உச்சநீதிமன்றத்தில் முறையிட இம்ரான் முடிவு
‘பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசாரப் உடலை
இழுத்து வந்து மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விட வேண்டும்,’ என்று தீர்ப்
பளித்த நீதிபதியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் பர்வேஸ்
முசாரப் மீதான தேசத் துரோக வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு
நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதற்கு ராணுவம் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெசாவர் உயர் நீதிமன்ற தலைமை
நீதிபதி வக்கார் அகமது சேத் தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் அளித்த
தீர்ப்பின் முழு விவரம் நேற்று முன்தினம் வெளியானது. அதில், ‘துபாயில்
பதுங்கி இருக்கும் முசாரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் எப்படியாவது பிடித்து
வந்து தூக்கில் போட வேண்டும். அப்படி செய்யும் முன்பாக, அங்கேயே அவர்
இறந்து விட் டால், அவருடைய உடலை இழுத்து வந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள
ஜனநாயக சதுக்கத்தில் மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விட வேண்டும்,’ என
கூறப்பட்டுள்ளது.
இந்த அதிரடியான தீர்ப்பு, பாகிஸ் தான்
அரசை அதிர்ச்சியில் அலற வைத் துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பிரதமர்
இம்ரான்கான் தலைமையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்துக்குப் பின் பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரோக் நசீம் அளித்த
பேட்டியில், ‘‘முசாரப் உடலை பொது இடத்தில் மூன்று நாட்கள் தூக்கில் தொங்க
விட வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ள நீதிபதி வக்கார் அகமது சேத்,
நீதிபதியாக பணியாற்ற தகுதியற் றவர். மனநிலை பாதித்துள்ள அவர், இப்பதவியில்
நீடிக்க தகுதியற்றவர். முசாரப்புக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை, பாகிஸ்தான்
சட்டத்துக்கு எதிரானது. நீதிபதி சேத்தை பதவி நீக்கம் செய்யும்படி, உச்ச
நீதிமன்ற நீதி குழு விடம் அரசு முறையிட முடிவு செய்துள் ளது. இதுபோன்ற
நபர்கள் உச்ச நீதி மன்ற, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக் கக் கூடாது,’’
என்றார்.
பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்டு,
துபாய் மருத்துவமனையில் முசா ரப் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு
அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து, மருத்துவமனையில் படுத்தப்படி அவர் பேசிய
காகொணலியை அவரு டைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெளியிட்டுள்ளது.
அதில் அவர், ‘என் மீதான தேசத் துரோக
வழக்கை, விசாரணைக்கு ஏற்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஆனால்,
என்மீது சிலருக்கு உள்ள தனிப்பட்ட பகையின் காரணமாக, இது விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப் பட்டது. அதனால், எனது தரப்பு நியா யங்களை கேட்க
நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆனால், நீதி வெல்லும் என்ப தில் எனக்கு
மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு துணை நிற்கும் பாகிஸ்தான்
ராணுவத்துக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment