Saturday, July 16, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி!


போயும் போயும் ம.பொ.சி.தான் கிடைத்தாரா?

கலி.பூங்குன்றன்


வடபுலத்தில் தேசிய காங்கிரஸ் மகாசபைக்கு எதிராக முஸ்லிம் லீக்கைத் தோற்றுவிப்பதிலே வெற்றி கண்டது போல, தென்புலத்தில் பிராமணரல்லாதார் கட்சியைத் தோற்றுவிப்பதிலே, இந்திய வைஸ் ராயும், சென்னை மாகாண கவர்ன ரும் வெற்றி கண்டனர் என்று சிலம் புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதியுள்ளார். (துக்ளக் 6-7-2011) என்று திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள் எடுத்துக் காட்டியுள்ளார்!
திராவிட இயக்கத்தைத் தேசத் துரோக அமைப்பு என்று குற்றம் சாட்டும்போது, திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திய ம.பொ.சி.யைத்தானே தேடிப் பிடிப்பார்கள்?
இதில் ஒரு பரிதாபம் என்ன தெரியுமா? காலம் பூராவும் திராவிட இக்கத்தைத் திட்டிக் காலம் கழித்த ம.பொ.சி. அவர்கள் கடைசிக் காலத்தில் திராவிட இயக்கத்தினி டத்தில் தான் சரண் அடைந்தார் என்பதுதான் அந்தப் பரிதாபம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பெற்றவராக தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றார்!
காலம் காலமாக காங்கிரஸ்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொண்ட அவருக்குக் காங்கிரசில் எந்தப் பதவியும் கிட்டவில்லை. திராவிட இயக்க ஆட்சிக் காலத் தில்தான் எம்.எல்.ஏ. பதவியும், மேலவை உறுப்பினர் பதவியும், அதன் பின் மேலவைத் துணைத் தலைவர் பதவியும், கடைசிக் காலத் தில் மேலவைத் தலைவர் பதவியும் மேலவை கலைக்கப்பட்ட நிலையில் தமிழ் உயர் மட்டக் குழுத் தலைவர் பதவியும் கிடைத்தன என்பது சரித்திர உண்மை.
திராவிட இயக்கத்தைப் பற்றி அவர் என்ன சொல்லியிருந்தாலும், கொச்சைப்படுத்தியிருந்தாலும், ம.பொ.சி. நம்பும் வைதிக மொழியில் சொல்ல வேண்டுமானால் கடைசிக் காலத்தில் அதற்கான பாவ மன் னிப்பையும், பிராயச் சித்தத்தையும் திராவிட இயக்கத்தினிடம்தான் பெற்றார்.
அண்ணா முதல் அமைச்சர் ஆன நிலையில் எப்படியாவது ஓர் அமைச்சராக வேண்டும் என்பதற்காக அவர் பட்ட பாடு நகைப்புக்குரியது.
அமைச்சரவையில் இடம் கொடுத்தால் தனது தமிழரசுக் கழகத்தையே கலைத்துவிடுவதாகச் சொன்ன கட்சிக்காரர் அவர்.
மந்திரி பதவிக்காக அவர் ஆலாய்ப் பறந்த நேரத்தில் விடுதலை யில் தந்தை பெரியார் மூன்று அறிக்கைகளை வெளியிட்டார்.
எந்தக் கட்சியானாலும் தமிழர் கள் எல்லாம் ஒன்று சேரவேண்டும் என்கிற சமயத்தில் பார்ப்பன அடிமைகளை, பார்ப்பனீயத் தொண் டர்களை தமிழர்களுக்கு மந்திரி யாக்கி, தமிழர்களின் மூக்கை அறுப் பதா? என்ற வினாவை எழுப்பினார் தந்தை பெரியார். இது எதற்காக? இன்று மந்திரி சபையில் ராஜாஜி அவர்களுக்கு ஒரு ஒற்றர் வேண்டும். தி.மு.க. மந்திரி சபையில் ராஜாஜியின் குரல் ஒலிக் கப்படுவதற்கும் அவரது உதடுகள் வேண்டுமா? என்றும் கேட்ட தந்தை பெரியார், வேலியில் போகிற சுக்குட் டியை காதில் விட்டுக் கொண்டு குடையது குடையுது என்கிற கதை (விடுதலை 24.8.1967) என்று தந்தை பெரியார் எழுதியதன் விளைவாக அந்தக் கால கட்டத்தில் அவருக்குக் கிடைக்கவிருந்த அமைச்சர் பதவி பறி போனது.
ஆனந்தவிகடன் ஏடு (3-_9_-1967) அப்பொழுது ஒரு கார்ட்டூன் போட்டது. நாற்காலியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ம.பொ.சி. அவர்கள் அண்ணா, அண்ணா! தம்பி வந்திருக்கேன்! என்று கேலி செய்யப் பட்டதே --_ துக்ளக் பார்ப்பன ஏட்டுக்கு ஆனந்தவிகடன் பார்ப்பன ஏட்டின் கார்ட்டூன்தான் பொருத்தமானது.
