Saturday, July 30, 2011

விடுதலை செய்திகள் 30/07/2011

அகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது

அகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது

முதல் அமைச்சர் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்காதது ஏன்?திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கைதமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உட்பட அனைத்துக் கல்வித் துறைகளிலும் நுழைவுத் தேர்வு சட்டரீதியாக ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அகில இந்திய ரீதியில் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு என்கிற மருத்துவக் கவுன்சிலின் முடிவைத்...
30 ஜூலை 2011
மேலும்

நல்ல சந்தர்ப்பம்


இந்திய நாட்டின் பரிபூரண விடுதலையைக் குறிக் கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட காந்தியின் இயக்கங்கள் ஒரு வழியாய் முடிவடைந்து விட்டன. காந்தியும் அவரது சகாக்களும் பத்து வருடங்களுக்குப் பிறகாவது தங்களது தப்பான வழியை உணர்ந்து தங்கள் போக்கைத் திருப்பியது மிகவும் போற்றத்தக்கதே. காந்தியின் உப்பு சத்தியாக்கிரக திருவிளையாடல்களின் பயனாய் ஏற்பட்ட அடக்குமுறையால் இந்திய அரசியல் விடுதலைக் கிளர்ச்சிகள் ஒருவகையில் தம்பித்துப் போய்விட்டன வென்பதைக் காந்தியே ஒப்புக் கொள்வார். இந்தப் பரிதாபகரமான நிலையிலிருந்து தப்பவும் இந்து மதம் என்ற போர்வையில் பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை மீண்டும் நடத்தவும் ஒரு வழியையும், சந்தர்ப்பத் தையும் எதிர்பார்த்து வந்தனர், நமது தேசியவாதிகள், இவர்களது திக்கற்ற நிலையை நன்குணர்ந்த லார்டு வெல்லிங்டன் இந்திய சட்டசபையைக் கலைத்து மறுதேர்தல் நடத்தப் போவதாக ஒரு நாடகம் நடித்தார். திக்கு முக்காடி இறக்குந் தருவாயில் தண்ணீரில் தவிக்குமொருவன் தனதெதிரில் வரும் ஒரு துரும்பைக்கூட கைப்பற்றித் தனது உயிரை நிலைக்க வைக்கப் பார்ப்பது சகஜமே. எனவே இந்த நிலையில் காந்தியார், தான் இந்த நாட்டின் அரசியல் இயக்கச் சர்வாதிகாரி என்று தன்னைத் தானே விளம்பரப் படுத்திக் கொண்டு தனது சட்ட மறுப்பியக்கத்தை வாப வாங்கிக் கொள்வதாகவும், சுயராஜ்ய கட்சி என்ற பழைய பார்ப்பனர் கூட்டத்திற்குச் சட்ட ரீதியாக அரசியல் கிளர்ச்சி நடத்த இடந்தருவதாகவும் வெளியிட்டுத் தனது கவுரவத்தை நிலை நிறுத்திக் கொள்ள எத்தனித்தார்.
சமயத்தை எதிர் பார்த்து வந்த பார்ப்பனர்களும் அகில உலக ராஜிய நாடக நடிகரான கனம் சாதிரியார் முதல், தேவதாகைங்கர்யப் பிரியர் சத்தியமூர்த்தி வரையில் ஒரே கூட்டமாக திடீரெனக் கிளம்பி இந்த நாட்டை ஒரு கலக்கு கலக்க எத்தனித் துள்ளனர். ஆனால் நாட்டின் நிலையையும் நாட்டு மக்களுக்கு இவர்களது எத்தனங்களால் ஏற்படுத்துவதாக பிரகடனம் செய்யும் பரிகாரங்களையும் சமதர்மிகளாகிய நாம் கவனிக்குமளவில் இந்தச் சில்லறைச் சீர்திருத்தங்களால் எவ்விதப் பயனுமில்லையென்று கருதுவதுடன் இந்த நல்ல சந்தர்ப்பத்தை இந்தப் பிற்போக்காளரது திட்டங்களாய் பொது ஜனங்களுக்கு நன்மை உண்டாவதைவிட தீமையே அதிகரிக்குமென்பதையும் பகிரங்கப்படுத்த உபயோகித்துக் கொள்ளவேண்டியது மிக அவசியமெனக் கருதுகின்றோம்.
- புரட்சி - கட்டுரை - 22-4-1934

