Friday, October 14, 2011

சர்க்கஸ்


சர்க்கஸ்


பாரதீய ஜனதா நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டது போலவும் அதனைத் தொடர்ந்து யார் பிரதமர் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது போலவும் பார்ப்பன ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஒரு மாயையை, பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன.

எந்தத் தேதியில், எந்த இடத்தில் பதவிப் பிரமா ணம்  நடக்கப் போவது என்பதை அறிவிப்பது தான் பாக்கி என்கிற அள வுக்கு கற்பனை உலகில் ஜெட் வேகத்தில் பறந்து திரிந்து கொண்டு கிடக் கிறார்கள்.

அத்வானியா - நரேந் திர மோடியா? குழுக்கள் பிரிந்துவிட்டன. ஒத்தி கைகள் ஓகோ என்று நடக்கின்றன. அன்னா ஹசாரேயினர் உண்ணா விரதம் - பிஜேபிக்குப் பெரிய அரசியல் லாபத்தைக் கொட்டிக் கொடுத்து விட்டது என்று கொக்கரிக்க ஆரம்பித்தனர்.

இப்பொழுது என்னடா என்றால் அன்னா ஹசாரே யின் தூண்களுள் ஒருவ ரான பிரசாந்த் பூசன் சங்பரிவார்க் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்; அடுத்த கட்டத்தில் ஹசாரேயினர் ஆட்களும் அடித்து உதைக் கப்பட்டுள்ளனர்.

வெண்ணெய் திரண்ட நேரத்தில் தாழியை உடைத்து விட்டார்களே சங்பரிவார்கள் என்று ஆசை வானில் மிதக்கும் பி.ஜே.பி. தலைவர்கள் தலையில் அடித்துக் கொண்டு புலம்புகின்றனர்.

மூன்றாவதாக ஒரு செடி முளையிடுகிறது. அத்வானியும் மோடியும் பிரதமருக்கான வேட் பாளர்களா? தவறு; பி.ஜே. பி.யில் இன்னும் ஏராள மானவர்கள் இருக்கின் றனர் என்ற சொல்லாடல் கள் சதுராட ஆரம்பித்து விட்டன.

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின் ஹாவை செய்தியாளர்கள் சந்தித்து ஒரு கேள்வியை எழுப்பியுள்ளனர்.

பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நீங்களும் இருப்பீர்களா என்பது கேள்வி. ஏன் இருக்கக் கூடாது? எனது  திற மையை எவரேனும் சந்தே கிக்க முடியுமா? என்று எதிர் கேள்வியைக் கேட்டுள் ளார். என்னடா இது புதுப் புதுப் பூகம்பங்கள் புறப் படுகின்றனவே இந்த வட்டாரத்திலிருந்து? என்று தங்களுக்குள் முணு கிக் கொண்டு புறப்பட்டனர் செய்தியாளர்கள்.

ஜின்னாவைப் புகழ்ந் தார் என்று கூறி அத் வானியிடமிருந்து தலைவர் பதவியைப் பிடுங்கினார் கள்.  ஜஸ்வந்த்சிங் ஒரு புத்தகம் எழுதப் போய் அவரும் வெளியேறி மீண்டும் புண்ணிய ஜலம் தெளிக்கப்பட்டு கட்சிக்குள் புகுந்து கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக் குள் இன்னும் என் னென்ன கழைக் கூத்து கள், ஜிம்னாஸ்டிக் அயிட் டங்கள் பிஜேபிக்குள் நடக் கப் போகிறதோ! காணத் தவறாதீர்கள் பி.ஜே.பி. நடத்தும் அரசியல் சர்க் கஸில் கர்ணம் அடித்து, சிரிப்பு மூட்டும் கோமாளி களின் சேட்டைகளை!
-மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...