ஹிஸ்ஸார் நவ 28 அரியானா மாநில சுகா தாரம் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் மாவட்ட காவல்துறை பெண் ஆணை யர் சங்கீதா காலியாவை மக்கள் சபையின் முன், நீ என்னிடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரி, நான் சொல்வதைக் கேட்க வேண்டும் வெளியே போ என்று கூறி அவமானப் படுத்தியுள்ளார். இந்து அமைப்பைச் சார்ந்தவர்களுக்குப் பதவி கொடுத்தால் ஏதோ அவர்கள் தான் நாட் டிற்கே ராஜா போன்று நடப்பது பாஜக ஆளும் மாநிலங்களில் தினசரி நடக்கும் கதையாகிப் போனது.
அரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் பள்ளிவிழாவில் ஆசிரி யர்களை அழைத்து அவ மானப்படுத்திய சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து பரபரப்பை ஏற் படுத்தியது. அரியானாவின் ஹிஸ்ஸார் மாவட்டத்தில் உள்ள ஃபதேஹபாத் என்ற நகரத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் அனில் விஜ் அங்குள்ள பஞ்சா யத்து தலைமை அலுவல கத்தில் தனது ஆதரவா ளர்களைச் சந்தித்தார். அப்போது மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட காவல்துறை ஆணையர் உடனிருந்தனர். இந்த நிலையில் மாவட்ட பாஜவைச் சேர்ந்த சிலர் இந்த மாவட்டத்தில் பஞ்சாப் பில் இருந்து சாராயம் கடத்தி வரப்படுவதாகவும் காவல்துறையில் புகார் அளித்தும் ஒன்றும் செய் யாமல் இருப்பதாகவும் புகார் கூறினர்.
பொதுவாக இது போன்ற புகார்கள் பிற துறை அமைச்சர்களிடம் எழுத்து மூலம் கொடுக்கப் பட்டால் அதை மாநில உள்துறை அமைச்சரிடம் கொடுக்கவேண்டும், அல்லது மாவட்ட காவல் துறை ஆணையரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லவேண் டும், இது தான் பிற துறை அமைச்சர்களின் வேலை,
ஆனால் அனில் விஜ் அரசியல்சாசன விதிமுறை கள் எதுவும் தெரியாமல், தான் தோன்றித்தனமாக அங்கிருந்த காவல்துறைப் பெண் ஆணையர் சங் கீதா காலியாவைப் பார்த்து நீ என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? என்று ஒருமையில் பேசியதுமல் லாமல் நீ எங்களிடம் சம்பளம் வாங்கும் ஒரு வேலைக்காரி, இவர்கள் அளித்த புகாருக்கு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை, உனக்கு திமிர் அதிகமாகிவிட்டது என்று பேச ஆரம்பித்து விட்டார், அருகில் உள்ள வர்கள் அவரைச் சமா தானப்படுத்தியும் அவர் அடங்காமல் ஒருமையில் பெண் காவல்துறை ஆணை யரை வெளியே போ என்று கூறினார். ஆனால் பெண் காவல் துறை ஆணையர் இவரது பேச்சுக்கு பயந்துவிட வில்லை,
அவர் இருக்கை யில் இருந்துகொண்டு இது சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரம் மனுவை என்னிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கமாறு தான் கேட்கவேண்டும் அப்படி நான் எடுக்காத பட்சத்தில் நீங்கள் என் மீது உள் துறை அமைச்சரிடம் புகார் கொடுக்கலாம், எந்த ஒரு நடைமுறையும் தெரியாமல் உங்கள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க, அதிகாரி என்றும் பாராமல் என்னை ஒரு மையில் பேசுவது உங்கள் பதவிக்கு நல்லதல்ல என்று துணிச்சலுடன் கூறினார். இதனால் கோபம் கொண்ட அனில் விஜ் அங்கிருந்த காகிதங் களை வீசிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார். இந்த சம்பவம் அனைத் தும் ஊடகவியளார்களின் காமிராவில் பதிவானது, இந்தக் காட்சி செய்தி தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. இது குறித்து உள்துறை அமைச்சரும் மாநில முதல்வருமான மனோகர்லால் கட்டர் எந்த ஒரு கருத்தும் கூற மறுத்து விட்டார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- காந்தியை படுகொலை செய்தது ஆர்.எஸ்.எஸ்.தான் வழக்கை தொடர்ந்து நடத்தவே விருப்பம் - ராகுல்
- வி.பி. சிங் இன்றும் வாழ்கிறார் (விஸ்வநாத் பிரதாப் சிங் (ஜூன் 25 1931 - நவம்பர் 27, 2008)
- கோவா பி.ஜே.பி. ஆட்சியில் தீவிரவாதிகளைப்போல் நாங்கள் நடத்தப்பட்டோம்: மாணவர்கள் மனக்குமுறல்
- பெண்கள் தங்கள் சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்ல முடியும்! உச்சநீதிமன்றம்
- மதவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடும் மூத்த பெண் வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு மோடி அரசு தாக்கீது