அதே ம.பொ.சி. பின்னொரு கால கட்டத்தில் பார்ப்பனர் மீது பாய்ந்து விழுந்த நிலையும் உண்டு; தனக்கென்று வந்தால்தானே தெரியும் தலைவலியும், வயிற்றுவலியும்!
1971 ஆம் ஆண்டு தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் ம.பொ.சி. நின்றார். அவரை எதிர்த்து ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் திருமதி அனந்தநாயகி போட்டியிட்டார்.
பரமபக்தரான ம.பொ.சி. மயிலை கபாலீசுவரர் கோயிலுக்குச் சென்று தன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டினார்.
அந்த அர்ச்சகப் பார்ப்பான் என்ன செய்தான் தெரியுமா? ம.பொ.சி.யிடம் அர்ச்சனைக்கான துட்டை வாங்கிக் கொண்டு அவரை எதிர்த்து நின்ற அனந்தநாயகி அம்மையார் பெயருக்கே அர்ச்சனை செய்துவிட்டார். அந்த அளவு 1971 ஆம் ஆண்டு தேர்தல் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் போராட் டமாக உச்ச நிலையில் விளங்கியது.
அன்று மயிலாப்பூர் தொகுதி 97 ஆவது வட்டத்தில் பேசியபோது ம.பொ.சி. தனக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையைக் குறித்து ஆவேசமாக அவருக்கே உரித்தான தொனியில், மீசையை இடது கையால் ஒரு தடவி தடவி ஆக்ரோஷமாக கர்சித்தார்.
பார்ப்பனர்களின் ஓட்டு மட்டும் சிண்டிகேட்டுக்குப் போதுமா? மயிலாப்பூரில் ஒரு லட்சத்துப் பதினாயிரம் ஓட்டுகள் இருக்கின்றன. இதில் பிராமணர்கள் ஓட்டு 17 ஆயிரத்து அய்நூற்றுச் சொச்சம்; இந்த ஓட்டுகள் மட்டும் கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும், அனந்தநாயகி அம்மையார் வெற்றி பெறுவாரா? என்று மூச்சு முட்ட முழங்கினார்.
துக்ளக் பார்ப்பனக் கூட்டமும், திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்தி பார்ப்பன அம்சமாக பேனா பிடித்த எழுத்தாளரும், ம.பொ.சி.யை துணைக்கழைத்து கடைசியில் தங்கள் உள்ளி மூக்குகளை உடைத் துக் கொண்டதுதானே மிச்சம்!
இந்தியாவில் அடிமைத் தளையை நீக்குவதற்காக விடுதலைப் போரை காங்கிரஸ் மகாசபை முனைப்புடன் நடத்தியபோது, தங்களது பிரித் தாளும் கொள்கையை ஆங்கிலே யர்கள் இந்தியாவிலும் செயல்படுத் தினார்கள். அந்த வகையில் சிக்கிய வர்கள்தான் நீதிக்கட்சிக்காரர்கள், உண்டாக்கப்பட்டதுதான் பார்ப் பனர் அல்லாதார் கட்சி என்ற அபாண்ட பழியைப் போடுகிறார் லட்சுமி நாராயணன்.
அப்படியா சங்கதி? அவர்கள் சாட்சிக்கழைத்த அந்த ம.பொ.சி யையே அவர்கள் ஆதாரம் காட்டிய ம.பொ.சி. அவர்களின் அந்த ஆதார நூலான, விடுதலைப் போரில் தமி ழகம் எனும் நூலையே சாட்சிக் கூண்டில் ஏற்றலாமா? இதோ, சிலம் புச் செல்வர் ம.பொ.சி. எழுதுகிறார்:
சென்னை மாகாணத்தைப் பொருத்தவரையிலே மிதவாதிகளைக் கொண்ட பழைய கட்சியாரில் வக்கீல்களே அதிகம். ஆண்டுதோறும் கூடும் காங்கிரஸ் மகா சபைகளிலே, வைஸ்ராயின் நிர்வாக சபைக்கும், சென்னை மாநில கவர்னரின் நிர்வாக சபைக்கும் இந்தியர்களை நியமிக்க வேண்டுமென்றும்; உயர்நீதிமன்ற நியமனங்களிலே இந்தியர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டு மென்றும் கோரித் தீர்மானம் கொண்டு வந்ததே இந்த மிதவாதக் கூட்டம்தான். இத்தகைய பதவி களைத் தாங்கள் அடைய முடியு மென்ற நம்பிக்கையின் பேரிலேயே சென்னை மாகாண வக்கீல்கள் காங் கிரஸ் கூடாரத்துக்குள்ளேயே குடி யிருந்தனர். காங்கிரஸ் மகாசபையில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களே சேர முடியுமென்ற நிலை இருந்ததும், இந்த மிதவாதக் கூட்டம் அந்த மகாசபையிலே செல்வாக்குப் பெறு வதற்குச் சாதகமாக இருந்தது.
ஆங் கிலம் படித்தவர்களிலே பள்ளிகளி லும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களாக இருப்பவர்களும், அரசாங்க உயர் அலுவலர்களும் காங்கிரசில் ஈடுபட இயலாதவர்களாக இருந்தனர். ஈடுபட்டாலும், பிரிட்டீஷ் பொருள் களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அளவுக்குச் செயல்பட முடியாதவர் களாகவும் இருந்தனர். இதனால், ஆங்கிலம் படித்தவர்களிலே சுதந்திர மாக செயல்படுவதற்கு அதிக அள வில் சந்தர்ப்பம் பெற்றிருந்தது வக்கீல் கூட்டம்தான்.
பிற்காலத்தில் சென்னை மாகாணத்திலே ஜஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது இந்த வக்கீல்களின் ஆதிக்கம்தான். இவர்களிலே மிகப் பெரும்பாலோர் பிராமணர்களாக இருந்தாலும் அரசாங்க நீதித்துறை, நிர்வாகத்துறை, பார்லிமெண்டரித் துறை ஆகியவற்றில் எல்லாம் இந்த பிராமண வக்கீல்களே நியமனம் பெற்றதாலும், இவர்களுடைய ஆதிக்கத்துக்கு வகுப்புவாத வண்ணம் பூச ஜஸ்டிஸ் கட்சியால் முடிந்தது. அந்நாளில் சட்டம் படித்த வக்கீல்களில் நூற்றுக்குத் தொண் ணூறு பேருக்கு அதிகமானோர் பிராமணர்களாகவே இருந்தனர். ஆகவே, அவர்கள் இந்தியன் என்ற பெயரால் அரசாங்கத் துறைகள் அனைத்திலும் நியமனம் பெறுவது இயற்கையாக இருந்தது என்று எழுதியுள்ளாரே.
ம.பொ.சி.யை துணைக்கழைத்தார் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண; அந்த ம.பொ.சி.யே காங்கிரஸ் என்பது பார்ப்பனர்கள் பதவி தேடும் கூடாரம் ஆனதால், ஜஸ்டிஸ் கட்சி தோன்ற வேண்டிய அவசியம் ஏற் பட்டது என்று ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றத்திற்கு நியாயம் கற்பித்து விட்டாரே - துக்ளக் கூட்டம் எங்கே போய் முட்டிக் கொள்ளப் போகிறது?
அத்துடன் விட்டாரா ம.பொ.சி?.
இவர்கள் மயிலாப்பூர் வக்கீல்கள் என்றும் எழும்பூர் வக்கீல்கள் என்றும் இருவேறு பிரிவுகளாகப் பிரிந்து செயல் பட்டனர். முன்னவர் அனேகமாக பிராமணர்களாகவும், பின்னவர் அனேகமாக பிராமணரல் லதாராகவும் இருந்தனர். மயிலாப்பூர் வக்கீல்களுக்கு திரு.வி.கிருஷ்ணசாமி அய்யர் தலைவர் என்றால், எழும்பூர் வக்கீல்களுக்கு சர்சி.சங்கரன் நாயர் தலைவராக இருந்தார். டி.எம்.நாயரும் எழும்பூர் கூட்டத்தாருடன் சேர்ந் திருந்தார். (நூல் பக்கம் 222)
காங்கிரசைப் பயன்படுத்தி சகலமும் பார்ப்பனர் மயம்; பதவிகள் எல்லாம் அவர்கள் மயம் என்றிருந்த நிலையில், பார்ப்பனர் அல்லாதார் களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க ஜஸ்டிஸ் கட்சி முன்வந்ததில் என்ன குற்றம்?
பார்ப்பனர்கள் திட்டமிட்டு பதவிகளை அபகரித்தால் அது தேச சேவை; நாட்டுப் பற்று - சுதந்திர தாகம்; - பார்ப்பனர் அல்லாதார் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் , பாடுபட்டால் அதற்கு உள் நோக்கமா? தேசத் துரோகமா?
பார்ப்பனர்கள் எந்தெந்தப் பதவிகளை எல்லாம் எப்படி எப்படி பெற்றார்கள் என்பதை - தங்களுக்குத் துணைக்கு அழைத்த ம.பொ.சி.யே வேறு வழியின்றிப் பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கிறாரே!
கொலைக் குற்றவாளியான ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி வழக்கில் ஏற்பட்ட பிறழ் சாட்சியாக ம.பொ.சியை கருதுவார்களோ?
மும்பையில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாடு பற்றி க.சுப்பிரமணிய அய்யர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார் (1888). அந்நூலின் பெயர் ஆரியஜன அய்க்கியம் அல்லது காங்கிரஸ் ஜன சபை என்பதே.
இப்படி காங்கிரஸ் என்றாலே ஆரிய ஜனத்திற்கானதே என்று ஆகி விட்ட பிறகு ஆரியரல்லாதாருக் கென்று ஒரு அமைப்பு வேண்டாமா? அதுதான் ஜஸ்டிஸ் கட்சி - காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது.
எல்லாம் எங்களுக்கே யென்று தங்கள் வயிற்றில் அறுத்துக் கட்டிக் கொண்ட கும்பல் அதற்கெதிரான பூகம்பம் புறப்படும்போது லாலி பாடியா வரவேற்பர்? அந்த ஆத்திரத்தை நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் லட்சுமி நாராயணர்கள் உருவில் உறுமிக் காட்டுகிறார்கள்.
ஏதோ தென்னிந்திய நல உரிமைச் சங்கமான ஜஸ்டிஸ் கட்சிதான் பார்ப்பன எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தது என்று கருதவேண்டாம்.
சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்குள்ளேயே பார்ப்பனர் அல்லாதாருக்கு அமைப்பு ஒன்றைத் தொடங்கும் நிலைக்குத் துரத்தப்பட் டதே! அதன் பெயர் சென்னை மாகாண சங்கம், தலைவர் கேசவப் பிள்ளை. துணைத் தலைவர்களில் ஒருவர் ஈ.வெ.ரா. பார்ப்பனர் அல்லா தாருக்கு அனைத்துத் துறைகளிலும் 50 விழுக்காடு தருவது என்ற தீர் மானம் செய்யப்பட்டது. இவ்வமைப் பில் இடம் பெற்றவர்கள் அனை வரும் பார்ப்பனர் அல்லாதாரே! இதனைக் கண்டு வெகுண்ட சத்திய மூர்த்தி அய்யர் மாதவராவ் போன்ற பார்ப்பனர்கள் தேசிய வாதிகள் சங்கம் என்று காங்கிரசுக்குள்ளேயே இன்னொரு அமைப்பினை ஏற் படுத்தினர்.
விஜயராகவாச்சாரியார் தலைவ ராகத் தேர்வு செய்யப்பட்டார். கஸ்தூரி ரெங்க அய்யங்காரைத் துணைத் தலைவர் என்று ராஜாஜி முன்மொழிந்தார். ஈ.வெ.ரா. திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகியோர் வ.உ.சியைத் துணைத் தலைவராகக் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தினர். கடைசியாக வ.உ.சி.யோடு கஸ்தூரி ரெங்க அய்யங்காரும் துணைத் தலைவர் களாக ஆக்கப்பட்டனர்.
பார்ப்பனர் அல்லாதாருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அனைத் துத் துறைகளிலும் அளிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை தேசியவாதிகள் சங்கத்திலும் நிறைவேற்றுமாறு ஈ.வெ.ரா. உள்ளிட்ட மூன்று தலை வர்களும் செய்துவிட்டனர். அதனைக் கண்ட ராஜாஜி அவர்கள் உங்களை விட தியாகராயச் செட்டி யாரே மேல் என்று கூறும் நிலை ஏற்பட்டதே!
பார்ப்பனர் அல்லாதாரின் உரி மைக்காக ஒரு அமைப்புத் தோன்று வதற்கு இவ்வளவு அழுத்தமான வரலாற்றுப் பின்னணிகள் இருக்க, இவற்றை எல்லாம் தார் கொண்டு அழித்துவிட்டு, பார்ப்பனர் அல் லாதார் இயக்கத்தைத் தேச துரோக அமைப்பு என்று பழி சுமத்துகின் றனர் பார்ப்பனர்கள் என்றால் அவர் களை ஆபேடூபே சொன்ன அந்த அடை மொழிகளால் தான் அர்ச் சனை செய்ய வேண்டும்.
Avarice, Ambition, Cunning, Wily, Doube tongued, Servile, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression intrigue..
இதனை அறிஞர் அண்ணா பின்வருமாறு மொழி பெயர்க்கிறார்:
பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய்ப் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கணநாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே, போற்றி, போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படு மோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந்திடுவாய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஓட்டு வித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இறை, இதோ, போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!
இதுதான் அண்ணாவின் படப்பிடிப்பு!
குறிப்பு: இறந்து போன வரை பார்ப் பனர்கள் சாட்சிக்கு அழைத்ததால் ம.பொ.சி. யைப் பற்றி நாமும் எழுத நேரிட்டு விட்டது!
(மீண்டும் சந்திப்போம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...