Wednesday, December 28, 2011

ஏன் பள்ளிகொண்டீரையா? சிறீரங்கநாதரே? சிறீரங்கம் கோவிலில் நடக்கும் கூத்தோ, கூத்து!


திருச்சி, டிச. 28- சிறீ ரங்கம் ரங்கநாதர் கோவி லில் வேணுகோபாலன் சன்னிதியில், தனிநபர் கள் யாகம் நடத்தியது, ஆகம விதிகளை மீறிய செயல் என, அகில பாரத இந்து மகா சபா குற்றம் சாட்டியுள்ளது. அகில பாரத இந்து மகா சபா மாநில பொருளா ளர் ராகவன், மண்டலத் தலைவர் ராஜசேகர், திவ்ய தேச பாரம்பரிய பாதுகாப்பு பேரவை செயலர் கிருஷ்ணமாச் சாரி ஆகியோர் கூட்டாக நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது:
சிறீரங்கம் கோவிலில் மரபு மீறல், அத்து மீறல் ஏராளமாக நடக்கிறது. கோவில் வளாகத்தில் திவசம் (சிராத்தம்), யாகங் கள் நடக்கிறது. இதை கோவில் நிருவாகம் கண்டு கொள்வதில்லை. தனிநபர்களால் நிருவகிக் கப்படும் சன்னிதியில் யாகங்கள் நடக்கிறது. இது முற்றிலும் தவறா னது. ஆகமவிதிகளை மீறும் செயல்.
சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வுக்கு எதிராக வேணு கோபாலன் சன்னிதியில் யாகம் நடத்தப்பட்டு உள்ளது. ஆகம விதிப்படி வேணுகோபாலன் சன்னிதியில் யாகம் நடத் துவது தவறு. இந்த சன் னிதியின் மேற்புறம் அழ கான வண்ண சுவரோவி யங்கள் உள்ளன. அடிக் கடி நடக்கும் யாகத்தால் இந்த ஓவியங்கள் அழிந்து விட்டன.
பெரிய பெருமா ளுக்கு உரிய காலங்களில் அமுதுபடிகள் (நைவேத் தியங்கள்) சமர்பிக்கப் படுவதில்லை. அந்தந்த காலத்துக்குரிய ஆராத னங்கள் (பூஜைகள்) உரிய நேரத்தில் நடப்ப தில்லை. கோவிலில் சீர்செய்ய வேண்டிய, 18 கோரிக்கைகளை வலி யுறுத்தி டிசம்பர் 30ஆம் தேதி ராகவேந்திரா வளைவு முன், ஒருநாள் அடை யாள பட்டினிப் போராட் டம் இருக்கப் போகி றோம். இவ்வாறு அவர் கள் கூறினர்.
சசி கோஷ்டி நடத்திய ரகசியயாகத்தில் யார் யார் பங்கேற்பு?முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரர் மகன் மகாதேவன் தலை மையில், வேணுகோபா லன் சன்னிதியில் ரகசிய யாகம் நடந்தது. இந்த யாகத்தில் யார் யார் பங்கேற்றனர் என்பது குறித்து ராகவன், கிருஷ்ண மாச்சாரி, ராஜசேகர் கூறுகையில், சுந்தர் பட்டர் தலைமையில், உறையூர் பாண்டுரங்கன், சிறீரங்கம் பாலாஜி, சாரதி, செல்லப்பா, நரசிம்மன், எஸ்.கே.ஆர்., பாலாஜி, சுதர்சன் ஆகி யோர் யாகம் நடத்த, மகாதேவன் கலந்து கொண்டார்,'' என்றனர்.
ஜெ., மீது திடீர் கரி சனம்: கடந்த சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக் கீடு செய்தபோது, அ.தி. மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., உள்ளது. எனவே, வேறு யாருக் கும் முரசு சின்னம் ஒதுக் கக்கூடாது என, அ.தி. மு.க., தரப்பில் கோரப் பட்டது. ஆனால், சுயேச் சைகள் எதிர்ப்பு தெரி வித்தனர். குறிப்பாக, அகில பாரத இந்து மகா சபா, வலியுறுத்தியதால், குலுக்கல் முறையில் முரசு சின்னம் சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுங்கி யது. அப்போது, ஜெய லலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த இந்து மகா சபாவினர், சசிகலா குழுவினர் யாகம் நடத்திய விவகாரத்தில் திடீரென ஜெயலலிதா வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது ஆச்சர் யத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...