Tuesday, June 28, 2016

ஆர்ப்பாட்டத்திற்கான அர்த்தம் அதிகரித்து விட்டது!


அரியானா மாநிலத்தில் உள்ள மாநிலப்பள்ளிகளில் உருது மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கட்டாய சமஸ்கிருதப் பயிற்சியளித்து உருது மொழி பயிலும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்பிக்குமாறு அரியானா மாநில அரசு வற்புறுத்துவதாக ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர்.  

2014-ஆம் ஆண்டு அரியானா மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து அங்கு காவிகளின் கொள்கைகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அங்கு வாழும் இஸ்லாமியர்கள் அரியானாவைவிட்டு வெளியேறிக்கொண்டு இருக்கின்றனர். கடந்த ஆண்டு பரிதாபாத் நகருக்கு அருகில் உள்ள அட்டாலி என்ற சிற்றூரில் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவிஅமைப்பினர் வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்து ஊரை சின்னாபின்னமாக்கினர். ஊரில் உள்ள இஸ்லாமியர்களை அடித்து விரட்டியதுடன் அங்கிருந்த ஒரு கிராமத்தையும் தீக்கிரையாக்கினர்.  

இதனைத் தொடர்ந்து அரியானாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இதே நிலைதான் என்று மிரட்டல் விடுத்தனர். இதன் காரணமாக அதிக அளவில் சிறுபான்மையினர் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி உபி, பீகார், டில்லி மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அகதிகளாக குடியேறினர்.  

இந்நிலையில் மாநிலத்தில் உள்ள சிறுபான்மை யினருக்கான  சில பள்ளிகளில் உருதுமொழி கற்பிக்கப்பட்டு வந்தது, இஸ்லாமிய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து அரியானா மாநில அரசு இந்த ஆண்டிலிருந்து உருது மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சமஸ்கிருத வகுப்பை நடத்தி வருகிறது. மேலும் துவக்கப்பள்ளி முதல் உருது மொழி பயிலவரும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுத்தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.     

வட இந்தியாவில் மத்திய அரசின் நிதியைப் பெறும் பள்ளிகளில் உருது மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதமே கற்றுத்தர வற்புறுத்தப்படுவதாக துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.  

இது குறித்து  துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(ஏபிஎஸ்ஏ) சார்பில் தான்சிங் என்பவர்  அளித்த பேட்டியில் ஆக்ராவில் 2800 துவக்கப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பல பள்ளிகளில் உருது மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது, 150 ஆசிரியர்கள் உருது மொழி பயிற்றுவிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 75 உருது மொழி ஆசிரியர்களுக்கு ஆக்ரா நிர்வாகம் சமஸ்கிருத பயிற்சி அளித்து வருகிறது, இவர்கள் பள்ளிகளில் சமஸ்கிருத விளக்கத்துடன் பாடங்களை நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. 

இந்த கல்வியாண்டு முதல்  சமஸ்கிருத பயிற்சி மற்றும் வகுப்புகளில் கட்டாயம் சமஸ்கிருத உரையாடல் நடத்தவேண்டும் என்று ரகசிய உத்தரவு வந்துள்ளதாக தான்சிங் தெரிவித்தார். 

இது குறித்து பெயர் குறிப்பிடவிரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறும் போது இந்த ஆண்டு எப்போதும் போல் எங்களுக்கு தரவேண்டிய உருது மொழிப் பாடப் புத்தகங்கள் தரவில்லை, மேலும் உருது மொழிப் பாடங்களை நடத்த தேவையான நூல்களும் மத்திய அரசு எங்களுக்குத் தரவில்லை, அதே நேரத்தில் சமஸ்கிருத கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதை பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, எங்கள் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள் ஆரம்பத்தில் இருந்தே உருது மொழி பயின்று வந்துள்ளனர். இவர்களுக்குத் திடீரென சமஸ்கிருத கையேடுகள் கொடுக்கப்படும் போது அவர்கள் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர், இது குறித்து மாநில கல்வித்துறையிடம் புகார் அளித்துள்ளோம் என்று கூறினார்.  

மத்தியில் உள்ள பிஜேபி அரசு எந்த மன நிலையில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. சமஸ்கிருதத் திணிப்பு என்பதைக் கண் மூடித்தனமாகக் கையில் எடுத்துக் கொண்டு விட்டனர். எந்த எல்லைக்கும் போகத் தயார் என்று தோள் தட்டி துடை தட்டிக் கிளம்பி விட்டனர்.

இது ஆரியத்தின் எழுச்சி என்பதைவிட, ஆரியத்தின் வீழ்ச்சிக்கு ஆரம்பத்தைக் கொடுத்து விட்டனர். பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் ஒன்று திரண்டு, ஓங்கி எழுந்து ஆரியர் -ஆரியர் அல்லாதார் யுத்தத்தை நிகழ்த்திக் காட்டுவர் என்பதில் அய்யமில்லை. ஆரியத்தின் எழுச்சித் தோற்றமே வீழ்ச்சிக்கும் அடிகோலப் போகிறது என்பதில் அய்யமில்லை. ஜூலை முதல் தேதி ஆர்ப்பாட்டத்திற்கான அர்த்தம் அதிகரித்து விட்டது. தோழர்களே கிளர்ந்தெழுவீர்! கிளர்ந்தெழுவீர்!!

Saturday, June 25, 2016

யோகாவுக்கு அடிக்கும் 'யோகம்!'


ஷாகாவை நடத்தி வந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் இப்பொழுது யோகாவைக் கையில் தூக்கிக் கொண்டு அலைய ஆரம்பித்துள்ளது. திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு அலையும் கும்பல் இப்பொழுது இதனைத் தூக்கிக் கொண்டு அலைகிறது.
சாதாரணமாக உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி என்று சொல்லியிருந்தால் இந்த யோகாவுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டு இருக்கும். இதனை ஆர்.எஸ்.எஸ். அதன் வழி வந்த பிஜேபி அதன் பிரதமர் கையில் எடுத்துக் கொண்டதால்தான் சந்தேகப் படும்படியாகி விட்டது.
இந்த சந்தேகத்திற்கு நியாயம் இருக்கவே செய்கிறது. எதிலும் இந்துத்துவா பார்வையோடு பிரச்சினையை அணுகுபவர்கள் ஆயிற்றே. ஆதாயமில்லாமல் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்களே! அந்த சந்தேகம் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல -பீகார் முதல் அமைச்சர் நீதிஷ்குமாருக்கே வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
'தனிப்பட்ட முறையில் நான்கூட உடற்பயிற்சி செய்து கொண்டு தானிருக்கிறேன். அரசு சார்பில் செய்ய வேண்டும் என்று சொல்லும் பொழுது அதனை ஏற்க மறுக்கிறேன்' என்று மண்டையில் அடிப்பது போல சொல்லி விட்டார். முதுகெலும்புள்ள முதல் அமைச்சராக அவர் இருப்பது பாராட்டுக்குரியது.
கேரள மாநிலத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் சார்பில் திருவனந்தபுரம் சென்ட்ரல் விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சியில் அம்மாநில சுகாதாரம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த செய்தியும், கருத்தும் மிகவும் முக்கியமானது.
"யோகா என்பது ஒரு கலை. எந்த மதத்திற்கும் குறிப்பிட்ட எந்த ஜாதிக்கும் சொந்தமானதல்ல. ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வோ குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு சொந்தமான கலையாக யோகாவை முன்னிறுத்துகிறது. யோகா பயிற்சியின் போது சமஸ்கிருத சுலோகங்களை சொல்லுமாறு கட்டாயப்படுத்துகிறது. யோகா நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இணைக்கப்பட்டுள்ளது. நம் நாடு மத சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதமும் கடவுள் குறித்த தனித்து நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் கொண்டுள்ளது. ஆனால் இதில் சமஸ்கிருத சுலோகங்களைத் திணித்து இந்து மதக் கடவுள்கள்மீதான பிரார்த்தனைகளையும் கட்டாயப்படுத்துவது கண்டனத்திற்குரியது" என்று கூறியுள்ளார்.
இந்த யோகாவில் சூரிய நமஸ்காரம் என்ற ஒன்றை வைத்துள்ளனர். முசுலிம்களைப் பொறுத்தவரையில் இத்தகு வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள்; ஒரு பக்கத்தில் மதச் சார்பற்றது யோகா என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்லுவதும், அதனை ஏற்க மறுப்பவர்கள் கடலில் போய் குதியுங்கள் என்று கூறுவதெல்லாம் பச்சையான பாசிசம் அல்லவா!
மத்திய அரசின் இணையதளமான 'ஆயுஷ்' என்பதில் இந்த யோகா பற்றி என்ன சொல்லப்படுகிறது?
சிவபெருமானிடமிருந்து உற்பத்தியானது என்றும் பதஞ்சலி போன்ற முனிவரின் பாரம்பரியத்தில் வந்தது என்றும் இதற்கொரு போலி வரலாற்றை எழுதுகிறது.
வரலாறு என்று சொல்ல வேண்டும் என்றால் வேத காலத்துக்கு முந்தைய சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தில் இந்த யோகா இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் மேரி ஸ்டூவர்ட் எழுதியுள்ள ஒரு நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"யோகா எனும் முறை, நாகரிகம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது. இப்பொழுது பாகிஸ்தான் எனப்படும் நாட்டில் உள்ள சிந்துச் சமவெளியில் வரலாற்றுக்கு முந்தைய இடிபாடுகள் (புதை பொருள்கள்) இருக்கின்றன. அவற்றிடையே யோகாவைப் பற்றிய முதல் அடையாளங்கள் காணப்பட்டன. உருவங்கள் பதியப்பட்ட முத்திரைகள் இங்கே கண்டு எடுக்கப்பட்டுள்ளன. இன்றும் வழக்கத்தில் உள்ள யோகா நிலையில் அமர்ந்திருப்பது போன்ற ஓர் உருவத்தை அந்த முத்திரைகள் சில காட்டுகின்றன" என்று மேரி ஸ்டூவர்ட் என்ற அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.
ஆரியப் பார்ப்பனர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு உரித்தானவற்றை தங்களது என்று திரித்துப் பிரித்துக் காட்டும் சூழ்ச்சியில் கரை கண்டவர்கள்.
இது குறித்து பார்ப்பனரான கோ. சூரிய நாராயண சாஸ்திரி (பரிதி மாற்கலைஞர்) யாரே கூறுவது காணத்தக்கதே!
"தமிழரிடத்திலிருந்த பல அரிய விஷயங்களையும், மொழிபெயர்த்து தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே 'தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்" என்று கூறுகிறார் (தமிழ்மொழியின் வரலாறு பக்கம் 27).
அந்தத் திருட்டில் யோகாவும் ஒன்றே!
இந்த யோகாவை நடத்துவதற்குத் தேர்வு செய்யப்பட்ட தேதியும்கூட ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான கேசவ்பலிராம் ஹேட்கேவரின் மறைவு நாளாக ஜூன் 21 ஆகும் (1940) என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது.

அறிவியல் ஆராய்ச்சிக் குழு உறுதிமொழியில் ‘கடவுள்’ ஏன்? அகில இந்திய பகுத்தறிவாளர் கழக தலைவர் நரேந்திர நாயக் கேள்வி

மங்களூரு, ஜூன் 24 இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் விண்ணப்பத் தில் கடவுள் மற்றும் திருமணம் தொடர்பான பகுதிகள் இடம் பெற் றிருந்தன.
அந்தப்பக்கத்தை அறவே விண்ணப்பத்திலிருந்து நீக்கிட அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி குழுவிடம் இந்திய பகுத்தறிவாளர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி குழுவின் ஆய் வாளர்களாக, பணியாற்றுப வர்களாக சேருபவர்கள் தங் களின்  விண்ணப்பத்தில் கடவு ளின் கிருபையைக் கோருவது போலவும், தங்களின் ஆய் வினை கடவுள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவியல் ஆய்வாளர்களின் விண்ணப்பத் தில் வாசகங்கள் இடம் பெற்றி ருந்துள்ளன.
அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி குழுவின் தலைமை இயக்குநர் கிரீஷ் சாஹ்னிக்கு கடிதத்தின்மூலமாக இந்திய பகுத்தறிவாளர்கழகம் இத்தகவலைசுட்டிக்காட்டி, அந்த பக்கத்தையே விண்ணப் பத்திலிருந்து நீக்கக்கோரியது.
நரேந்திர நாயக்
இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் நரேந்திர நாயக் அக்கடிதத்தில் குறிப் பிடும்போது,
“விண்ணப்பத்தில் கடவுள் குறித்த சொல் இடம் பெற்றிருப் பது ஏன் என்று பகுத்தறிவா ளர்களாகிய எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறி வியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் அடுத்த புத்தாயிரத்துக்கான ஆராய்ச்சி களில் கடவுள்குறித்த ஆராய்ச் சித் திட்டம் உள்ளதா? எந்த கடவுள்குறித்து அவர்கள் குறிப் பிடுகிறார்கள் என்று எங் களுக்குத் தெரியவில்லை.
பல இலட்சக்கணக்கிலான இந்து வழிபாட்டிடங்கள் அல் லது தாடியுடன் உள்ள ஆபிர காம் மலைமீது அமர்ந்திருக்கும் படம் அல்லது கடவுள்குறித்த சித்தரிப்புகளில் பழங்குடியினர் மத்தியில் வெவ்வேறு வகைகள் இருந்துள்ளன.
நாத்திகராக, கடவுள் நம் பிக்கை இல்லாதவராக இருக் கும் ஒருவர் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவில் ஆராய்ச்சி பணிகளை செய்ய வேண்டுமானால், அதற் கான விண்ணப்பத்தில் ஏற்கப் படுகின்ற உறுதிமொழியில் நம் பிக்கை கொண்டிராத கடவுள் என்று கூறப்படுவதன்பெயரால் உறுதி ஏற்பதிலிருந்து விதி விலக்கு அளித்திட வேண்டும். நாத்திகர்கள் மட்டுமல்லாமல் பவுத்தர்கள், சமணர்கள் ஆகி யோரும் அதுபோன்ற கடவுள் மீதான நம்பிக்கை இல்லாதவர் களாக இருப்பதால், அவர்களுக் கும் இதுபோன்ற உறுதிமொழி ஏற்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்.
அரசமைப்பு பிரிவு 51-கி(பி)
மதசார்பற்ற ஜனநாயக நாட் டில் நம்பிக்கை கொள்வதா இல்லையா என்பதிலும் சுதந் திரம் இருக்கவேண்டும். கட வுள் என்கிற ஒன்று இருக்கிறதா  என்று இதுவரையிலும் நிரூபிக் கப்படாத நிலையில், இல்லாத ஒன்றின்மீது உறுதி ஏற்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியா ளர்களை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழு  கட்டாயமாக்குவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. இதை வன்மையாகக் கண்டிப்ப துடன் உடனடியாக விண்ணப் பத்தின் உறுதி மொழிப்படிவத்திலிருந்து அந்த சொற்களை நீக்கிட வேண்டும். இது அரச மைப்புச் சட்டத்தின் 51-கி(பி) பிரிவுக்கு எதிரானதாகும். ஒவ் வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு மற்றும் மனிதநேயம் ஆகிய வற்றை வளர்க்க வேண்டும் என்று அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...