திருச்சி தேவருக்கு துணை


திருச்சி முனிசிபல் சபைத்தலைவரும், நீலகிரி முனிசிபல் சபைத் தலைவரும் இன்று சர்க்கார் உத்தரவைச் சந்தித்து இருக்கிறார்கள். நீலகிரி முனிசிபல் சபைத் தலைவரை, அவர் ஏன் ராஜினாமா செய்யக் கூடாதென்பதற்குச் சரியான காரணம் காட்டுமாறு நமது மாகாண முதல் மந்திரியான கனம் பொப்பிலி கேட்டு இருக்கிறார். இவ்விதம் கேட்பது தப்பு என்று இந்துகூட கோபித்துக் கொள்கிறது. இதைப் போன்றுதான் திருச்சி நகர சபை தலைவரைக் கேட்டதும். தப்பு என்று நாம் சொல்கிறோம்.
திருச்சி, நீலகிரி இவ்விரண்டு நகரசபைத் தலைவர்களையும் நாமும் தமிழ் நாட்டாரும் நன்கு அறிவோம். இவர்களை இவ்விதம் விலக்கக் காரணம் கேட்பதும் நியாயமானது என்று நமக்குத் தோன்றவில்லை. நியாயமல்ல என்பதுடன் இவ்வித உத்தரவுகளும் மே.த.க. தலையீட்டினாலாவது உடனே வாப வாங்கிக் கொள்ளப்படுமென்று நம்புகிறோம். மே,த,க. முன்பு மதுரை ஜில்லா போர்டில் ஜாடையாக புத்தி மதிகூறி சமரசம் உண்டாக்கினது போல் இதனையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.
நடப்பு : முனிசிபல் சபை சம்பந்தமாக கோர்ட்டுகளில் வந்த வழக்குகள் பலதையும், முனிசிபல் சபை நடவடிக்கைக் காலங்களில் அங்கத்தினர் களுக்குள் நடக்கும் வாக்கு வாதங்களையும் தொடர்ந்து படிப்பவர்கள் திருச்சி, நீலகிரி முனிசிபால்டிகளைப் பற்றிதவறாக எண்ணமாட்டார்கள்.
முனிசிபல் மோட்டார்களுக்கு எண்ணெய் வாங்கியதாகக் கணக்கு காட்டிவிட்டு, காலி பெட்ரோல் டின், வாங்கிய எண்ணெய் அளவுக்கு இல்லையே என்று கேட்கப்பட்ட சபைத் தலைவர், முனிசிபல் எருக்கள் முழுவதையும் தன் வீட்டு நிலத்தில் கொட்டிவிட்டு, குப்பைகளை ஏன் குத்தகைக்கு விடக்கூடாது என்று கேட்கப்பட்ட காலத்தில் கையை விரித்த முனிசிபல் சபைத் தலைவர். முனிசிபல் செலவின்படி சேர்மெனால் கையொப்ப மிட்டுக் கிழிக்கப்பட்டு செக்கானது பேங்கில் மாற்றப்பட்டு அச்செலவினம் எங்கு போக வேண்டுமோ, அங்கு போகாததால், பாங்கிகாரன் முனிசிபல் சபைக்கு லாயர் நோட்டி கொடுத்ததும் அதைப் பற்றி கேள்வி கேட்டதும், பேந்த பேந்த விழித்த தலைவர், இதைப் போன்ற வேடிக்கை விநோத நகர சபைத் தலைவர்கள் நமது மாகாண முனிசிபால்டிகளில் பலர் இருந்தார்கள்;  இப்பவும் இருக்கிறார்கள். இவர்களில் எந்தப் பிரிவையும் சேர்ந்தவர்கள் திருச்சி, நீலகிரி நகர சபைத் தலைவர்களல்ல. அவ்விதம் சர்க்கார் உத்தரவிலும் இல்லை. தல அதிகாரிக்கும் ஸ்தாபன அதிகாரிக்கும் வந்த சண்டையின் சப்தம் போலவே, உத்தரவின் தொனி தொனிக்கிறது. மிக அற்பமான பிரச்சினையில் முதலில் வருத்தம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.
தண்ணீர் சப்ளை செய்ய வேண்டிய எந்திரம் எதெது, எந்தக் குழாய் வழியாக நகரத்துக்குள் தண்ணீர் வந்தது, இஞ்சினீர் சூப்ரவைசர் இவர்களில் யார், யார், வேலை பார்க்கலாம் என்பது போன்ற மிக அற்பமான பிரச்சினையிலிருந்து பிறந்த புழுவானது, நாக்கு பூச்சியாகி, பல்லியாகி, ஒணானாகி, உடும்பாகி, பாம்பாகி நல்ல பாம்பு ஆச்சப்பா என்ற கதையாக சேர்மெனை ஏன் விலக்கக் கூடாது என்று ஜி.ஓ. கேட்கிறது.
பல்லியாய் இருக்கும் போது, அல்லது ஓணானாக மாறின போது நமது கனம் முதல் மந்திரியும் முனிசிபல் சபை முக்கியதர்களும் சந்தித்து, கலந்து பேசியிருந்தால், இன்று பாம்பாக மாற இடமிருந் திருக்க முடியாமல் போயிருக்கும். போனது போச்சு, சென்னை சர்க்கார் முக்கியஸ்தர்களும் சட்டப்படிதான் போவதாக எண்ணி நடந்து இருக்கிறார்கள். இரு நகர சபைத் தலைவர்களும் சட்ட மீறுதலுக்கு ஆளாகாதுதான் நடந்திருக்கிறார்கள். முடிவிலோ சர்க்கார் அவர்களுக்குள்ள, ஆசார தோரனையில் ஏதேச்சதிக் காரமாக நடந்துவிட்டார்கள்.
இதை அவ்விரு நகர மகாஜனங்களும், தமிழ்நாட்டில், அவ்விரு சபைத் தலைவர்களின் விரோதிகளும்கூட ஒப்புக் கொள்ளுகிறார்கள். இப்பயமுறுத்தல் அனாவசியம். இனியும் இக்கடுமையான நிலை, மிகக் கடுமையாகக் கூடாது என்று ஆசைப்படுவதுடன் விரைவில் நல்ல செய்திகிட்டுமென்பதை எதிர்பார்க்கிறோம்!
பார்ப்பான் தான் உத்தியோகத்துக்கு லாயக்கானவன், பார்ப்பன கவுன்சிலர் ஜகாவாக இருக்க கூடாது, எப்படியும் பார்ப்பான் அண்டிக் கெடுப்பான் என்று சுயமரியாதைக்காரன் சொல்லும் போது சீறும் மேதாவிகளே மு. தலைவர்களே! இச்சம்பவங்களை உங்களுக்காகவே எடுத்துக்காட்டுகிறோம். இவ்விரு தலைவர்கள் மு.ச. இருந்து விலகினாலும் இவர்கள் நகரத்துக்கு இவர்கள் தான் தலைவர் என்பதை சர்.சி.பி யோ, சிங்கமய்யங்காரோ, மூர்த்தியோ, மறுக்க முடியாது, மறுத்து வால் ஆட்ட முடியாது. என்றாலும், பார்ப்பனியம் எந்தெந்த விதமெல்லாம் பார்ப்பனர் அல்லாதாரை அல்லல் படுத்துகிறது என்று பார்த்தீர்களா?
தலைவரே! உமது செய்கை நியாயமானது, நீவிர் தஞ்சையில் செய்த தியாகத்துக்கு இன்று பலன் அனுபவிக்கிறீர். நல்ல பாம்புக்குப் பால் வார்த்தாலும், அது நல்ல விஷத்தைத்தான் கக்கும். இதைக் கண்டு திடுக்கிடுதல் வீரன் செய்கையன்று. உமது உதவியையும், துணையையும், நொடிக்குள் மறந்து உமது நியாயமான செய்கை மீது குற்றம் கற்பித்துவிடும்படி முதன் மந்திரியைத் தூண்டியது எது? அவரின் செல்வச் செருக்கும், அர்ப்பனுக்கு வந்த வாழ்வுமா? அல்ல. திருச்சியில் உள்ள சில அய்யர், அய்யங்கார், இவர்களின் உறவு அவசியமென்ற கனம் மந்திரியின் எண்ணமே, உம்மை ஏன் ராஜீனாமா செய்யக்கூடாதென்று கேட்கச் செய்தது வாதவம், தேவரே தீவிர தலை நிமிர்ந்து உம்மை இழிவுபடுத்த எண்ணிய மந்திரியை, மாஜி மந்திரியாக ஆகும்படி செய்ய முயல்வீரா? அது உம்மால் முடியாததா?
- புரட்சி - கட்டுரை - 22.4.1934

பெரியார் என்றும்.... பெரியார் தான்!...


நான் பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளைக்கு நிர்வாகக் குழு தலைவராக இருந்த சமயம், எனது ஜமீன்தார் நண்பர் ஒருவர் தனது பிள்ளைக்குக் கல்லூரியில் படிக்க இடம் வேண்டுமென்று கடிதம் எழுதி என்னை சிபாரிசு செய்யச் சொன்னார்...
பிராமணரல்லாத மாணவர்கள் இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக் கிறார்கள்! அதனால் இந்த மாணவருக்கு எப்படியும் ஓரிடம் வேண்டுமென்று கடிதம் எழுதி பச்சையப்பன் கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தேன். சில நாட்களுக்குப் பிறகு கல்லூரியில் எந்த இடமும் இல்லை என்று எனக்குப் பதில் வந்தது! அதற்குப்பின் பல பிராமண மாணவர்களுக்கு இடமளித்திருப்பதை அறிந்தேன்! இந்த சம்பவம் என்னை எவ்வளவு வேதனையில் ஆழ்த்தி இருக்கும்! என்று சர்.பிட்டி தியாகராயர் குறிப்பிடும் செய்தியை (ஆதாரம் சர்.பிட்டி.தியாகராயர் முதல் டாக்டர் கலைஞர் வரை என்ற நூலில் பக் 67,68 ) படிக்கும் போது பார்ப்பனரின் ஜாதி வெறியும், ஆதிக்க உணர்வும் எந்த அளவுக்கு கொடி கட்டி பறந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. அதே நேரத்தில்... அதே ஜாதி வெறியும் ஆதிக்க உணர்வும் இன்னமும் அவர் களை விட்டு சிறிதும் விலகவில்லையே என்பது தான் மிகவும் வேதனைக்குரிய செய்தி!...
இதைத் தான் அய்யா அவர்கள் அன்றே அருமையாக விளக்கி இருக்கிறார்கள்!...
ஆரிய -- திராவிடப் போராட்டத் தில் ஒற்றுமை ஏற்பட வழியுண்டா? என்ற கேள்விக்கு.
ஒற்றுமை ஒத்தகருத்துள்ளவர் களால் மட்டுமே முடியக் கூடியது! குரங்குக்கும், நெசவாளிக்கும் ஒற்றுமை ஏற்பட முடியுமா? நெசவாளி நெய்து கொண்டே இருப்பான். குரங்கு இழைகளை அறுத்துக் கொண்டே இருக்கும்!! என்றார். இதைவிட பார்ப்பனர் குணத்தை வேறு எவ்வாறு தெளிவாக விளக்க முடியும்? எத்தகைய ஆழமான, அற்புதமான கருத்து விளக்கம்! இது அய்யாவுக்கு மட்டுமே கை வந்த கலை.
- நெய்வேலி க.தியாகராசன் (கொரநாட்டுக் கருப்பூர்)

Friday, July 29, 2011

இந்துத்துவாவுக்கு எடுத்துக்காட்டு கருநாடக பா.ஜ.க. ஆட்சி

கருநாடக மாநிலத்தில் 2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சட்ட விரோத சுரங்க தொழில் குறித்து லோக் அயுக்தா விசாரணை ஒன்றை மேற்கொண்டது. அதற்கான 25 ஆயிரத்து 228 பக்கங்களைக் கொண்ட ஓர் அறிக்கை கருநாடக மாநிலத் தலைமைச் செயலாளரிடம் நேற்று அளிக்கப்பட்டுள்ளது.

லோக் அயுக்தா தலைவர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

முதல் அமைச்சர் எடியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு சுரங்க நிதி நிறுவனம் ஒன்று நன்கொடையாக ரூ.10 கோடி வழங்கியுள்ளது. இதற்குக் கை மாறாக அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசிடமிருந்து சில அனுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக மாநில அரசிடம் நிலுவையில் இருந்த கோப்புகள் அனுப்பப்பட்டு வேலை முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

Thursday, July 28, 2011

கணிப்பொறி முன் உங்கள் முதுகை காப்பாற்றுங்கள்


உலகம் கம்ப்யூட்டர் பின்னால் என்று செல்ல தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் நிறைய நோய்களுக்கு வழி வகுத்து விட்டான். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. கம்ப்யூட்டர் புரட்சி நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்களை ஏற்று கொண்டதை போல இந்த சில மாற்றங்களையும் நாம் ஏற்று கொண்டு வாழப் பழகி விட்டோம், முப்போகம் நெல் விளைந்த நிலங்கள் இன்று வசிப்பிடங்களாக மாற்றப்பட்டு கம்ப்யூட்டர் புழுவாய் மனிதன் வாழப் பழகிவிட்டான். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் பணி புரிவதால் ஏற்படும் வியாதிகள் பல, அதில் ஒன்றான முதுகு வலி பற்றியும், அதை நம்மால் எப்படி தவிர்க்க முடியும் என்பதைப் பற்றியும் இங்கே அறிந்து கொள்ளலாம்.

தண்டு வடம் ஒரு நுண்ணிய பாதுகாப்பான வடிவமைப்பு. நம் உடலில் 33 முதுகு எலும்புகள் உள்ளன. உங்கள் முதுகின் நடுவில் உள்ள கோட்டில் நீங்கள் மெல்ல அழுத்தி உணரும் போது இந்த முதுகு எலும்புகளை உங்கள் கை விரல்களால் உணர முடியும். நாம் தொடர்ந்து கணிபொறி முன் அமர்ந்து பணி புரியும் போது முதுகெலும்பு உள்ள நாம் அந்த எலும்புகளை அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றோம். என்ன பாதிப்புகள் இதனால் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
1 . ஒரு குறிப்பிட்ட அழுத்தம் வரை தாங்கி கொள்ளும் நம் முதுகெலும்பு, அழுத்தம் தொடர்ந்து அதிகமாகும் போது முதலில் அதன் வலு தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது.

2 . அதன் வலு தன்மை இழக்கும் போது அதன் வடிவமைப்பு சிறிது சிறிதாக மாறத்தொடங்குகிறது.

3 . அழுத்தம் அதிகரித்து தன் நிலை மாறிய எலும்புகள், பின்னர் மெதுவாக காலப்போக்கில் தேய ஆரம்பிக்கறது. இதை மருத்துவர்கள் முதுகு எலும்புத்தேய்மானம் என்று சொல்கிறார்கள். ( spondylosis / spondylolysis )
முதல் இரண்டு நிலைகளும் நம்மால் கட்டுபடுத்தி சரி செய்யும் நிலை. இதனை மருத்துவர்கள் prevention better than cure என்பார்கள். ஆனால் நாம் இந்த நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்ற பின்பே மருத்துவரை நாடுகிறோம். இது மனித இயல்பு குறை கூற ஒன்றும் இல்லை.
சரி என்ன செய்யலாம் இதை முடிந்த வரை தடுக்க. இதற்கு மருத்துவம் கூறும் வழி முறைகள் என்ன.

1 .படுத்து கொண்டு மிக நீண்ட நேரம் facebook, orkut, blogging, வலம் வருவதை முற்றிலும் தவிருங்கள்.

2 . உங்கள் கணினி உங்கள் உயரத்திற்கு சரியாக அமைவது மிக முக்கியம்.

3. நீங்கள் உட்கார்ந்து பணி புரியப் போகும் நாற்காலி சரியான உயரமும், நல்ல வசதியுடையதாகஉள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

4 . நாற்காலியில் உங்கள் முதுகைத் தாங்கும் பகுதி சரியான உயரத்துடனும், மிருதுவாகும் இருக்க வேண்டும்.

5. உங்கள் கால் பாதம் எப்பொழுதும் தரையை தொடும் படியான உயரம் உள்ள நாற்காலிகளை உபயோகிப்பது மிக நல்லது.

6. மிக நீண்ட நேரம் தொடர்ந்து கணினி முன் அமர்வதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து தண்ணீர் குடிக்க இடம் பெயருங்கள். எழுந்து நடப்பதால் உங்கள் ரத்த ஓட்டம் புதுபிக்கப்படும்.

7. இது உங்கள் முதுகெலும்புகளை அழுத்தில் இருந்து சிறிது நேரம் மீட்டு எடுக்கும்.

8. கணினி திரையை வேலைப் பளுவால் உற்று நோக்க ஆரம்பித்து விடுகிறோம் மிக விரைவாக இதனை தவிருங்கள், முடிந்த வரை உங்கள் கண்களை 45 நிமிடங்களுக்கு ஒரு முறை இடது வலது புறம் திரும்பி பார்வைக் கோட்டை அகலப்படுத்தி விட்டு மீண்டும் திரையில் முழுகலாமே.

9. முதுகுப் பகுதியை சிறிது வலப்புறம், இடப்புறம் திருப்பி வளைத்து சிறிய உடற்பயற்சி செய்து விட்டு மீண்டும் அமரலாம்.

