எச்.சி.எல்., கார்ப்பரேஷனின் முதன்மை
செயல் அலுவலரும், ஹேபிடேட்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான ரோஷிணி உள்ளூரில்
உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு உதவிடவும், அவர்களை அதிகாரமிக்கவர்களாக
மாற்றிடவும் தொடர் கருத்தரங்கு களுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதன் 5-ஆவது
கருத்தரங்கானது சென்னையில் லயோலா கல்லூரியில் நடைபெற்றது. சுற்றுச்சூழல்
ஆர்வலர்களாக உள்ள சுமார் 120-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
சென்னை லயோலா கல்லூரியில் நடந்த இந்த
கருத்தரங்கில் யூத் கன்செர்வேஷன் ஆக்சன் நெட்வொர்க் அமைப்பின் ராம்நாத்
சந்திரசேகர், இண்டோ அமெரிக்கன் வனவிலங்கு சொசைட்டியின் டாக்டர் அறிவழகன்
செல்லையா, சூ அவுட்ரீச் அமைப்பின் டாக்டர் சஞ்சய் மோலுர், வனவிலங்கு
மற்றும் சூழலியல் ஆவணப் பட இயக்குநர் சேகர் தத்தாத்ரி, ஹேபிடேட்ஸ்
அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டெபி சேவியர் ஆகியோர் கருத்துரை
வழங்கினர்.
கொல்கத்தாவில் 10-ஆம் தேதி நடைபெற்றது.
டில்லியில் பிப்ரவரி 13-ஆம் தேதியும், டேராடூனில் பிப்ரவரி 15-ஆம்
தேதியும், மும்பையில் பிப்ரவரி 17-ஆம் தேதியும், குவாஹாத்தியில் பிப்ரவரி
19-ஆம் தேதியும் இக்கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
No comments:
Post a Comment