அரசு விளம்பரமும் நடிகையின் படம் நீக்கமும்
திருத்தப்பட்ட
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுட்டுரையில் பதிவிட்டதால் பெண் குழந்தை
யைக் காப்போம் விளம்பரத் தில் இருந்து நடிகை பரிணீதி சோப்ரா நீக்கப்பட்டார்
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு
நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க் கட்சிகள் மட்டுமே இதை
எதிர்த்து குரல் கொடுத்து வந்த வேளையில் அசாம் மாணவர் சங்கம் போராட்டத்தைத்
தொடங் கியது. அந்த போராட்டம் பல மாநிலங்களுக்கும் பரவி பல இடங்களில்
வன்முறை வெடித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம்
அமல்படுத்தப்பட்டுள் ளது.
தற்போது இந்த சட் டத்தை எதிர்த்துப் பல
பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதை அடக்க அரசு நடவடிக்கை
எடுத்து வருவதாகத் தகவல் கள் வருகிறன. அவ்வகையில் சாவ்தான் இந்தியா
என்னும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக் கொண்ட நெறியா ளர் சுஷாந்த் சிங்
சட்ட எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டதை அடுத்து அவர் அந்நிகழ்வில்
இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரியானா மாநிலத்தில் மத்திய அரசின் அபிமான
திட்டமான பெண் குழந்தை களைக் காப்போம் விளம்ப ரத்தில் புகழ்பெற்ற நடிகை
யான பரிணீதி சோப்ரா பங்கேற்று வருகிறார். அவர் சமீபத்தில் இந்த புதிய சட்
டத்தை எதிர்த்து தனது சுட் டுரையில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்த பதிவுக்காக அவரை விளம்பரத்தில்
இருந்து அரி யானா அரசு நீக்கி உள்ளது. ஆனால் இது குறித்து அரசு தரப்பில்
கூறப்படும் போது அவரது விளம்பரம் தொடர் பான ஒப்பந்தம் முடிந்துவிட் டது,
மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நிலையில் இந்த முடிவெடுத்
துள்ளோம் என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment