Saturday, February 29, 2020

என்ஆர்சி நடைமுறைக்கு வந்தால் அய்தராபாத்தில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்படலாம்: அதிர்ச்சி தகவல்



தேசிய குடியுரிமை பதிவேடு நடை முறைப் படுத்தப்பட்டால், அய்தராபாத்தில் 10 லட்சம் மக்கள்  வெளியேற்றப்பட லாம் என்று  தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10.5 லட்சம் பேர் தங்கள் தேசிய குடியுரிமையை   நிரூபிக்க முடியாமல் போகலாம். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப் படையாக கொண்டால் அய்தராபாத் மொத்த மக் கள் தொகையில் 39.4 லட்சம் பேரில் 27 சதவீதம் பேர் கல்வியறிவு அற்றவர்கள்.

எனவே,  என்ஆர்.சி.க் கான ஆவணங்கள் அவர் களிடம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் என்பது குறைவே. இந்த அனு மானத் தின் அடிப்படையில் 20.46 லட்சம் பேரில் 5.05 லட்சம் மக்கள் இந்துக்கள் ஆவர்.

17.13 லட்சத்தில் 5.02 பேர் இஸ்லாமியர்கள் ஆவர். அவர்கள் அனை வரும் என்ஆர்சி பட்டியலில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல் தொழில்நுட்ப நிபுணரும், ஆராய்ச்சியாள ருமான காலித் சைபுல்லா கணித்துள்ளார்.

தெலங்கானாவில் 1.26 கோடி இந்துக்களும், 14.91 லட்சம் இஸ்லாமியர்களும் என்ஆர்சி பட்டியலில் தங் களது பெயர்களை சேர்க்க முடியாமல் போகலாம். ஆந் திராவில் 1.79 கோடி இந்துக் கள், 14.05  லட்சம் இஸ்லா மியர்கள் பட்டியலில் இருந்து விலக்கப்படலாம் எனறும் அவர் கணித்துள் ளார்.

கல்வியறிவு இல்லாதவர் கள் தங்கள் பிறந்த தேதியை நினைவில் வைத்துக் கொள் ளாதபோது, ​​பெற்றோரின் பிறந்த தேதியை அவர்கள் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்றும்  அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களிடம் இரட்டை அர்த்தப் பேச்சு



நீதிபதியின் பதவி பறிப்பு

புதுடில்லி, பிப். 29 அரசுப் பணியில் சேர்ந்த பெண் ஊழி யர்களுக்குப் பாடம் நடத்திய நீதிபதி ஒருவர், இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசிய தால் வேலையை இழக்க நேரிட்டது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அரசு நிர்வாக பயிற்சி மய்யத்தின் துணை இயக்குநராக இருந்தபோது அந்த நீதிபதிக்கு அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப் பட்ட பெண் ஊழியர்களுக்குப் பாடமும், பயிற்சியும் அளிக் கும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ‘சபலபேர் வழியான அந்த நீதிபதி பாடம் நடத்துவதாகச் சொல்லிக்கொண்டு, ஆபாசமாகப் பேசியுள்ளார். சம்பந்தமே இல்லாமல் அரு வருக்கத் தக்க வகையில் பாடம் நடத்தி இருக்கிறார். இரட்டை அர்த்தம் தொனிக்கபாடம்' போதிப்பதும் உண்டு. இதனால் முகம் சுழித்த பெண் ஊழியர்கள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து புகார் அளித்து விட்டனர்.

அவர் மீது இன்னொரு வழக்கும் பதிவானது. ஜார் கண்ட் மாநிலம் கோட்டாவில் உள்ள குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதியாக இருந்த போது சலவைத் தொழிலாளி ஒருவரின் தலையில் இரும்புக் கம்பியால் சூடு வைத்துள்ளார். காரணம்? அவரின் உடை களை சலவைக்காரர் சரியாகத் தேய்க்கவில்லையாம், அந்த கோபத்தில் அவருக்கு நீதிபதி கொடுத்த தண்டனை இது.

இந்த இரு  வழக்குகளை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதி மன்றம், அந்த நீதிபதிக்குக் கட்டாய ஓய்வு வழங்கி வீட்டுக்கு அனுப்பி விட்டது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்துக்குப் போனார்.

வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் ,  தீபக் குப்தா ஆகியோர் விசாரித்தனர். பாடம் நடத்தியபோது அந்த நீதிபதி மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளைப் பேசி யதைக் கண்டறிந்தனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

‘‘நீதித்துறையில் ஒரு சின்ன பிழையைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாது என்று கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவருக்குக் கட் டாய ஓய்வு கொடுத்தது சரியே'' என்று தீர்ப்பு எழுதி ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதிப்படுத்தினர்.

காவிகளின் "கிருஷ்ணலீலா!"



பெண்ணைக் கடத்தி மடாதிபதி ஓட்டம்

சிவராத்திரி நாளில் கோயிலுக்கு வந்த 20 வயது இளம் பெண்ணுடன் 45 வயது மடாதிபதி ஓடிப் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் மாவட்டம் கோலார் தாலுகாவில் உள்ள எவுலியாகிராமத்தில் பழைமையான பீமலிங் கேஷ்வரசாமி சேவாஷ்வரம மடம் உள்ளது.  இதில் தத்தாத்ரேயா  சவதூதா (வயது 45) என்பவர் மடா திபதியாக  இருந்து வரு கிறார். மடத்தில் முழுக்க முழுக்க சைவ நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

சேவாஷ் வரமத்திற்கு எவுலியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமில் லாமல், அதை சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிரா மத்தினரும் வந்து தங்கள் குடும்ப கஷ்டங்களை மடா திபதியிடம் கூறி ஆலோ சனை பெற்று வந்தனராம்.

இம்மடத்தில் கடந்த 21ஆம் தேதி முதல் சிவ ராத்திரி விழா என்று கூறி காலை தொடங்கி நள்ளி ரவு வரை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. தினமும் நூற்றுக்கணக்கான பக் தர்கள் வந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி முதல் மடாதிபதி தத்தாத்ரேயா சவதூதாவை மடத்தில் காணவில்லை . அவர் எங்கு சென்றார் என்று புரியாமல் அனைவரும் தவித்து வந்தனர். சேவாஷ்ரமத்தில் உள்ள மூலவருக்கு மடத்தில் இருக்கும் சீடர்களே பூஜை செய்து வருகிறார்களாம்.

இதனிடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரும் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போய் இருந்தார். அவரையும் குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் 20 வயது இளம்பெண்ணுடன் 45 வயது மடாதிபதி ஓடிப் போனதாக கிராமத்தினருக் குத் தகவல் கிடைத்தது. இது குறித்து கோலார் ஊரக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனிடையில் அவர்கள் இருவரும் ரகசியமாகத் திரு மணம் செய்து கொண்டுள்ள தகவல் கிராமத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. மடாதிபதி மற்றும் அவருடன் சென் றுள்ளதாக கூறப்படும் இளம் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் எவுலியா கிராமம் மட்டுமில்லாமல் அதை சுற்றியுள்ள கிரா மங்களிலும் பரபரப்பை ஏற் படுத்தி, சாமியாரின் காமக் கொடூரத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.


மோடியின் 69 மணி நேர மவுனத்துக்கு நன்றி?



கபில்சிபல் காட்டம்

தலைநகரில் நடைபெற்ற வன்முறை குறித்து அறிந்துகொள்ள  மோடிக்கு 69 மணி நேரம் தேவைப்பட்டு உள்ளது... அதற்கு நன்றி  என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கிண்டலடித்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள சிஏஏக்கு எதிராக தலைநகர் டில்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அங் குள்ள  ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நீடித்து வரு கிறது. இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வடகிழக்கு டில்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த் பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில், சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப் பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு களை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த வன்முறை மேலும் 3 நாள்கள் நீடித்த நிலையில், சுமார்   150- க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர் களில் காவல்துறை அதிகாரி கள் உள்பட இதுவரை 39 பேர் மரணமடைந்துள்ளனர்.

கலவரத்தை உரிய நேரத் தில் கட்டுப்படுத்த மத்திய, மத்திய அரசு தவறி விட்ட தாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும்  காங்கிரஸ் உள்பட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதுகுறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் மோடிக்கு கேள்வி விடுத்துள் ளார். ‘டில்லியில் வன்முறை நடைபெற்ற சமயங்களில் நரேந்திர மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா?, கலவரம் நடந்த 69 மணிநேரம் கழித்து விழித்துக் கொண்டு, மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். விரைவான பதிலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று நக்கலாக கூறினார்.

நாட்டின் பிரதமரான அவர், இதை  முன்கூட்டியே செய்திருக்க வேண்டாமா? என கேள்வி விடுத்தவர், டில்லி காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, மக்கள் அமைதி காக்க வேண் டும் என்று வேண்டுகோள் கூட விடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

டில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  உள்துறை அமைச்சர் அமித் ஷா  வந்து பார்வையிட வேண்டும்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்றும் கபில் சிபல் வலியுறுத்தினார். இது குறித்து கபில்சிபல் பதிவிட்டுள்ள சுட்டுரையில்,

‘‘69 மணிநேர  மவுனத்திற் குப் பிறகு எங்கள் சகோதர, சகோதரிகளிடம் முறையிட்ட மைக்கு நன்றி மோடிஜி. இதற் கிடையில்: 38 பேர் இறந்தனர்,  இன்னும் எண்ணிக் கொண்டி ருக்கிறார்கள், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த னர், ஆயிரக்கணக்கான வடுக் கள் பண்புகள் அழிக்கப்பட் டன, எங்கள் முதல்வரைப் பொறுத்தவரை அவர் ஜெயித் தார்! உங்கள் அமைச்சர் காங் கிரஸை குற்றம் சாட்டுகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான கட்சியே பா.ஜ.க.!



இதோ ஆதாரம்!

மும்பை, பிப்.29 மகராட்டிரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிசின் உதவியாளருமான நரேந்திரா மேத்தா மீது ‘‘தானே'' காவல் துறை பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராட்டிரா மாநிலத்தின் மீரா ரோடு தொகுதியின் முன் னாள்  சட்டமன்ற உறுப்பின ராக இருந்தவர் நரேந்திர மேத்தா. இவர் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னா விஸ்-க்கு மிகவும் வேண்டிய வர். இதனால், அவருக்கு உதவியாளராகவும் பணியாற்றி வந்தார்.

இவர்மீது, மீராரோடு பகு தியைச்சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைப்  புகார் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய நவ்கர் காவல்துறையினர், மேத்தா மீது பாலியல் வன் கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எப்போதும் பகட்டாகவும், செல்வந்தராகவும் காட்டிக் கொள்ளும் மேத்தா, பட்னா விஸ் உடனான நெருக்கம் காரணமாக, பல்வேறு முறை கேடுகளிலும் ஈடுபட்டு வந் தார்.  மும்பை புறநகர் தானே வின் மீரா, பயேந்தர் நகரங் களின் முக்கிய நபராக மும் பையின் வடமேற்குபகுதிவரை மிகுந்த செல்வாக்கு கொண் டவராக திகழ்ந்து வந்தார்.

தற்போது அங்கு சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மேத்தாவால் பாதிக்கப்பட்டப் பெண் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையறிந்த மேத்தா, கடந்த இரு நாள்களுக்கு முன்பு திடீரென, சமூக வலை தளங்களில் இருந்து விலகி னார். இது பல்வேறு சந்தேகங் களை எழுப்பிய நிலையில், பின்னர், அவர்மீது முறைகேடு கள் சமூகவலைதளங்களில் பரவத் தொடங்கி வைரலாகி வந்தது. இது பெரும் பரபரப் பையும், பாஜகவினரிடையே சலசலப்பையும் ஏற்படுத் தியது.

இந்த நிலையில் மேத்தா மீது காவல்துறையினர் பாலி யல் கொடுமை உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டில்லி முஸ்லிம்களை கொன்று குவிக்க 5 நிமிடம் போதும்!



இந்து ஆர்மி தலைவர் மிரட்டல்
வேடிக்கை பார்க்கும் காவல்துறை
தலைநகர் டில்லியில் இருந்து 5 நிமிடம் காவல்துறையினரை அகற்றினால், அங்குள்ள முஸ்லிம்களை கொன்று குவித்து விடு வோம் என்று ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான, இந்து ஆர்மி அமைப் பின்  தலைவர் பகிரங்கமாக  மிரட்டல் விடுத்துள்ளார். இவர் பேசும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அவர்மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

டில்லியில் ஏற்பட்ட வன்முறை உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள் ளாக்கி உள்ளது. இந்த வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள்மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், டில்லி காவல்துறையிடம், பாஜக தலைவர்கள் பேசிய வன்முறை பேச்சு தொடர்பான வீடியோவை போட்டுக் காண்பித்து, அவர்கள்மீது 24 மணி நேரத்திற்குள் எஃப்அய்ஆர் பதிய வேண்டும் என உத்தரவிட்டும், செவி மடுக்காத மத்தியஅரசு, வீடியோவை ஆய்வு செய்துதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியதோடு மட்டுமின்றி, அந்த நீதிபதியையே இரவோடு இரவாக இட மாற்றம் செய்து விட்டது.

இந்த நிலையில், இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ்-சின் கிளை அமைப்பில் ஒன்றான, லக்னோவைச் சேர்ந்த இந்து ஆர்மி என்ற அமைப்பின் தலைவர் மணீஷ் யாதவ் என்பவர் முஸ்லிம்களுக்கு பகிரங்கமாக மிரட் டல் விடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில், டில்லியில் இருந்து 5 நிமிடம் காவல்துறையினரை அகற்றி னால், அனைத்து முஸ்லிம்களையும் கொன்று குவித்து இந்துராஷ்டிரம் அமைப்போம் என்று கர்ஜித்து உள்ளார். இவரது பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ள நிலையில், அவர்மீது காவல்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண் டிருக்கிறது... ஒருவேளை நாளை பிரச் சினை ஏற்பட்டு நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், இந்த வீடியோவையும் நாங்கள் பார்க்கவில்லை என அமித்ஷா வின் டில்லி காவல்துறை நீதிமன்றத்தில் சொல்லக் காத்திருக்கிறார்களோ என் னவோ! ஏற்கெனவே  இந்து ஆர்மி என்ற பெயரில் அதன் நிறுவனர் மணீஷ் வித்யாயக்கின் (மணீஷ் யாதவ்) புகைப்படத்துடன், “ஜாகோ இந்து ஜாகோ கைஸ் கஹெய்ன் கி தேஷ் ஆசாத் அய்என்று வாசகங்கள் இடம்பெற்றிருந்த சுவரொட்டிகள் ஒட் டப்பட்டிருந்தன. இது  சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்து ஆர்மி என்ற அமைப்பை நிறுவியுள்ள மணீஷ் யாதவ் ஏற்கெ னவே சமாஜ்வாடி கட்சியின் உறுப் பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...