சென் னை புத்தகக் கண்காட்சி, நந்தனம்,
ஒய்.எம்.சி.ஏ., மைதா னத்தில், ஜனவரி, 9இல் துவங் குகிறது.தென்னிந்திய
புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான, 'பபாசி'
சார்பில், 43ஆவது சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,
மைதானத்தில், ஜனவரி, 9இல் துவங்கி, 21ஆம் தேதி வரை, 13 நாட்கள் நடைபெற
உள்ளது.
தள்ளுபடிகண்காட்சியில், 700 அரங்குகளில்,
15 லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட
புத்தகங்கள் இடம் பெற உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீத
தள்ளுபடி வழங்கப்படும். வேலை நாட்களில், பிற்பகல், 3:00 மணிக்கும்,
விடுமுறை நாட்களில், காலை, 11:00 மணிக்கும் புத்தக கண்காட்சி தொடங்கும்.
அனைத்து நாட்களிலும் இரவு, 9:00 மணிக்கு
முடியும்; நுழைவு கட்டணம், 10 ரூபாய்.இது குறித்து, பபாசியின் தலைவர்,
ஆர்.எஸ்.சண்முகம், செயலர், எஸ்.கே.முருகன், பொருளாளர் ஆ.கோமதிநாயகம்
உள்ளிட்டோர், நேற்று முன்தினம் கூறியதாவது: சென்னையில், மாணவர்களிடம்
புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை துண்டும் வகையில், ஜனவரி, 6 காலை, 10:00
மணிக்கு, 'சென்னை வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சியை, ஒய்.எம்.சி.ஏ.,
மைதானத்தில் நடத்த உள்ளோம். அதில், அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள்
பங்கேற்க உள்ளனர்.மாணவர்களின் படைப் பாற்றலை வெளிக்கொணரும் வகையில்,
போட்டிகள் நடத்தி, பரிசுகளும், பாராட்டு சான்றிதழ் களும்
வழங்கப்படும்.வாசகர்களுக்கு தமிழரின் பழமையான நாகரிகத்தையும்,
திருக்குறளின் பெருமையையும் உணர்த்த, 'கீழடி - ஈரடி' என்ற, முப்பரிமாண
கண்காட்சியை, தமிழக தொல்லியல் துறையுடன் இணைந்து நடத்த உள்ளோம்.
புத்தகக் கண்காட்சியின் மேடையில்,
தினமும் புத்தக வெளியீடுகள், படைப்பாளர்கள், அறிஞர்களின் நிகழ்ச்சிகளும்,
குறும்படங்கள் திரையிடலும் நடைபெறும்.
சென்னை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு,
இலவச நுழைவு சீட்டுகள் வழங்கப்படும். மெட்ரோ ரயில் பாஸ்
வைத்திருப்போருக்கு, இலவச அனுமதி வழங்கப்படும். இணையம் வழியாகவும்
நுழைவுச்சீட்டு பெற முடியும்.
கண்காட்சி அரங்கில், மாற்றுத்
திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்; மைதானத்தில், ஏ.டி.எம்., மய்யங்கள்;
அரங்குகளில், கிரெடிட் கார்டுகளின் வழியே புத்தகம் வாங்கும் வகையில்,
பி.ஓ.எஸ்., கருவிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். இவ்வாறு,
அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment