Sunday, October 23, 2011

முஸ்லிம்கள்மீது படுகொலை தாக்குதல்: முதல்வர் நரேந்திரமோடி குற்றவாளியே!


முஸ்லிம்கள்மீது படுகொலை தாக்குதல்: முதல்வர் நரேந்திரமோடி குற்றவாளியே!


உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ஆதார அறிக்கை!
அகமதாபாத், அக்.23- 2002 இல் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் கள் படுகொலைத் தாக் குதல்களில்  முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாற்று பதிவு செய்ய போதுமான ஆதாரங்களை, ஜகியா ஜஃப்ரி வழக்கில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் (அமிகஸ் குரியா) ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை தந்திருக்கிறது.
ரகசிய ஆவணம்
அந்த அறிக்கை இன் னமும் ரகசிய ஆவண மாகத்தான் பாதுகாக் கப்பட்டு வருகிறது. என் றாலும், 1200 பேருக்கும் மேலானவர்கள் கொல் லப்பட்ட 2002 ஆம் ஆண்டு வன்முறைத் தாக்குதல்களைப் பற்றி விசாரணை செய்து தகுந்த குற்றவியல் நட வடிக்கைகளை மேற்கொள்ள உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட சிறப்பு விசா ரணைக் குழுவுடன் அமி கஸ் குரியா வழக்கறி ஞரின் அறிக்கையின் தகவல்கள் இப்போது பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளன.
நரேந்திர மோடி மீது எந்த வழக்கும் தொடர முடியாது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரி வித்து இருந்த கருத்தை  வழக்குரைஞரின் அறிக்கை ஏற்றுக் கொள்ள பலமாக மறுக் கிறது என்று அகமதா பாத்தில் உள்ள தகவல் அறிந்த வட்டாரங்கள் பிரபல ஓர் ஆங்கில நாளிதழுக்கு தெரிவிக் கின்றன. இந்துக்கள் தங்களின் கோபத்தை தீர்த்துக் கொள்ள அனு மதிக்க வேண்டும் என்று காவல் துறை அதி காரிகளுக்கு நரேந்திர மோடி அறிவுரைகள் அளித்த  கூட்டத்தில் கலந்து கொண்ட சஞ் சீவ் பட் உள்ளிட்ட மூத்த காவல்துறை அதி காரிகளிடம் குறுக்கு விசாரணை செய்யப் பட்டால்தான், முதல்வர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்று தீர்மானிக்க முடியும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
முஸ்லிம்கள் தாக்கப் பட்ட நேரத்தில் அகம தாபாத் காவல்துறை கட்டுப்பாட்டு அறை களில் இரண்டு அமைச் சர்கள் இருந்தனர் என்ற உண்மையே சஞ்ஜிவ் பட்டின் கூற்று உண்மை யாக இருக்கலாம் என்று கருதச் செய்கிறது என்று அறிக்கை தெரிவித் திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
முதலமைச்சர்மீது குற்றச் சாற்று
விசாரணை நீதி மன்றம் ராமச்சந்திரனின் கருத்தினை ஏற்றுக் கொண்டால், இந்திய குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் முதல் அமைச்சர் மீது குற்றச் சாற்று பதிவு செய்யும் நிலை ஏற் பட்டுவிடும். அவற்றில் 153-ஏ (சமூகங்களி டையே விரோதத்தை வளர்க்கும் அறிக்கை களை வெளியிடுதல்), 153-பி (தேசிய ஒருமைப் பாட்டுக்குக் எதிரான கருத்துகள் தெரிவித்தல்), 505 (பொதுமக்களி டையே கலவரம் விளை விக்கும் அறிக்கைகளை வெளியிடுதல்) 166 (தீங்கு விளைவிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பொது ஊழியர் சட்டத்திற்குக் கீழ்படி யாமல் செயல்படுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப் படலாம்.
ஒரு பொது ஊழியர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் தெரி விப்பதையும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் கீழ்ப்படிய மறுத்து செயல்படுவதன் மூலம் தீங்கு விளையும் என் பதையும் நன்கு அறிந் திருக்கும் ஒரு பொது ஊழியர் செய்தால், ஓராண்டு வரை அவ ருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று பிரிவு 166 தெரிவிக்கிறது. தலைமை நிருவாக அதிகாரியாக இருந்த நரேந்திர மோடிக்கு மாநிலத்தில் ஏற்பட்ட கலவரங்களை அடக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருந்தன.