10. உங்கள் முதுகெலும்பு முடிந்த வரை நேர்கோட்டில் செங்குத்தாக இருப்பது நலம், ஆனால் இதனை நம்மால் செய்ய முடியாது, இதற்காகத்தான் நாற்காலிகள் இதனை கருத்தில் கொண்டு நவீன வடிமைப்புடன் வருகின்றன. அதற்காகப்பிரத்தியோகமாக வடிமைத்த நாற்காலிகள் வாங்கி பயன்படுத்துங்கள்! முடிந்தவரை முதுகைக் காப்பாற்றுங்கள்!!

தி. செந்தில்குமார் 
இயன்முறை மருத்துவர்,
கல்லூரி விரிவுரையாளர்,
ராசிபுரம்

உச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந்திருந்தால்..

லண்டன் - தொலைக் காட்சி 4 - ஒளிபரப்பு உலக மக்களின் மனசாட் சியை உலுக்கியது! பார்த்தவர்கள் குமுறினர் - வாய்விட்டுக் கதறினர்.

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமார துங்காவே இதுபற்றிக் கூற முன்வந்தபோது துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீர் மல்கி யுள்ளனர்.

தனது மகன் அந்தத் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு, சிங்கள வன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவ தாகக் கூறியுள்ளான். மகளும் தன் வேதனையைப் புலப்படுத்தியுள்ளார். இந்தத் தகவல்களை சந் திரிகா அம்மையாரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இலங்கைத் தீவின் முன்னாள் அதிபரின் இந் தப் பேச்சு தமிழ் ஆங்கில ஏடுகளில் வெளிவந் துள்ளது.

அதே நேரத்தில் தினமலர் குடும்பத்தைச் சேர்ந்த காலைக்கதிர் (சேலம் பதிப்பு 26.7.2011) ஏட்டில் எப்படி செய்தியும் தலைப்பும் வெளிவந்துள் ளது தெரியுமா?

தலைப்பு: தமிழர் களுக்கு ஆட்சியில் பங்கு இலங்கை மாஜி அதிபர் கோரிக்கை - இதுதான் தலைப்பு உள்ளுக்குள் வெளி வந்துள்ள செய்தியில் எந்த ஒரு இடத்திலும் லண்டன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற தமிழர்கள் படு கொலைக் காட்சியை சந்திரிகா அம்மையார் பார்த்துக் கண் கலங்கிய தாகக் கூறியது பற்றியோ, அவரது மகனும், மகளும் துயரப்பட்டது குறித்தோ ஒருவரிகூட இடம் பெறாமல் முற்றிலுமாக இருட்டடிப்புச் செய்து செய்தியை வெளி யிட்டுள்ளது தினமலர் குடும்பத்தின் காலைக் கதிர்

தமிழன் மாமிசம் இங்குக் கிடக்கும் என்று போர்டு போட்ட சிங்களக் காடையர்களுக்கும் இந்தத் தினமலர், காலைக்கதிர் பார்ப்பனப் பாசிசக் கும்ப லுக்கும் இதே பாணியில் செயல்படும் துக்ளக், கல்கி வகையறாக்களுக் கும் என்ன வேறுபாடு?

தமிழ் ஈழத்தில் கொல் லப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாயிற்றே - தமி ழினப் பச்சிளம் பாலகர்களாயிற்றே!

ஒரே ஒரு பார்ப்பானின் உச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந் திருந்தால் அடேயப்பா, எத்தனைப் பத்திகளில், எத்தனைக் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு, நிர்வாண நர்த்தனம் ஆடித் தீர்த்திருப்பார்கள்?

சேலம் காலைக்கதிர் இப்படி தலைப்பிட்டு செய் தியை இருட்டடித்து வெளியிட்டு இருக்க, சேலம் பதிப்பு தினத்தந்தி எப்படி செய்தியை வெளியிட்டுள்ளது?

இலங்கைப் போரில் நடைபெற்ற தமிழர்கள் படுகொலை காட்சி களைச் சொல்லி கண் கலங்கிய சந்திரிகா என்று தலைப்பிட்டும், லண்டன் வீடியோ காட்சியைப் பார்த்து தாமும் தம் பிள்ளைகளும் கலங்கியது குறித்தும் சந்திரிகா கூறியதை தினத்தந்தி விரிவாகவே செய்தியை வெளி யிட்டுள்ளது.

காரணம் - தினத் தந்தி தமிழன் நடத்தும் பத்திரிகை - காலைக் கதிர்களோ பார்ப்பனர் களால் நடத்தப்படும் பத்திரிகை.

பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று அப்பாவித்தனமாக நம்பும் ஏமாறும் ஏமாளித் தமிழர் கள் இதற்குப் பிறகாவது சுத்த ரத்தத்துடன் சிந்திப் பார்களாக!

(குறிப்பு: காலைக்கதிர் செய்திக் கத்தரிப்பை அனுப்பி உதவியவர் - சேலம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு சி. பூபதி).

பேராவூரணி பகுத்தறிவுத் திருவிழா

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பன்னாட்டு மாநாட்டில் கார்பன் சமநிலை பற்றிய ஆவணம் வெளியீடு

