இது ஏதோ கம்பெனியின் பெயரல்ல. ஆனால், ஒருவகையில் ஒரு லிமிடெட் கம்பெனியின் பெயர்தான். முதல் சீனிவாசன் நிறுவனத்தின் ஃபவுண்டர் புரொமோட்டர், மானேஜிங் டைரக்டராக இருந்தவர். இரண் டாம் சீனிவாசன் கம்பெனியின் நிருவாக இயக்குநர். வேறுபாடு அவ்வளவே, மேம்போக் காகப் பார்த்தால்!
கண்டு பிடித்துவிட்டிருப்பீர்களே, ஓ! இது தாத்தாத்ரேய நாமக் கம்பெனி என்று! பக்கா புத்திசாலிகளாயிற்றே!
தாத்தா சீனிவாசன் எதுவாக இருக்க நேர்ந்த போதும் தன் தஞ்சை மாவட்டப் பின்னணியை, படிக்கும்படி ஏறிப் பழைய ஏட்டுக்கு விளம்பரம் சேர்த்ததையோ, பழைய ஏட்டை வாங்கச் சொன்னவரையோ, அதற்குப் பணம் உதவியவரையோ ஒரு போதும் மறக்காதவர் ஏடு தொட்டு எத்துணையோ ஏணிப் படிகளில் ஏறிச் சிகரம் தொட்டவர்.
தஞ்சை மண்ணுக்கோ, தன் குடும்பத்துக்கோ நவீனமான ஒரு தொழில் நுழைந்து அதிலும் தடம் பதித்த சாதனையாளர்.
அவர் பேரைக் கொண்ட பேரன் சீனிவாசன், கதை வேறு/ ஃபாஷனில் இருக்கிறது. கம்பெனிக்கு பேரும் வேண்டாம், கம்பெனிப் பொருளுக்குத் தரமும் வேண்டாம். காசு மட்டும்தான் வேண் டும் என்று காசு காரியத்தில் கண்வைக்கும் ஆரியக் கூத்தாடி!
தாத்தா சீனிவாசன், குந்தியிருந்த தாயின் கருப்பை வாசலில் மெல்ல நழுவி வந்தபோது முரட்டுச் சாக்குத் துணியால் உடல்பற்றி மருத் துவச்சியால் இழுத்துப் போடபட்ட உயிர்!
அம்மாவுக்கும் வலி கொடுக்காமல், தனக் கும் வலி தெரியாமல் மணிலாப் பயிறு உடைப் பதுபோல், கருப்பை பிளந்து கச்சிதமாக வெளியே கொண்டு வரப்பட்ட பேரன் சீனி வாசன் சுக ஜென்மம்! யாரோ உழைத்து, யாரோ வளர்த்துச் சேர்த்ததை வாரிசு பாத்யதையில் சொந்தம் கொண்டாடும் அனுபவ ராஜா!
அதனால் பழசு தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் அக்கறையும் இல்லை.
ஆனால், ஆபே துயிபா எழுதியதுபோலத் தமக்கே உரிய கல்யாண குணங்களைக் காட்டத் தவறுவதே இல்லை.
சிண்டு முடிந்திடும் பழக்கம், குள்ள நரித் தந்திரத்தை வெளிப்படுத்தும் வழக்கமும் ஒட்டுவித்தை கற்ற இவர்களிடமிருந்து அகலாது எனும் உண்மை நாம் அறிந்ததுதான்.
நம் இனம் கெடுக்கும் செயலில் ஈடுபடும் ஈடில்லாக் கெடுமதியினர் செயலும் நமக்குத் தெரிந்ததுதான்.
பொய்க் குரு ஒருவர் கூறியதைப் பேரனே அச்சுப் போட்டிருக்கிறார்: செய்வதைத் திருந்தச் செய்யுங்கள்... வயதின் வேகத்தில், சுபலத்தின் உந்துதலில் செய்யாதீர்கள்.
ஆனால் வயதின் வேகத்தில் (பேரும் புகழும் பெறவேண்டும் என்கிற) கபலத்தின் உந்துதலில் செய்தவரைப் பெருமைப்படுத்திப் (பெரியா ரைச் சிறுமைப்பத்துவதாக நினைத்துக் கொண்டு) படம் காட்டுகிறார் பேரன் சீனிவாசன்.
மும்பையில் உள்ள பால் தாக்கரே, சில ஆண்டுகளுக்கு முன் தன் கழுத்தில் கட்டியி ருந்த கொட்டை, மணிகளை யெல்லாம் அறுத் துப் போட்டார். வீட்டிலிருந்த (அவர் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருந்த) பொம் மைகள், படங்கள் எல்லாவற்றையும் உடைத் துப் போட்டார். கடவுளே கிடையாது என்று உரக்கக் கூறினார். ஊர் முழுக்க கேட்டது. ஏடுகள் எல்லாம் எடுத்து எழுதின.
கணேசனை வைத்துப் பால கங்காதர் திலக் அரசியல் பண்ணியது அந்தக் காலம். இன்றைக் கும் அரசியல் பண்ணிக் கொண்டிருப்பவர் பால் தாக்கரே! அப்படி இருக்கையில் அவரா? இப்படிப் பேசினார்? எல்லோரும் ஆச்சரியப் பட்டார்கள். சிலர் வாய்விட்டே கேட்டுவிட் டார்கள்.
அப்போது தி.க. தலைவர் கி. வீரமணி அவர்கள் சொன்னார், ஏதோ ஒரு ஆத்திரத்தில் அவர் பேசியிருக்கிர், கடவுள் இல்லை என்பதைப் பெரும் ஆராய்ச்சிக்குப் பிறகுதான் சொல்லமுடியும். மனைவி இறந்த ஆத்திரத்தில் அவர் கூறிவிட்டார். அதனை உளப்பூர்வமாகக் கூறியதாக ஏற்க முடியாது என்று பதில் கூறினார்.
பால்தாக்கரேயின் துணைவியார் திடீரென இறந்துவிட்டார். இறந்த நாள், பிள்ளையாரின் பிறந்தநாள். பிள்ளையாரையே கும்பிட்டுக் கொண்டிருந்த தம் துணைவி பிள்ளையாரின் சதுர்த்தி அன்றைக்கே மண்டையைப் போட்டு விட்டதைச் செரிக்க முடியாமல், கபலத்தின் உந்துதலில் கடவுளே இல்லை எனக் கூறி விட்டார். அவர் பகுத்தறிவாதியா? நாத்திகரா? இல்லவே இல்லை! ஆத்திரத்தில் தடுமாறிக் கொட்டிய நாத்திகச் சொற்கள் அவை! அதனால் அவரை நாத்திகராக நாத்திகர் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
விடலைப் பருவத்தில் - வயதின் வேகத்தில் - கபலத்தின் உந்துதலில் - எதையோ செய்த ஓர் ஆள், சில வாய்ப்புகள் பெற்று நாத்திகர் தலை வரின் அருகில் இருக்க நேர்ந்ததைப் பயன்படுத் திக் கொண்டு - வேறு ஒரு சபலத்தின் உந்துத லில் தப்புக் காரியம் பண்ணியதால், வெளியேறி இருக்கிறார். வேறு அமைப்புக்குப் போய் அங்கேயும் இருக்க முடியாமல் மனைவிக்கு மரியாதை கொடுத்து மனசாட்சிக்கு மரி யாதை கொடுத்து சுட்ட மண்ணை நெற்றியில் பூசிக் கொண்டிருக்கிறாராம்.
