களுக்கு என்ன பொருள்? அவர்கள் எண்ணுகிற - சொல்லுகிற - கருதுகிற பொருளின் கருத்துப்படி அவர்கள் இரட்டைப் பிறப்பாளர் ஆகின்றனர்.
அவர்கள் தாய் தந்தையாக்குப் பிறப்பது முதல் பிறப்பு. அடுத்து அவர்கள் முப்புரிநூல் என்னும் பூணூல் அணிந்து கொள்ளும் விழாச் சடங்கு அவர்கள் எடுக்கின்ற இரண்டாவது அவதாரம் அதாவது பிறப்பு ஆகும். ஆக, அவர்கள் இரட்டைப் பிறப்பாளர்கள் ஆவார்கள்.
இதோ அருமையான, உண்மையான விளக்கம்:
கோழிக் குஞ்சு என்று சொல்லக் கூடாது. அவ்வாறு சொல்லுவது இலக்கண முறைப்படி தவறு ஆகும். கோழிப் பாப்பு என்றே சொல்ல வேண்டும். பார்ப்பு என்பதற்கு இரட்டைப் பிறப்பு என்பது பொருள். எப்படி? கோழி முட்டை இடுவது என்பது முதல் பிறப்பு ஆகும். அடுத்து அந்தக் கோழி முட்டை அடைகாக்கப்பட்டு பொரிக்கப்பட்டு குஞ்சாக வெளிவருவது அதன் இரண்டாவது பிறப்பு ஆகும். இரண்டு பிறப்பு பெற்ற அந்த உயிரினம் கோழிப் பார்ப்பு எனப்பட்டது. அது நிச்சயம் கோழிக் குஞ்சு கிடையாது.
இரட்டைப் பிறப்புப் பெற்ற அந்த உயிர்ப் பிராணி பார்ப்பு ஆனதுபோல, இரட்டைப் பிறப்பைப் பெற்ற (இவ்வாறு சொல்லிக் கொள்கிற காரணத்தினால்) அந்த மனிதனும் பார்ப்பனன் _ பார்ப்பான் ஆவான் - ஆனான்.
இதுதானே உண்மையான பார்ப்பன விளக்கம் ஆகும். தமிழர்கள் உள்ளிட்ட உலகின் அனைத்து மக்களும் ஒற்றைப் பிறப்பாளர்களாக விளங்க நீங்கள் மட்டும் உங்களின் கொள்கை விளக்கப் பிரச்சாரத் தத்துவக் கொள்கைப்படி இரட்டைப் பிறப்பாளர் என்னும் தன்மையில் பார்ப்பனர்கள் ஆகிறீர்கள்.
இதற்கு நாங்கள் என்ன செய்ய?
டாக்டர் கலைஞர் என்ன செய்ய?
எங்கள் எண்ணப்படி நீங்கள் பார்ப்பனர்களாக வாழ வேண்டாம்!
உங்கள் எண்ணப்படி நீங்கள் பிராமணர்களாகவும் இருக்க வேண்டாமா!
மக்கள் கருத்துப்படி நீங்கள் மனிதர்களாக விளங்க வேண்டும் - வாழ வேண்டும் என்பதே நியாயத் தீர்ப்பு.
ஆம் (பார்ப்பனர்களே) நீங்கள் நின்று நிதானித்துப் பதறாமல் இருங்கள்!
- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்

1 comment:

Anonymous said...

//பார்ப்பனர்களே, பதறாதீர்!//
அதானே... ஏன் வீண் பதற்றம்
அய்யா ஆட்சியில இல்லை.. அதனால இப்படி அப்படி பேசுவாரு... நாளைக்கே ஆட்சி வந்துருச்சுன்னா வேற மாதிரி பேசுவார்... அதனால் கொஞசம் பொறுங்கண்ணா..

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...