Wednesday, December 28, 2011

நிர்வாண சாமியார்!


மன்னார்குடி மூவா நல்லூரைச் சேர்ந்தவர் சேகர் என்ற கட்டடத் தொழிலாளி. இவர் திடீ ரென்று நிர்வாணமாக ஓடி, ஒரு கோவிலுக்குள் போய் குந்திக் கொண் டார். அவர் யாருக்கோ சாபமிட்டார் - மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி நீதிமன்ற ஆணைப் படி சென்னை கீழ்ப்பாக் கம்  மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டா ராம். புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என் றால், பயித்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்.
அவர் சொன்ன சாபம் பலித்துவிட்டதால், அந்தச் சாமியார் பக்கம் கவனம் திரும்பிவிட்ட தாம். (பயித்தியக்காரன் கிழித்ததும் கோவணத் துக்கு ஆச்சு என்பதுபழமொழி அல்லவா!) கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு முக்கியப் பிரமுகர்கள் சென்று (முதலமைச்சர் அலுவலகத்தின் அதி காரம்வரை பயன்படுத் தப்பட்டு) மீண்டும் அந்தப் பைத்தியக்கார நிர்வாண சாமியாரை அவர் முன்பு தங்கி இருந்த சூட்டுக் கோல் ராமலிங்க சுவாமி சித்தர் கோவிலுக்குக் கொண்டு வந்துவிட்டன ராம். (வடலூர் வள்ளலா ருக்கு இப்படி ஒரு அவலமா?)
அடடே, எப்படிப்பட்ட சாதனை! எப்படிப்பட்ட அறிவுத் தீட்சண்யம்! உடைகளையெல்லாம் (கோவணம் உள்பட) கழற்றி எறிந்துவிட்டு அம்மணக்குண்டியாக, நிர்வாணமாக ரோட்டில் திரிந்தால் ராஜமரி யாதை கிடைக்கும் என்று அறிவார்களாக!
மானத்தைக் காப்பாற் றிட உடை உடுத்துபவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் உருப்படாத பேர்வழிகள் என்பதை உணர்வார் களாக!
ஒன்று செய்யலாம், நாட்டில் நடக்கப் போவதை யெல்லாம் முன்கூட்டியே அறிந்து சொல்லும் ஒரு வர்தான் நாட்டுக்கு மிக மிக அவசியம் தேவைதான்.
சுனாமி வருமா? புயல் வீசுமா? மழை பொய்க் குமா? நிலநடுக்கம் ஏற் படுமா?  பொருளாதார வீழ்ச்சி ஏற்படுமா? என் பதையெல்லாம் அறியக் கூடியவர்தான் அவசர அவசரமாக இப்பொழுது தேவை! தேவை!! பேராற் றல் படைத்த (?) இத்த கைய அம்மணக் குண்டி சாமியார்களை இந்தியா வின் குடியரசுத் தலைவ ராகவோ, பிரதமராகவோ அல்லது மாநிலங்களின் முதலமைச்சர்களாகவோ ஆக்கினால் என்ன?
பிரதமருக்கு ஆலோசனை கூறும் அறிவுசார் மன்றம் (Knowledge Commission) இதுபற்றி யோசிக்குமாக!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...