Thursday, December 29, 2011

தமிழக முதல்வர் அவர்களே, இது உண்மையா?

தமிழர்களின் கலை, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் புராதன வரலாற்றுப் பெருமைகளைத் தமது அகழ்வாராய்ச்சிகள் மூலம் உலகுக்கு வெளிக் கொணர்ந்த தமிழகத் தொல்பொருள் துறையை சிக்கன நடவடிக்கை என்ற காரணம் கூறி, மூடுவிழா நடத்திட தமிழக அரசு மும்முரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும்,

அதன் முதற் கட்டமாக, அதன் வேலைகளை சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் மியூசியம் ஆகியவற்றிற்கு பிய்த்துப் பிய்த்துக் கொடுத்து உருக்குலைத்து ஒழித்துவிட ஏற்பாடுகள் துவங்கி விட்டன என்று கூறப்படுவதும் உண்மையா?

பாவேந்தர் செம்மொழி நூலகம், செம்மொழிப் பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம் - போன்ற வரிசையில் இதுவும் வருகிறதோ!
தமிழர்களே வேடிக்கை பார்க்கத்தான் போகிறீர்களா?

அந்தோ - மரத் தமிழா உன் நிலை இப்படியா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...