உச்சநீதிமன்றம் நியமித்தக் குழு
மோடியின் மீதும் மற்றும் 61 பேர் மீதும் திருமதி ஜாஃப்ரி அளித்த புகாரின் மீது விசாரணை நடத்துவ தற்கு உச்சநீதிமன்றம் இந்த சிறப்பு விசா ரணைக் குழுவை நிய மித்தது. அந்த குழு  சாட்சிகளிடம் விசா ரணை செய்து அளித்த அறிக்கையை தனிப் பட்ட முறையில் பரி சீலனை செய்து மதிப் பீடு செய்யும்படி உச்ச நீதிமன்றம் அமிகஸ் குரியா வழக்கறிஞரை கேட்டுக் கொண்டது.
முதல்வர் மீதான குற்றச்சாற்றுக்கு முக்கிய மான ஆதாரமாக இருக் கும் காவல்துறை அதி காரி சஞ்ஜிப் பட் முரண் பாடு கொண்ட, நம் பத்தகாத சாட்சி என்ப தால், மோடியின் மீதான வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்று சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் மீது தாக் குதல் நடந்தபோது காவல்துறை கட்டுப் பாட்டு அறைகளில் இருந்த இரண்டு அமைச் சர்களும் காவல்துறை யின் செயல்பாடுகளில் குறுக்கிட்டதற்கான ஆதாரமாக ஆவணங் கள் ஏதும் கிடைக்க வில்லை என்றும் சிறப்பு விசாரணைக் குழு தெரி வித்துள்ளது.
மோடி காவல் துறைக்கிட்ட உத்தரவு
27.2.2002 அன்று நடைபெற்ற காவல் துறை உயர் அதிகாரி களின் கூட்டத்தில் தங் களின் கோபத்தை தீர்த் துக் கொள்ள இந்துக் களை அனுமதிக்கும்படி மோடி காவல்துறை அதிகாரிகளுக்கு அறி வுரை அளித்தார் என்று சிறப்பு விசாரணைக் குழு முன் சஞ்ஜிவ் பட் சாட்யிம் அளித்திருந் தார். காந்திநகரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அன்று பின்மாலைப் பொழுதில் இந்த கூட் டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற அதிகாரிகள் எவரும் சஞ்ஜீவ் பட் அக் கூட் டத்தில் கலந்து கொண் டதாகத் தெரிவிக்க வில்லை என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
சிறப்பு விசாரணைக் குழுவின் முடிவுகளை அமிகஸ் குரியா வழக்குரைஞர் ஏற்றுக் கொள்ள வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சாட்சியம் எடைபோட்டுப் பார்க்கப்படவேண்டுமே யன்றி, எண்ணப்படக் கூடாது என்றும், சஞ்ஜீவ் பட்டிடமும் முதல்வர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்தால் அன்றி இது நிகழாது என்றும் வழக்குரைஞர் விவாதிக்கிறார்.
மற்ற அதிகாரிகளை பாதிக்கப்பட்ட  நபர்கள் கேள்வி கேட்டு தீவிரமாக குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காமல் இந்த நிலையில் வழக்கை முடித்துக் கொள்வது சரியானதாகவும், முறையானதாகவும் இருக்காது என்று அமிகஸ் குரியா வழக்குரைஞர் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. பட் பொய் சொன்னார் என்பது அப்போது வெளிப்படலாம்; அதே போல் மற்ற காவல்துறை அதிகாரிகள் பொய் சொல்லினர் என்பதும் வெளிப் படலாம்.
இரண்டு அமைச்சர்கள் தொடர்பு
உள்துறையுடன் தொடர்பு இல்லாத இரண்டு அமைச்சர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தனர் என்பதே சஞ்ஜிவ் பட்டின் சாட்சியம் உண்மையானது என்பதைக் காட்டக்கூடும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த இரு அமைச்சர்களும் முதல்வரின் ஆதரவையும் ஆசியையும் பெற்றவர்கள் என்பதை சிறப்பு விசாரணைக் குழுவே முன்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
அமிகஸ் குரியா வழக்குரைஞரின் கருத்தை சிறப்பு விசாரணைக் குழு நிராகரித்தால், திருமதி ஜாஃப்ரியும் அவருடன் இணைந்த மனுதாரார்களும் இதனை எதிர்த்து விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். சிறப்பு விசாரணைக் குழுவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், விசாரணை நீதிமன்றம்  சொந்தமாக, சுதந்திரமான முறையில் அமிகஸ் குரியா வழக்குரைஞரின் கருத்தைப் பற்றி பரிசீலனை செய்து முடிவெடுக்கலாம்.
- (நன்றி: தி இந்து  23-10-2011 தமிழில்: த.க.பாலகிருட்டினன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...