Monday, September 5, 2011

கடவுள்களிடம் கற்ற காலித்தனம்

வழக்கம் போல இந்து முன்னணி தலை வர் பூணூலை வாலாக் கிச் சுழற்றியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் ஊர்வலத்துக்கு காவல் துறையிடம் அனுமதி வாங்குவது - அவர் கள் கூறும் பாதைகள் வழியாகத்தான் செல் லுவோம் என்று உறுதி அளிப்பது - ஆனால் திடீரென்று முஸ்லிம் கள் இருக்கும் பகுதி வழியாகத்தான் செல் லுவோம் என்று அடம் பிடித்து - வன்முறையை முறுக்கிக் காட்டுவது - காவல் துறை தடிகளைத் தூக்க ஆரம்பித் தால் கீழே உட்கார்ந்து ஒட்டாரம் பிடிப்பது. பிறகு கைது செய்யப்படுவது - மாலையில் விடுவிக்கப் படுவது என்பது இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் தமா ஷான நாடகக் காட்சி.

இந்த ஆண்டும் இதனையே அரங்கேற்றி உள்ளனர். இவ்வாறு செய்யப்போ கிறார்கள் என்று விடு தலையும் முன் கூட்டியே தெரிவித்தும் உள்ளது.

இவர்களின் ஒழுக்கம் எந்தத் தரத்தில் இருக் கிறது என்பது இதன் மூலம் அறியலாம்.

ஆனால், பேசுவது மட்டும், அடேயப்பா! முதுகு பக்கமும் ஒரு வாயைக் கடன் வாங்கி வைத்துக் கொண்டு ஒலிபெருக்கி வைத்துப் பேசுவார்கள்.

ஒழுங்கு, கட்டுப்பாடு, தார்மீகப் பண்பு என்பவை எல்லாம் எங்கள் முடியில் கூட இருக்கிறது என்று முடிபிளந்து பேசுவார் கள். அவர்களின் யோக் கியதைதான் சென்னை திருவல்லிக்கேணியில் சிரிப் பாய் சிரித்ததே - நேற்று!

அவாள் மீது குற்றம் இல்லை. அவர்களின் கடவுள்களே சண்டை போடுகின்றன, கொலை கள் செய்திருக்கின்றன, கற்பழித்து இருக்கின்றன; விபச்சாரம் செய்திருக் கின்றன. அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்தால் தான் அசல் கற்புக்கரசி என்று காவியமே எழுதி இருக்கின்றன.

ஏன், இவர்கள் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்களே. யாருக்கு? விநாயகருக்குத் தானே? அந்த விநாயகன் என்ன செய்தான்?

தன் தம்பி சுப்பிரமணி யம் - அசுரர்களுடன் (திராவிடர்களுடன்தான்) பத்மா சுரனுடன் சண்டையிட்ட போது, தம்பியால் போரில் தாக்குப் பிடிக்க முடியாது நிலைக் குலைந்த போது, இந்த விநாயகக் கடவுள் என்ன செய்தானாம்?

அழிக்க, அழிக்க அசுரர்கள் புற்றீசல்களாக வந்து கொண்டே இருந் தார்களாம். எங்கிருந்து வந்து கொண்டிருந்தனராம்?

வல்லபை என்ற அசுர குலப் பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வந்து கொண்டிருந்தனராம். (கற் பனையிலும் ஆபாசம் தானா?)

விநாயகன் என்ன செய்தானாம்? தன் தும் பிக்கையால் பெண்ணின் குறியில் வைத்து அடைத் தானா. இப்படி கடவுள்களே கீழே இறங்கி வந்து கீழ்த் தரமாக சண்டை போட்டுக் கொண்டிக்கும்போது, அந்தப் பிள்ளையாரின் பக் தர்கள், சுப்பிரமணியனின் சோதாக்கள் முச்சந்தி களில் முண்டா தூக்க மாட்டார்களா? சண்டி யர்த்தனத்தைக் காட்ட மாட்டார்களா? அதைத் தான் வழக்கம் போல திருவாளர் ராம. கோபா லன் தலைமையில் செய்து காட்டியுள்ளனர்.

காவல் துறையினர் கொஞ்சம் லத்தியைத் தூக்கி யிருந்தால் அப்பொழுது தெரியும் சேதி? இந்தச் சூராதி சூரர்கள் வேட்டியைக் காணோம், துண்டைக் காணோம் என்று ஜகா வாங்கியிருப்பார்களே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...