வல்லம், ஜூலை 27- தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் வளரும் பசுமைத்தொழில் நுட்ப பன்னாட்டு மாநாடு-2011 மற்றும் கருத்துக்காட்சி-2011 என்ற தலைப்பில் நான்கு நாள் (ஜூலை 27 முதல் 30 வரை) நடைபெறும் மாநாட்டினை இன்று (27.7.2011) மேதகு இந்திய குடியரசு மேனாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இம்மாநாட்டில் புதுடில்லி பாதுகாப்பு அமைச்சகத்தின் மேதகு விஞ்ஞானி டாக்டர் ஆ.சிவதாணுபிள்ளை அவர்கள் வெளியிட்ட கார்பன் சமநிலை பற்றிய பல்கலைக் கழக ஆவணத்திலிருந்து......
அறிமுகம்
சிறிதளவும் கரிமக் காற்று இல்லாமல் சுற்றுச் சூழலை ஆரோக்கியம் நிறைந்ததாக வைத்திருப்ப தற்கான வழி முறைகளைக் கண்டறிய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை விவரிக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டவை இந்த சிறு வெளியீடு. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், அவர்களைச் சமூக நலப் பணிகளிலும் கூட உயர்த்தவும் முடியும் என்று இப் பல்கலைக் கழகம் உறுதியாக நம்புகிறது. நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து வசதிகளும் கிராமப் புறங்களுக்கும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்று கடந்த 20 ஆம் நூற்றாண்டின் 40 ஆம் ஆண்டுகளிலேயே தனது பேரறிவுடன் கூடிய ஆலோசனையை தந்தை பெரியார் அவர்கள் தெரிவித்ததற்கு இணங்க, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களிடையே உள்ள இடைவெளியை நீக்குவது என்பதே ஒரு மாபெரும் பணியாகும். நாம் வாழும் இந்த பூமியை ஆரோக்கியம் நிறைந்ததாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆக்குவது மட்டுமன்றி, பூமி நாளுக்கு நாள் வெப்பமயமாகிக் கொண்டு வருவதைக் குறைப்பதும் நமது இலக்காகும்.
மத்திய-மாநில அரசுகள், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகள், புதிய மற்றும் மறுசுழற்சி முறையில் மின்னாற்றல் தயாரிப்பது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், மனித வள மேம்பாட்டுத் துறை, பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் இதர சட்டப்படி அதிகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கக்கூடிய ஒரு நட்புடன் கூடிய ஒரு தூய்மையான சுற்றுச் சூழலை உருவாக்கும், மலைமீது ஏறுவது போன்ற, மிகக் கடினமான இப்பணியை நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
இயற்கையினாலும், மனித செயல்பாடுகளாலும் ஏற்பட இருக்கும் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்துவது, அவற்றின் பாதிப்புகளைக் குறைப்பது என்ற எங்களது பெருமைக்குரிய இலக்கான கரிமக் காற்று இல்லாத ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உருவாக்குவதை இன்னும் இருபது ஆண்டு காலத்திற்குள் எட்ட முடியும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். மாசற்ற சுற்றுச் சூழலை உருவாக்குவதற்காக பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் 65 கிராமங்களைத் தத்து எடுத்துக் கொண்டுள்ளதும், தூய்மையான தஞ்சை நகரை உருவாக்குவது என்ற திட்டத்தையும், அதற்காக மரங்கள் நடுவது மற்றும் அது போன்ற தொடர்புள்ள இதர ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்வதும் கரிமக் காற்று சிறிதும் இல்லாத ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உருவாக்குவ தற்கான வழிமுறைகளாகும்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் நுழைவாயில்
உலகிலேயே முதன்முதலாக ஏற்படுத்தப்பட்ட பெண்களுக்கான பொறியியல் கல்லூரியாக இருந்தது என்ற பெருமையைப் பெற்றுள்ளது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம். இப்பல்கலைக் கழகம் இன்று கட்டடக் கலை, கல்வி, கலை, நிருவாகம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் என்ற பல்வேறு துறைகளைக் கொண்ட தாக விளங்குகிறது.
இந்த நுழைவாயில் வளைவின் சிறப்பு என்னவென்றால், ஆசியாவிலேயே உள்ள மிகப் பெரிய (40 மீட்டர் நீளம் கொண்ட) ஒரே வளைவைக்கொண்ட வளைவு இதுதான் என்பதாகும்.
வெறும் முட்புதர்கள் நிறைந்த கட்டாந்தரையாக இருந்த பல்கலைக்கழக வளாகம் இன்று பசுமை நிறைந்த சோலையாக விளங்குகிறது. இயற்கை யினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் அளவிலும், பல்வேறுபட்ட உயிர்களும், தாவரங்களும் செழித்து வளரும் இடமாக இன்று விளங் குகிறது.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் அமைந்துள்ள நிலப்பரப்பு இயற்கையான ஒளியும், காற்றோட்ட வசதியும் நிறைந்ததாக விளங்குகிறது.
முன்பு சூரிய வெப்பத்தினால் வெப்பம் நிறைந்து காணப்பட்ட பல்கலைக் கழக வளாகத்தில் இன்று ஓங்கி வளர்ந்த மரங்கள் வரிசையாக நீண்டு பாதையெங்கும் நிழல் தரும் வகையில் விளங்குவ துடன், வாகனங்களை வசதியாக நிறுத்துவதற்கு ஏற்ற இடமாகவும், மற்ற செயல்பாடுகளுக்கு ஏற்ற திறந்த வெளியாகவும் விளங்குகிறது.
நீர் பயன்பாட்டில் சிக்கனம் கடைப்பிடிக்கப் படுவதன் மூலம் திறமையான நீர் மேலாண்மையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நீர் சேமிப்பு (Water Conservation)
1.மழைநீர் சேகரிப்பு நீர்நிலை (Rainwater Harvesting well)
2.பயன்படுத்தப்பட்ட தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் குட்டை (Retention Pond)
3.பயன்படுத்தப்பட்ட தண்ணீரை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துதல்.(Grey Water Recycle)





