Thursday, February 13, 2020

சிவில் சர்வீஸ் பதவிக்கு முதல்நிலை தேர்வு: மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம்

சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு மே 31-இல் நடைபெற உள்ளது. இதற்கு மார்ச் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்ஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவி களுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
அதன்படி நடப்பு ஆண்டு 796 சிவில் சர்வீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது. முதல்நிலை தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது. விருப்ப முள்ள பட்டதாரிகள்  இணையதளம் வழியாக மார்ச் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...