Wednesday, August 17, 2011

கடவுள் வாழும்(?) கோவிலிலே.....

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அ.அம்மாபட்டி காட்டுப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கோவில் ஒன்று உள்ளது. பவுர்ணமி தவிர பிற நாள்களில் கூட்டம் அதிகமாக இருக்காதாம். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய கோவில் பூசாரி தண்டபாணி கோவில் அறையை விபச்சாரத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.

கோவிலில் மாலை நேரத்தில் சந்தேகப்படும் விதத்தில் ஆண்களும் பெண்களும் வந்து செல்வதாக குடிமங்கலம் காவல்துறைக்குப் புகார் வந்துள்ளது.

காவல் துறையினர் மறைந்து நின்று கண்காணித்ததில், 2 ஆண்களும் 2 பெண்களும் வந்து பூசாரியிடம் பேசியுள்ளனர். பூசாரி, கோவில் அருகேயுள்ள அறையின் கதவைத் திறந்துவிட்டதும் அவர்கள் உள்ளே சென்றுள்ளனர்.

காவல்துறையினர் அறையை நோக்கி வருவதைப் பார்த்த பூசாரி, அறையில் இருந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு ஓடியுள்ளார். நால்வரும் தப்பி ஓடியுள்ளனர். காவல்துறையினர் பூசாரியையும் 2 பெண்களையும் விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை 2. கீரனூர் ஏரிக்கரையின் அருகே ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரியாக உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ராஜகோபாலும் (62) அவரது மகன் சிறீசைலனும் உள்ளனர்.

ஜூலை 11 அன்று கோவிலைத் திறக்கச் சென்ற சிறீசைலன் கோவிலுக்குள் உள்ள இரும்பு கேட்டின் இரு பூட்டுகளும் உடைக்கப்பட்டு அருகிலிருந்த கம்பிகளில் மாட்டப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி யடைந்துள்ளார்.

பின்பு உள்ளே சென்று கருவறையைப் பார்த்தபோது அங்கிருந்த பஞ்சலோக அய்ம்பொன் சிலைகளான சிறீஆதிகேசவ பெருமாள், சிறீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், நவநீத கிருஷ்ணன் ஆகிய சிலைகளுடன் கருவறையின் முன்பிருந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கீரியம்மன் சிலையையும் சேர்த்துக் காணவில்லையாம்.

அய்ம்பொன் சிலைகள் ஆறினையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு 20 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

லண்டன் புறநகர் தேர்ன்டன் ஹீத் பகுதியில் உள்ள இந்துக் கோவிலில் கடந்த 7ஆம் தேதி கருவறையில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள், குண்டலங்களைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், கோவில் உண்டியல் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

கோவில் அலுவலக பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த பூசாரி சத்தம் கேட்டு எழுந்து சென்று பார்த்துள்ளார். அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் கொள்ளையர்கள் பறித்துள்ளனர். இதனால் பூசாரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கிரைடான் பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...