5.நுண்பாசன முறை (Micro-irrigation)
மழை நீர் சேகரித்தல் போன்ற மாற்று நீர் ஆதாரங்கள் மூலம் தண்ணீரைச் சேமிப்பதை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வலியுறுத்துகிறது.
பல்கலைக் கழக நிலப் பரப்பில் பெய்யும் மழை நீரைச் சேகரிப்பதற்கு ஏற்ற வகையில் வடிகால்களும், குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஓராண்டில் சராசரி பெய்யும் மழையின் மூலம் 41, 884 முதல் 92,300 கனமீட்டர் அளவு நீரைச் சேகரித்து சேமிக்க முடியும்.
பயன்படுத்தப்பட்ட பின் சேமித்து வைக்கப் பட்ட தண்ணீர், மறுசுழற்சி முறையில் பல்கலைக் கழகத்தின் விவசாயத் தேவைகளுக்காகப் பயன் படுத்தப்படுகிறது. திறமை நிறைந்த நுண்பாசன முறை மற்றும் மூடாக்கு தொழில்நுட்பம் ஆகியவை கடை பிடிக்கப் படுகின்றன.
திறமையான ஒற்றை லீவர் குழாய்கள், கழிவறை வெளியேற்றுத் தொட்டிகள், இரட்டைக் குழாய்கள் போன்ற சிறந்த பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன. கழிவுகளிலிருந்து செல்வத்தைப் பெறுவது என்ற இலக்கில் கவனம் செலுத்தி, திடக்கழிவுகள் சேரும் இடங்களிலேயே பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
சுற்றுச் சூழல் நட்புடன் கூடிய ஜெனரேட்டர்கள் மட்டுமே பல்கலைக் கழக வளாகம் முழுவதிலும் பயன்படுத்தப்படுகின்றன.
திறமையான, சிக்கனமாக மின்னாற்றல் பயன் பாட்டுக்காக தரம் வாய்ந்த தாமிர மின் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
பல்கலைக் கழக வளாகத்தின் வளர்ந்து வரும் மின் ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் தனியான அதிக அழுத்தம் கொண்ட மின் நிலையம் வளாகத்தில் உள்ளது.
தொழில்நுட்பத்தில் அவ்வப்போது ஏற்படும் முன்னேற்றங்களை உடனுக்குடன் பயன்படுத்தும் பழக்கத்தைப் பல்கலைக் கழகம் பின்பற்றுகிறது. குழல் விளக்குகளுக்கு மாற்றாக சிஎஃப்எல் விளக்குகளும், அதன் பின் இப்போது எல்ஈடி விளக்குகளும் பயன்படுத்தப்படுவதை எடுத்துக் காட்டாகக் கூறலாம். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சேமிக்கப்படும் மின்னாற்றலின் அளவு 82 மெகாவாட் ஆகும்; இதன் மூலம் சேமிக்கப்படும் செலவினம் 1,37,808 ரூபாய்களாகும்.
மாற்று மற்றும் மறுசுழற்சி ஆற்றல் (Alternative and Renewable Energy)
மாற்று முறைகளாலும், மறு சுழற்சி மூலமும் மின்னாற்றல் தயாரிக்கப்படுதல் (Bio-mass Gasifier R&D unit)
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இலக்கு 2025 ஆம் ஆண்டுக்குள் அதன் கட்டடங்கள் அனைத்தும் மின்னாற்றல் தேவையில் தன்னிறைவு பெற்றதாக விளங்க வேண்டும் என்பதுதான்.
மாற்று முறைகளில் பல்கலைக் கழக வளாகத்துக்குள் தயாரிக்கப்படும் மின்னாற்றல் வளாகத்தின் தேவையை நிறைவு செய்யப் போது மானதாக உள்ளது.
இயற்கை எரிவாயுவிலிருந்து மின்னாற்றல் தயாரிக்கும் எங்களது கருவி 2000 கிலோவாட் அளவுக்கு மின்னாற்றலைத் தயாரித்தளிக்கிறது.
பல்கலைக் கழக மாணவர் விடுதிகளில் சூரிய ஒளி மூலம் மின்னாற்றல் தயாரிக்கும் உலோகத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மின்னாற்றல் செலவில் ரூ 67,000 ஆண்டுதோறும் சேமிக்கப் படுவதுடன், 10 டன் கரிமவாயு வெளியேற்றத்தையும் இது தடுக்கிறது.
வளாகத்தின் உள்ளே இருக்கும் நடை பாதைகளில் உள்ள மின்கம்ப விளக்குகள் சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்னாற்றலால் இயங்குபவை.
பல்கலைக் கழக மாணவர் விடுதிகளில் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்னாற்றல் நீரைச் சுட வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மின்னாற்றல் செலவு 1,65,000 ரூபாய் ஆண்டுதோறும் சேமிக்கப்படுவதுடன், 195 டன் கரிமக் காற்று வேளியேற்றத்தையும் இது தடுக்கிறது.
சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்னாற்றலைக் கொண்டு சமையல் செய்யும் வட்டமான குழிந்த பாத்திரத்தில் உணவு தயாரிக்கப்படுவதுடன், உயர்ந்த வெப்ப நிலையில் நீரைச் சூடாக்குகிறது.
மழைக் காலங்களில் மாணவர் விடுதிகளில் துவைக்கப்படும் துணிகளை உலர்த்தும் கருவிகளில் சூரிய ஒளியில் இருந்துதயாரிக்கப்படும் மின்னாற்றல் பயன் படுத்தப்படுகிறது.
பல்கலைக் கழக வளாகத்திற்குள் உள்ள வாகனங்களின் தேவைக்கான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் (டிஸ்டில்ட் வாட்டர்) சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்னாற்றல் மூலம் தயாரிக்கப்படுகிறது. உயிரியல் எரிவாயு நிலையத்தில் தயாரிக்கப்படும் எரிபொருள் விடுதி சமையல் அறைகளில் பயன் படுத்தப்படுகிறது.
சாணத்திலிருந்து உயிரியல் எரிவாயு தயாரிக்கும் கருவி
தண்ணீரை மேலேற்றுவதற்கு காற்றாலை பம்புகள் பயன் நிறைந்த வகையில் பயன்படுத்தப் படுகின்றன. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ 48,000 செலவினம் சேமிக்கப்படுவதுடன், 0.1 டன் கரிம வாயு வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
புதியதாக உருவாக்கப்படும் உயிரியல் எரிவாயு நிலையம் 60 கி.வாட் மின்னாற்றலைத் தயாரிக்கும். இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ 5,40,000 சேமிக்கப் படுவதுடன், 113.40 டன் கரிமவாயு வெளியேற்றமும் தடுக்கப்படுகிறது.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட மறுசுழற்சி முறையில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகள்
சூரிய ஒளி மின்னாற்றல் உதவியுடன் பல்கலைக் கழக வளாகத்துக்குள் பயணம் செய்வதற்கான வாகனம். இது பூமியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் கரிமக் காற்றை வெளியிடும் இரு சக்கர வாகனங்கள், கார்கள், வேன்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் பாட்டரியை மின்னாற்றலில் இருந்தும், சூரிய ஒளிக் கருவியில் இருந்தும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
மாற்றுத் திறனாளி களுக்கான வாகனம்
இது மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கப்படும் மின்னாற்றலால் இயங்கக் கூடிய வாகன மாகும். 120 கிலோ எடை வரை சுமக்க இயன்ற இது, மணிக்கு 25 கி.மீ. வரை வேகமாக செல்லும். ஒரு முறை இதன் பாட்டரி சார்ஜ் செய்யப்பட்டால், 45 கி.மீ. வரை பயணிக்கலாம்.
மறுசுழற்சியும் மறுபயன்பாடும் (Recycling and Reuse)
=மறுசுழற்சி முறையில் காகிதம் தயாரித்தல் (Paper Recycling Unit)
=மறுசுழற்சி முறையில் காகிதம் தயாரிக்கும் பெரியார் பிரிவு ஒன்று பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தில் உள்ளது.
=மறுசுழற்சி முறையில் காதிதம் தயாரிப்பதற்குத் தேவையான கச்சாப்பொருள் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கிடைக்கும் பழைய காகிதமாகும். காகிதத்தின் தரத்தை மேம்படுத்த பருத்தித் துணிக் கழிவுகளும் அத்துடன் சேர்க்கப்படுகின்றன.
=இந்த மறுசுழற்சி முறையில் ஆண்டு தோறும் 2 டன் காகிதம் தயாரிக்கப்படுகிறது. இதன் விளைவாக 300 கனஅடி மரக்கூழ் சேமிக்கப்படுகிறது.
=மறுசுழற்சி முறையில் தயாரித்துப் பயன்படுத்துதல்
=நமது கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் ஹாலோ செங்கற்கள், இன்டர்லாக்கிங் செங்கற்கள், பேவர் செங்கற்கள் போன்ற மாற்றுக் கட்டுமானப் பொருள்கள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப் படுகின்றன.
=இந்தத் தொழில் நுட்பம் மூலம் காடு அழிக்கப் படுவதும், மண் அரிப்பும் தவிர்க்கப்படுகிறது. இதன் மூலம் 36,337 டன் மரமும், 7,46,980 கன அடி வளம் வாய்ந்த நில மேல் மண்ணும் பாதுகாக்கப்படுகின்றன.
=சிமெண்ட் அற்ற சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கற்களும், வழக்கமாகத் தயாரிக்கப்படும் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கற்களைப் போன்று அதே அளவுக்கு கட்டுமானத்திற்கு தரம் சேர்ப்பவையாகும். அதே நேரத்தில் 7.2 டன் கரிமக் காற்று வெளிப்படுவதை இது தடுக்கவும் செய்கிறது. இதனால் சுற்றுச் சூழல் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள இயற்கைத் தாவரங்கள் (Natural Vegetation in PMU)
=அழிந்து வரும் தாவர இனங்கள் மற்றும் மூலிகைத் தாவரங்கள் டிஷ்யூ கல்சர் தொழில் நுட்ப முறையின் உதவியால் உருவாக்கப்பட இயலும். அத்துடன் தரமான விதைகள் டி.சி. பிளான்ட் மய்யத்தில் தயாரிக்கப் படுகின்றன.
=பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் 4500 வகையான தாவர இனங்களும், 26,000 மரங்களும், அழிந்து வரும் சில மரவகைகளும் உள்ளன. இத்தகைய அடர்ந்து பரவியுள்ள தாவரங்கள், நாள் ஒன்றுக்கு, 1.6 டன் கரிமக் காற்றை நாள்தோறும் எடுத்துக் கொண்டு, 8.4 டன் உயிர்க் காற்றை வெளிவிடுகின்றன. =தூய்மை மேம்பாட்டுச் செயல்திட்டம் மற்றும் கரிமக் காற்றை முற்றிலும் ஒழிக்கும் செயல் திட்டம் ஆகியவற்றை நோக்கி நாங்கள் நடைபோடுகிறோம் என்பதை இது மெய்ப்பிக்கிறது.
கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புற வசதிகளை அளிக்கும் பெரியார் செயல்திட்டத்தின் இதயம் (Heart of periyar PURA)
=கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புற வசதிகளை அளிக்கும் பெரியார் செயல்திட்டத்தின் மய்ய நரம்பு மண்டலம் போன்ற பகுதி அச்சம்பட்டி கிராமமாகும். எங்கள் பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் அக்கிராம விவசாயிகளினால்,அங்கிருந்த 100 ஏக்கர் தரிசு நிலம் மாற்றப்பட்டு இன்று வளம் கொழிக்கும் விளை நிலமாக விளங்குகிறது.
=தேக்கு, கருங்காலி, ரோஸ், வேங்கை போன்ற மரங்களும், தென்னை, மா, பலா, சப்போட்டா போன்ற ஆயிரக்கணக்கான மரங்களும், அமிலா மற்றும் ஆலிவோரா போன்ற மூலிகைச் செடிகளும் அடர்ந்த தாவரங்களைத் தன்னைச் சுற்றி கொண்டிருக்கும் கிராமம் அச்சம்பட்டி.
=இந்த விவசாயப் பண்ணையைப் பாதுகாப்பதற்காக, சூடான் முட்புதர் கொண்ட அருமையான இயற்கை வேலி ஒன்றும் போடப்பட்டுள்ளது.
=இப்பண்ணையில் அளவுக்கு அதிகமான தேங்காய்கள் காய்க்கின்றன. இவற்றை நமது மாணவர் விடுதிகளில் பயன்படுத்திக் கொள்ளப்படுவதுடன், வெளியில் விற்பனையும் செய்யப்படுகிறது. பொதுவாக தென்னந் தோப்பிற்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். ஆனால் சொட்டு நீர்ப் பாசனம் போன்ற முறைகளைக் கையாண்டு குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தியே இந்த தென்னந்தோப்பைப் பராமரித்து வருகிறோம்.
=விவசாயிகள், தோட்டக்காரர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு உருவாக்கியது பெரியார் உயிரியல் பண்ணையாகும். அதன் சுற்றுப் புறத்தில் வாழும் எண்ணற்ற மக்களுக்கு இப்பண்ணை வேலை வாய்ப்பை அளித்துள்ளது.
=இந்தநிலத்தின் மதிப்பும், இதன் சுற்றுப் புறத்தில் உள்ள சமூக பொருளாதார மதிப்பீடுகளும் ஏக்கர் ஒன்று ரூ 12,500 என்பதில் இருந்து, இந்தப் பதினைந்து ஆண்டு காலத்தில் ஏக்கர் ஒன்று 10 லட்ச ரூபாய் என்ற அளவிற்கு இன்று உயர்ந்துள்ளது.
=அச்சம்பட்டியைச் சுற்றியுள்ள பண்ணைகளின் மேம்பாட்டுக்காக எமது தொழில் நுட்ப அறிவு அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
நுண்ணுயிர் உரத் தயாரிப்பு (Organic Culture)
இயற்கை உரங்களைக் கொண்டே இந்தப் பண்ணையில் உள்ள அனைத்து தாவரங்களும் வளர்க்கப் பட்டன. மண்புழு உரம் போன்ற இயற்கை மற்றும் உயிரியல் உரங்கள் இப் பண்ணையில் பயன்படுத்தப்பட்டன.
கரிமக் காற்று வெளியேற்றம் குறைக்கப்பட்டது
(சுநனரஉவடி டிக நுஅளைளடி) வரி கரிமக் காற்று வெளியேற்றம் குறைக்கப்பட்ட குறைக்கப்பட்ட வழி முறை கரிமக் காற்றின் அளவு டன் (ஆண்டுக்கு) 1 மறுசுழற்சி மின்னாற்றல் 219.76 2
மாற்று மின்னாற்றல் 332.14 3 மாற்று கட்டுமானப் பொருள்கள் 21,802.78 4 காடுகள் அழிப்பு 482.90 5 எல்.ஈ.டி./ சி.எப்.எல். விளக்குகள் 86.39

மொத்தம் 22,923.96

2025 ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கிய எங்களது உடனடி செயல்திட்டம்
=மின்னாற்றல் சேமிப்பு கட்டுமான விதிகளின் முக்கிய இலக்கின்படி, மிகக் குறைந்த அளவில் மின்னாற்றல் தேவைப்படும் முறையில் மட்டுமே எங்களது எதிர்காலக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் மிகுந்த திறமையுடன் மேற்கொள்ளப்படும்.
=மின்னாற்றல் சேமிப்பு கட்டுமான விதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள யு காரணி மற்றும் ஆர் காரணிகளால் பாதுகாக்கப்பட்ட கூரைகளைக் கொண்டே எங்களது எதிர்காலக் கட்டுமானங்கள் அனைத்தும் அமையும்.
=மற்ற விளக்குகளைப் போல் அல்லாமல் எல்.ஈ.டி. விளக்குகள் குறைந்த மின்னாற்றலை மட்டுமே பயன்படுத்திக் கொள்வதுடன், குறைந்த அளவு வெப்பத்தையே வெளிவிடுகிறது. அவற்றில் நச்சுப் பொருளான பாதரசம் இருப்பதில்லை.
=எரிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பொருள்களை மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவது பல்கலைக் கழக வளாகத்திற்குள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
=நோய் தடுப்பாற்றல் கொண்டவை என்று சோதனை மூலம் ஆராய்ந்த பிறகு மூங்கில், கரும்பு மற்றும் வாழை போன்ற கன்றுகளை டிஷ்யூ கல்சர் மூலம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று நிறுவப்படும்.
=கடற்பாசி பூசப்பட்ட கட்டடங்கள் கரிமக் காற்றை கிரகித்துக் கொள்கின்றன.
=வயல்களில் எஞ்சி நிற்கும் நெற்கதிர்களின் அடிப்பாகம் நுண்ணுயிர்களால் அழிக்கப்படுவதற்கு அனுமதித்தல், அவை எரிக்கப்படுவதால் வெளிப்படுத்தப் படும் இயற்கை எரிவாயுவைக் குறைக்கும்.
2025 ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கிய எங்களது உடனடி செயல்திட்டம்
=பூச்சிக் கொல்லிகளுக்கு மாற்றாக உயிர்பூச்சிக் கொள்ளிகளை மேம்படுத்துவது
=பல்கலைக் கழக வளாகத்துக்கள் தேனீ வளர்த்தல் கரிமக் காற்று வெளிப்படுவதைக் குறைக்கும்
=வழக்கமான டீசல், பெட்ரோலுக்கு மாற்றாக வாகனங்களுக்கு இயற்கை எரிவாயுவும், தாவர டீசலையும் பயன்படுத்துதல்.
=மின்னாற்றலை சேமிக்கும், கரிமக் காற்று போன்ற கழிவுகளைக் குறைவாக வெளியேற்றும், காற்றாலை, சூரிய ஒளி மின்னாற்றல் தயாரிப்பு, எரிபொருள் செல், ஆற்றலை சேமிக்கும் காடு வளர்க்கும் திட்டம் போன்ற திட்டங்களை ஆதரிப்பது.
=சூடாக்குவது, குளிர வைப்பது, விளக்கெரிப்பது போன்றவைகளுக்குத் தங்களுக்குத் தேவையான மின்னாற்றலைத் தாங்களே தயாரித்துக் கொள்ள இயன்ற வகையில் சூரிய ஒளி மூலம் மற்றும் மாற்று முறையில் மின்னாற்றலைப் பரவலாகத் தயாரித்துப் பயன்படுத்தல்.
=கரிமக் காற்று வெளியேற்றத்தைக் குறைக்கும் பணியில் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
=கூடுமானவரை நடந்து செல்வதையோ, சைக்கிளில் செல்வதையோ வழக்கமாகக் கொள்ளுதல். தவிர்க்க இயலாதபோது பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தல்.
=மறுமதிப்பீடு செய்தல், குறைத்தல், மறுபடியும் பயன்படுத்தல், புதுப்பித்தல், மறுசுழற்சி ஆகிய 5 கொள்கைளைக் கடைப்பிடித்தல்.
முடிவுரை
ஒத்த கருத்துடைய அமைப்புகள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களின் தொழில் திறமைகளை எங்களுக்கு அளித்து உதவி, ஆரோக்கியமான, தூய்மை நிறைந்த சுற்றுச்சூழலை மேம்படுத்திப் பாதுகாக்க முன்வரவேண்டும் என பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உண்மையாக விரும்புகிறது.

தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன்னாட்டு மாநாடு

  • பல்கலை. வேந்தர் கி. வீரமணி தலைமை வகித்து உரையாற்றினார்
  • இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சிறப்புரையாற்றினார்

வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன்னாட்டு மாநாடு மலர் வெளியிடப்பட்டது. பதிவாளர் மு. அய்யாவு, இணைவேந்தர் வீகேயென் கண்ணப்பன், துணைவேந்தர் நல். இராமச்சந்திரன், வேந்தர் கி. வீரமணி, மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், விஞ்ஞானி ஆ. சிவதாணுபிள்ளை, டாக்டர் எம்.எஸ். பழனிச்சாமி ஆகியோர் உள்ளனர்.


வல்லம், ஜூலை 27- வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன் னாட்டு மாநாடு மற்றும் கருத்துக் காட்சி தொடக்க விழா பெரியார் மணி யம்மை பல்கலைக் கழ கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மற்றும் பல அறிஞர் பெருமக்களும், அமெ ரிக்கா, கனடா நாட் டைச் சேர்ந்த பேராளர் களும் பங்கேற்றனர்.

வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன் னாட்டு மாநாடு மற்றும் கருத்துக் காட்சித் தொடக்க விழா 27.7.2011 அன்று காலை 11.30 மணிக்கு தஞ்சை வல்லத் தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் உள்ள பன் னோக்கு உள் விளை யாட்டு அரங்கில் மிகச் சிறப்பாகத் தொடங்கி நடைபெற்றது.

இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரை யும் பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்நுட் பக் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் எம்.எஸ். பழனிச்சாமி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் வீகேயென் கண்ணப் பன் ஆகியோர் முன் னிலை வகித்து உரை யாற்றினர்.

டாக்டர் கி. வீரமணி

பெரியார் மணி யம்மை பல்கலைக் கழ கத்தின் வேந்தர் டாக்டர் கி. வீரமணி இவ்விழா விற்குத் தலைமை வகித்துப் பேசினார்.

இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் மாநாடு மற்றும் கருத் துக் காட்சியினைத் தொடங்கி வைத்து விழா நிறைவுப் பேருரையாற் றினார்.

டாக்டர் சிவதாணுபிள்ளை

புதுடில்லி பாதுகாப்பு அமைச்சகம் பிரமோஸ் ஏவுகணைத் திட்டம் ஆராய்ச்சி மற் றும் வளர்ச்சி, தலை மைக் கட்டுப்பாட்டா ளர் விஞ்ஞானி டாக்டர் ஆ. சிவதாணுபிள்ளை கார்பன் சமநிலைபற்றிய பல்கலைக் கழக ஆவ ணத்தை வெளியிட்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மிகத்திரளான மாணவ, மாணவிகள் மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற முக்கிய நாட்டுப் பேராளர்கள், பேரா சிரியர்கள் பங்கேற்றனர்.


மத்திய அரசின் நிதி உதவியுடன் பல்வேறு கழிவு பொருள்களிலிருந்து உயிரி எரிசக்தியையும், மின்சக்தியையும் உருவாக்குகின்ற ஆராய்ச்சி நிலையத்தை மகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்தார் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம். முன்னதாக வேப்பமரக்கன்றையும் நட்டார்.

Wednesday, July 27, 2011

இன்றைய விடுதலை செய்திகள் - 27/07/2011

தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன்னாட்டு மாநாடு

தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன்னாட்டு மாநாடு

பல்கலை. வேந்தர் கி. வீரமணி தலைமை வகித்து உரையாற்றினார் இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சிறப்புரையாற்றினார் வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன்னாட்டு மாநாடு மலர் வெளியிடப்பட்டது. பதிவாளர் மு. அய்யாவு, இணைவேந்தர் வீகேயென் கண்ணப்பன், துணைவேந்தர் நல். இராமச்சந்திரன், வேந்தர் கி. வீரமணி,

  • தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தடை

    உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜூலை 27- தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை…

  • பத்மநாப சுவாமி கோவிலில் பாதுகாப்பு கெடுபிடி: பக்தர்கள் செல்ல தடை

    திருவனந்தபுரம், ஜூலை 27- பத்மநாப சுவாமி கோவிலில் நிலவறை கள் அருகே உள்ள…

  • தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தடை

    உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜூலை 27- தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை…

  • பத்மநாப சுவாமி கோவிலில் பாதுகாப்பு கெடுபிடி: பக்தர்கள் செல்ல தடை

    திருவனந்தபுரம், ஜூலை 27- பத்மநாப சுவாமி கோவிலில் நிலவறை கள் அருகே உள்ள…

    தி.மு.க. போராட்டத்தில் குதிக்கிறது!

    Image - தி.மு.க. போராட்டத்தில் குதிக்கிறது!

    சமச்சீர் கல்வியைப் புறக்கணிப்பதா? ஜூலை 29: பள்ளிகள், கல்லூரிகளைப் புறக்கணிப்பீர்! சென்னை, ஜூலை 27- சமச்சீர் கல்வியை இவ் வாண்டு அமல்படுத்தா மல் புறக்கணிக்கும் அ.தி. மு.க. அரசை

    எடியூரப்பா பதவி தப்புமா?

    Image - எடியூரப்பா பதவி தப்புமா?

    பெங்களூரு, ஜூலை 27- கருநாட காவில் சுரங்க குவாரி மோசடி தொடர் பான லோக் அயுக்தா அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வர் எடியூரப்பா மீ

    ரேஷ் கல்மாடிக்கு சிகிச்சை

    Image - சுரேஷ் கல்மாடிக்கு சிகிச்சை

    புதுடில்லி, ஜூலை 27- காமன்வெல்த் விளை யாட்டு போட்டி ஏற் பாடுகளில் பல நூறு கோடி ரூபாயை சுருட் டிய ஒலிம்பிக் சங்க முன் னாள் தலைவர் சு

    பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி டில்லி வந்தார்

    Image - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி டில்லி வந்தார்

    புதுடில்லி, ஜூலை.27- பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப் பானி நேற்று டெல்லி வந்தார். அவர் இன்று (புதன்கிழமை) வெளி யுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பே

    விநாயகன் சிலைகளை அகற்ற வலியுறுத்தி குமரி மாவட்ட தி.க. புகார்

    கன்னியாகுமரி மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகன் சிலைகளை அகற்ற வலியுறுத்தி குமரி மாவட்ட தி.க. புகார் கன்னியாகுமரி, ஜூலை 27-கன்னி யாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட


  • குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...