தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
நீலத் திமிங்கலம் விழுங்க இயன்ற பெரிய பொருள் எது?
நீலத் திமிங்கலத்தால் ஒரு ஆளையோ அல்லது ஒரு சிறு படகையோ, காரையோ விழுங்க முடியும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறாகும்.
அதனால் ஒரு திராட்சைப் பழத்தை மட்டுமே அதிக அளவானதாக விழுங்க முடியும். அதன் தொப்புளின் குறுக்களவு மட்டுமே அதன் தொண்டையின் குறுக்களவும் இருக்கிறது என்பதுதான் வியப்பான செய்தியாகும். அதன் காது மடலை விட சிறியதாக அதன் தொண்டை இருக்கும். அதன் காது மடல் ஒரு சாப்பிடும் தட்டை விடப் பெரியதாக இருக்கும்.
ஓராண்டில் எட்டு மாத காலம் நீலத் திமிங்கிலங்கள் எதையுமே உண்பதில்லை. ஆனால் கோடைக் காலத்தில் அவை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று டன் உணவை அவை ஒவ்வொன்றும் விழுங்கும். உயிரியல் பாடநூலில் நீங்கள் படித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். மிகச் சிறிய, பழுப்பு நிறம் கொண்ட, சிறு எறா அளவு கொண்ட, நண்டு, நத்தை போன்ற ஓடுகொண்ட கிரில் என்ற மீன்கள்தான் அவற்றின் உணவாகும். 1,00000 டன் எடை கொண்ட அளவில் இந்த கிரில் மீன்கள் பெருங் கூட்டமாக வருவது இந்த நீலத் திமிங்கிலங்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
கிறில் என்ற சொல் நார்வே மொழிச் சொல்லாகும். டச் சொல்லான கிரையல் என்பதிலிருந்து வந்த சொல்லாகும் இது. சிறிய அளவிலான உணவு என்று இது பொருள் படும். குள்ளர்களையும், சிறு உருளைக் கிழங்கையும் குறிப்பிட இச்சொல இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது. சிலி நாட்டில் சிறுகுச்சி வடிவிலான கிரில் உணவு வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சிறிய துண்டு கிரில் மாமிச விற்பனை ரஷ்யா, போலந்து, தென் ஆப்பிரிக்க நாடுகளில் படு தோல்வியடைந்தது. ஆபத்தை அளிக்கும் புளோரைடுகளின் அளவு அதில் அதிகமாக இருந்ததுதான் அதன் காரணம். கிரில் மீன்களின் ஓடுகளில் இருந்து அது வந்தது. வெட்டுவதற்கு முன் அவற்றை தனித்தனியாக எடுக்கமுடியாத அளவிற்கு அவை சிறிய அளவு கொண்டவை.
நீல திமிங்கிலத்தின் குறுகிய தொண்டையினால் ஜோனாவை அது விழுங்கியிருக்க முடியாது. ஒரு ஆளை முழுமையாக விழுங்க இயன்ற அளவு தொண்டை கொண்ட ஒரு திமிங்கிலம் ஸ்பெர்ம் திமிங்கிலம்தான். ஆள் அதன் வயிற்றுக்குள் போய்விட்ட பிறகு, அதன் வயிற்று நிண நீர்களின் அமிலத்தன்மை காரணமாக, உயிர் பிழைத்திருப்பது என்பது இயலாதது ஆகும். தான் ஒரு ஸ்பெர்ம் திமிங்கிலத்தால் விழுங்கப்பட்டுவிட்டதாகவும், தனது மற்ற மாலுமிகளால் 15 மணி நேரம் கழித்து தான் காப்பாற்றப்பட்டதாகவும் 1891 இல் ஜேம்ஸ் பார்ட்லேயின் நவீன ஜோனா வழக்கில் அவர் கூறியது மோசடி என்று மெய்ப்பிக்கப்பட்டது.
அதன் தொண்டை மட்டும்தான் சிறியதே ஒழிய, நீலத் திமிங்கிலத்தின் மற்ற பாகங்கள் எல்லாம் பெரியவைதான். அதன் நீளம் 32 மீட்டர் (105 அடி). இது வரை உயிர் வாழ்ந்த உயிரினங்களிலேயே இதுதான் மிகப் பெரியதாகும். மிகப் பெரிய டயானோசாரைப் போல் இது மூன்று மடங்கு பெரியது. 2,700 ஆட்களின் எடைக்கு சமமானது. அதன் நாக்கு மட்டும் ஒரு யானையை விடப் பெரியது. அதன் இதயம் ஒரு குடும்ப காரின் அளவு கொண்டதாக இருக்கும். அதன் வயிறு ஒரு டன் உணவுக்கு மேல் கொள்ளும்.
எந்த தனிப் பட்ட விலங்கையும் விட அதிக அளவில் ஒலி எழுப்ப இயன்றது இது. இது மெல்லிய குரலில் ஒலி எழுப்புவதை 16,000 கி.மீ. (10,000 மைல்) தூரத்தில் உள்ளமற்ற திமிங்கிலங்களால் அறிந்து கொள்ள முடியும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment