Thursday, February 13, 2020

குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிவதற்கான பன்னாட்டு மாநாடு

இயல்பான வளர்ச்சியின்மையால் குழந்தை களிடையே காணப்படும் மன ஊனத்தைக் கடந்து, ஏற்றம் காண்பது எல்லாருக்கும் சாத்தியமானதல்ல. இவ்விதமான பாதிப்பு உள்ள சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளிடம், இந்தப் பிரச்சினை இருப்பதை முன்னதாகக் கண்டறிந்து, மேலாண்மைப் பணிகளைத் தொடங்கினால், அவர்களை விரைவாக இயல்பு வாழ்க்கை நோக்கி அழைத்து வரலாம். இதற்கான பன்னாட்டு மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த திட்டம் மற்றும் ஆய்வு குறித்து, அமர் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவரான எஸ். ராமகிருஷ்ணன் கூறுகையில், ""இந்தியாவிலும், மற்ற உலக நாடுகளிலும் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, பல அரசுகளும் கூட பின்பற்றக் கூடிய அளவு சிறப்பு வாய்ந்ததாக இந்தத் திட்டம் திகழ்கிறது''.
இந்த திட்ட அனுபவங்களின் அடிப்படையில் தங்களது புரிதலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், இது போன்ற பிற வெற்றிகரமான திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் அமர் சேவா சங்கம் சென்னையில் இரு நாட்களுக்கான சர்வதேச கருத்தரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு நாட்களாக நடைபெற உள்ள இந்தக் கருத்தரங்கை வரும் 14-ஆம் தேதி   தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...