பாலகாட்டுக்குப் பக்கத்தில் ரப்பர் தோட் டத்தில் தேடிப்பிடித்துப் படம் பிடித்து எழுதித் தீர்க்க வேண்டிய தேவை என்ன பேரன் சீனி வாசனுக்கு? (பார்க்க: ஆனந்த விகடன் - 10-.9-.08). பகுத்தறிவாளர்களுக்கு இந்தப் பெருமாள் களெல்லாம் அதிர்ச்சியோ, ஆச்சரியத்தையோ தருபவர்களல்லர்! கொதி தாங்க முடியாத நொய் யரிசிகளை, புடம் போடும்போது உதிர்ந்த சாம் பல்களை, அடித்துத் தூற்றிச் சலித்து நீக்கிய பிறகும், ஊறவைக்கும்போது மிதக்கும் நெற் பதர்களை கணக்கில் எடுத்துக் கொள்வதே கிடையாது.
தன்னாலான கைங்கர்யத்தைச் செய்து அல்ப சந்தோஷம் அடைகிறது ஆரியம் என்பதல்லா மல் வேறு என்ன? அக்கிரகாரத்துப் பூணூலால் கட்டி ஆலமரத்தை இழுத்துப்போட முடியுமா? ஆசை வெட்கமறியாது என்ற முறையில் அம்பி எம்பிக் குதிக்கிறது. யானையின் வாலில் ஈ உட்கார்ந்ததாலேயே, யானையின் கம்பீரம் குறைந்து விடுமா? பெருமாள் சேதியைப் போட்டதாலேயே, பெரியார் அப்படி அல்ல என்றாகிவிடுமா? அவர் கொள்கைகள் குறைவுபட்டவை என பெருமாள் உதிர்த்து விட்ட காரணணத்தா லேயே - எவரும் கருதிவிடுவார்களா?
பெரியார் உலகளவில் உயர்ந்து வளர்ந்து வருகிறார், உலகப் பெரும் மனிதநேயப் பகுத் தறிவு நாத்திகர் டாக்டர் பால்கர்ட்சு தமிழகம் வந்து, 5,67,9 நாள்களில் பெரியார் கோட் டத்தில் பேசுகிறார் என்ற சேதி பார்த்தவுடன் பேரன் சீனிவாசன் பெருமாள் சேதி வெளியிடுகிறார்.
பெரியாரின் பழைய காரை வாங்கியவர், பெரியாரின் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வில்லை, என்பதை அவரே தெரியபடுத்தியிருக் கும் நிலையில்சேதி மூலம் சீனிவாசன் தெரிவிக்க விரும்பும் மெசேஜ் என்ன?
மெசேஜ் என்னவாக இருந்தாலும், ஆரியத் தின் யூசேஜ் என்ன என்பது புரிந்த எங்களுக்கு அதிகமாகத் தோன்றவில்லை - நாங்கள் ஆரிய மாயையை அறிந்தவர்கள், புரிந்தவர்கள், அதனை அழித்துத் திரா விடர்களை மீட்டவர்கள். ஆனாலும் ஆரியம் தலை நீட்டுகிறது, துளிர்க்கப் பார்க்கிறது.
அதனை வெட்டிக் கருக்கித் தீர்த்துப் பொசுக்கிடும், கந்தகக் கருஞ்சிறுத்தைகள் லட்சோப லட்சம் உண்டு. என்பதைப் பேரன்களுக்கு நினைவு படுத்துகிறோம்.
பெருமாள்கூட, கடவுளைக் கும்பிட்டுத் தடம் மாறியிருக்கிறாரே யொழிய, பெரியாரின் ஏனைய பன்முக ஆற்றல்களில் இன்னமும் பற்றும் பிடிப்பும் கொண்டு விளங்கி, கண்ணுக்குப் புலப்படாத கருப்புச் சட்டைக்காரராக (ஆவி எழுதுவதைப்போல கண்ணாடியின் கருப்பு ஃபிரேம்) இருக்கிறார் என்பதாகும். அவரை வெளிக்காட்டிய பேரன் சீனிவாசனுக்கும் நன்றி கூறலாமோ?